சிங்க‌ப்பூர்

கொவிட்-19 கிருமித்தொற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், மருத்துவமனைகளில் மீண்டும் முன்னைய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
கரிம ஊக்கப் புள்ளிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமல்படுத்த சிங்கப்பூரும் பாப்புவா நியூ கினியும் இணங்கியுள்ளன.
ஒரு வயது குழந்தையைப் பலமுறைத் தாக்கியதாக 40 வயது பெண் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தத் தாக்குதலால் சிறுமியின் சருமத்திற்குக்கீழ் ரத்தக்கசிவு ஏற்படுத்தும் எக்சிமோசிஸ் பிரச்சினை ஏற்பட்டது.
துபாய்: நாடுகள் தங்களுக்கு ஏதுவான சூழ்நிலையிலிருந்து வெளியேறி, மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காப்28 அமைப்பின் தலைவரான சுல்தான் அல்-ஜபேர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்தார்.
அங் மோ கியோ ஹப்பில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி, முதிய தம்பதியர் தங்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வேறு இடத்தில் நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்தச் சாதனங்கள் ஆபத்து விளைவிக்கும் விதத்தில் நிறுத்தப்பட்டிருந்ததே அதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.