You are here

சிங்க‌ப்பூர்

‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ மோசடி மறுஆய்வுக்கு புதிய பணிக்குழு

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் மோசடி குறித்து மறுஆய்வு மேற் கொள்ள பல அமைப்புகளைக் கொண்ட புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பண மோச டியைக் கண்டுபிடிக்கும் திட்டத்தை எப்படி மேம்படுத்தலாம் என இந்த பணிக் குழு ஆராயும் என்று கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் ஒரு நல்ல, செயல் திறன்மிக்க, தகவல் பகுத்தறியும் திட்டம் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டுக்குள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தரவு பகிர்வு: புதிய சட்டம்

சிங்கப்பூரர்களின் தனிப்பட்ட தக வல்களை அவர்களின் அனுமதி யின்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொதுத்துறை அதி காரிகளுக்கு $5,000 வரை அப ராதம், இரண்டு ஆண்டு வரை சிறை அல்லது இரண்டும் தண்ட னைகளாக விதிக்கப்படக்கூடும். தரவுகளைத் தங்கள் சொந்த நல னுக்காகப் பயன்படுத்தி கொள் வோருக்கும் இது பொருந்தும். நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட பொதுத்துறை (ஆளுமை) மசோதா, தரவுகளுக்கு விழையும் அமைப்புகளுக்கு அவற் றைப் பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது என்று கூறுகிறது.

புத்தாக்கத்தைப் பரிசோதிக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இந்தியாவில் வாய்ப்பு

சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனங் கள், தங்கள் புத்தாக்கங்களை இப்போது இந்தியாவில் முன்னோடி திட்ட அடிப்படையில் பரிசோதித் துப் பார்க்கமுடியும். அதன் மூலம் அவை இந்திய தொழில்நுட்ப நிறு வனங்களின் தலைசிறந்த நடை முறைகளைக் கற்றுக்கொள்ளலாம். ‘ஐஇ’ எனப்படும் இன்டர்நேஷ னல் என்டர்பிரைஸ் அமைப்பிற்கும் இந்திய தொழில்துறைக் கூட்ட மைப்புக்கும் இடையில் நேற்று கையெழுத்தான புரிந்துணர்வுக் குறிப்பைத் தொடர்ந்து சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டுகிறது.

குடியிருப்பாளர்கள் வடிவமைத்த முதல் விளையாட்டுத் திடல்

படம்: சாவ்பாவ்

பொதுமக்கள் வடிவமைத்துக் கட் டிய விளையாட்டுத்திடல் செம்ப வாங் குளோசில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு திடல் அமைக்கும் பணி தொடங்கியது. மரவீடு, குச்சிகளைக் கொண்டு அமைக்கப் படும் மீன்பிடி வசதிகளான கெலோங் போன்ற வடிவமைப்பு களைக் கொண்ட விளையாட்டுத் திடலை கேன்பரா வீடமைப்புப் பேட்டையின் குடியிருப்பாளார்கள் உருவாக்கியுள்ளனர்.

விரைவுச்சாலையில் எரிந்த பேருந்து

மரினா கோஸ்டல் விரைவுச்சாலை யில் நேற்று பிற்பகலில் தனியார் பேருந்து ஒன்றில் தீப்பற்றியது. காலாங்=பாய லேபார் விரைவுச் சாலையை நோக்கிய ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலை வெளிவழியில் இவ்விபத்து நிகழ்ந்ததாக பிற்பகல் 2 மணியளவில் நிலப் போக்கு வரத்து ஆணையத்தின் டுவிட்டர் தெரிவித்தது. அதன் காரணமாக ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலை வெளிவழி போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக வும் அது குறிப்பிட்டது. இது பற்றி தங்களுக்கு 2 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. பேருந்தின் இயந் திரப் பகுதியில் பற்றி எரிந்த தீயை அதிகாரிகள் அணைத்துவிட்டதாக வும் அப்படையின் பேச்சாளர் தெரி வித்தார்.

கோ: பதிலை எதிர்பார்த்துதான் ஃபேஸ்புக்கில் கருத்திட்டேன்

சிங்கப்பூரின் 4ஆம் தலைமுறை தலைவர்களிடமிருந்து பதில் நடவடிக்கையை எதிர்பார்த்துதான் தாம் சிங்கப்பூரின் அடுத்த பிரதமரை விரைவில் தேர்ந் தெடுக்க வேண்டியதன் முக்கியத் துவம் குறித்து ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பதிவிட்டதாக ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் அவசரம் குறித்தும் புத்தாண்டிற்கு முதல் நாள் தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதிவிட்டிருந் தார்.

பிடாடாரி எஸ்டேட்டில் 3 புதிய சாலைகள்

பிடாடாரி எஸ்டேட் வீடமைப்புப் பேட்டையில் மூன்று புதிய சாலை களின் சில பகுதிகள் இம்மாதம் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. பிடாடாரி பார்க் டிரைவ், அல்காஃப் கிரெசண்ட், உட்லி லிங்க் ஆகியவை அந்த சாலைகள். பிடாடாரியின் முக்கிய போக்கு வரத்து பிரதான சாலையாக பிடாடாரி பார்க் டிரைவ் விளங்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது. முழுமையாக திறக்கப்பட்டவுடன் பார்ட்லி சாலைக்கும் அப்பர் சிராங்கூன் சாலைக்கும் இடையே அந்தச் சாலை இணையும். புதிய போக்குவரத்து விளக்கு கள் அந்தப் புதிய சாலைகளில் பொருத்தப்படும்.

10 எம்ஆர்டி நிலையங்களில் குறுகிய கால சேவை

எம்ஆர்டி கிழக்கு-மேற்கு பாதை யில் ரயில் பராமரிப்புப் பணிகளுக் காகவும் மேம்பாட்டுப் பணிகளுக் காகவும் நேற்று முன்தினம் இரவிலிருந்து கிழக்கு பகுதியி லுள்ள 10 நிலையங்களில் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பாய லேபார் முதல் பாசிர் ரிஸ் வரையிலும் சாங்கி விமான நிலையம், எக்ஸ்போ நிலையம் ஆகியவற்றின் செயல்பாட்டு நேரம் வார இறுதிகளில் குறைக் கப்படும்.

தாம்சன் சாலையில் மோதிக்கொண்ட இரு கார்கள்

தாம்சன் சாலை-=தோ பாயோ ரைஸ் சந்திப்பில் இரண்டு கார்கள் நேற்று காலை மோதிய சம்பவத்தில் 48 வயது கார் ஓட்டுநர் காய முற்றார். அந்த ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சாலைச் சந்திப்பில் கார்கள் மோதியதால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டதாக அந்த வழியே சென்ற பாதசாரி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். நேற்று காலை சுமார் 9.50 மணிக்கு அந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் கூறினர்.

Pages