You are here

சிங்க‌ப்பூர்

வீவக கட்டுமான தளத்தில் தவறி விழுந்த ஊழியர் மரணம்

கேன்பரா ஸ்திரீட்டில் உள்ள வீவக கட்டுமானத் தளத்தில் தவறி விழுந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ‘ஈஸ்ட்கிரீட்@கேன்பரா’ திட்டத் தின் கீழ் அங்கு அடுக்கு மாடி வீடுகளைக் கட்டி வருகிறது. இங்கு பணியாற்றி வந்த ஊழியர், கட்டடத்தின் 13வது மாடி யில் தூண்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்தார் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது. கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் நிகழ்ந்த சம்பவத்தில் ஊழியர் பாதுகாப்பு சாதனங்களை அவர் அணிய வில்லை என்று நம்பப்படுகிறது.

‘வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வு’

கடற்பாலத்தையடுத்து எந்தத் தரப்பில் என்ன நடந்தாலும் அது மற்றதை பாதிக்கும் என்று மலேசிய தேர்தலை சுட்டிக் காட்டிய ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், மலேசியாவுக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். “அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துகிறோம். மகாதீர் மற்றும் புதிய அரசாங்கத்துக்கு எங்களுடைய நல்லெண்ணத் தையும் நட்பையும் வழங்கு கிறோம்,” என்று திரு கோ சோக் டோங் கூறினார்.

சாலையின் நடுவே தவித்த நாயைக் காப்பாற்றிய ஆடவர்

அப்பர் தாம்சன் ரோட்டில் வாகனத்தை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த ஆடவர், சாலையின் நடுவே நாய்க்குட்டி ஒன்றை கண்டு அதனைக் காப்பாற்றினார். அவர் தமது வாகனத்திலிருந்து வெளியேறி, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த நாய்க்குட்டியைத் தூக்கிச் சாலைக்கு வெளியே விட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். வாகனம் ஒன்றுக்குள் இருந்த கண்காணிப்புக் கேமரா ஒன்றில் சம்பவம் காணொளியாகப் பதிவானது. அந்தக் காணொளி, சமூக ஊடகங்களில் இதுவரை 30,000க்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. 200 முறைக்கு மேல் அது பகிரப்பட்டுள்ளது. ஆடவரின் பரிவான செயல் குறித்து இணையவாசிகள் பலர் பாராட்டினர்.

டிரம்ப்-கிம் சந்திப்பு இங்கு நடைபெறும் சாத்தியம் அதிகம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுடனான உச்சநிலை மாநாடு, இரு கொரியாக்களுக்கும் இடையிலான ராணுவமற்ற பகுதி­யில் நடைபெறாது என்று அறி­வித்திருக்கிறார். எனவே, சிங்கப்­பூரில் அந்தச் சந்திப்பு நடை பெறு­வதற்கான சாத்தியம் வலு­வாக உள்ளதாக அண்மை தக­வல்கள் கோடிகாட்டுகின்றன.

அறிவார்ந்த நகர்: மின்னிலக்க ஆயத்த திட்டம் தயாராகிறது

சிங்கப்பூர், மின்னிலக்க ஆயத்த திட்டம் ஒன்றைத் தொடங்க விருக்கிறது. அறிவார்ந்த நகரில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனும் பெற்றிருக்கவேண்டிய நவீன வசதிகளை உருவாக்கி கொடுக் கும் வழிவகைகளை அந்தத் திட்டம் விளக்குகிறது. “மின்னிலக்கத் தொழில்நுட் பத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் நம்முடைய முயற்சியில் யாரும் கைவிட்டு விடப்படவில்லை என்பதை நாம் உறுதிப்படுத்தவேண்டும்,” என்று அறிவார்ந்த நகர் திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான டாக்டர் விவியன் பாலகிருஷ் ணன் தெரிவித்துள்ளார். அதிபர் உரைக்கான பிற் சேர்க்கையில் இந்த விவரங்களை அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொதுச் சேவை அமைப்புகளின் நாடாளவிய அணுகுமுறை

சிங்கப்பூரின் பொதுச் சேவை அமைப்புகள் அரசாங்கம் முழுமை யும் தழுவிய அணுகுமுறை யிலிருந்து நாடு முழுவதையும் தழுவும் முயற்சியைக் கைகொள் ளும் என்று பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். நிறுவனங்கள், குடிமக்கள், இதர பங்குதாரர்களை ஈடுபடுத்தி ஒன்றாகச் சேர்ந்து சிறந்த தீர்வு களை உருவாக்குவதன் மூலம் புதிய அணுகுமுறை இடம்பெறும் என்று அவர் விளக்கினார்.

அமைச்சர் கா சண்முகம்: சட்டங்கள் ஏற்புடையவையாக இருக்க தொடர் மறுபரிசீலனை

சிங்கப்பூரின் சட்ட அமைச்சு, நாட்டின் சட்டங்களைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்துவரும் என் றும் அதன் மூலம் சட்டங்கள் சமூகத்தின் பரிணமிக்கும் தேவை களுக்கு ஏற்றவையாக தொடர்ந்து இருப்பதை அமைச்சு உறுதிப்படுத் தும் என்றும் சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார். அதிபர் உரைக்கான தமது அமைச்சின் பிற்சேர்க்கையை அமைச்சர் நேற்று வெளியிட்டார்.

சிங்கப்பூரர்களுக்கு இன்னும் சிறப்பான வீடுகள், வசதிகள்

சிங்கப்பூரர்களுக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் சிறந்த வீடுகளைக் கட்ட தேசிய வளர்ச்சி அமைச்சு உறுதிபூண்டு இருக் கிறது. இப்போதைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக்கும் அத்தகைய வீடுகளை உருவாக்குவ தற்கான திட்டங்களை தேசிய வளர்ச்சி அமைச்சு தெரிவித்து இருக்கிறது. அதிபர் ஹலிமா யாக்கோப் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை உரையாற்றினார்.

அமைச்சர் கோ: சிங்கப்பூரின் உலகளாவிய இணைப்பு மேம்படுத்தப்படும்

சிங்கப்பூருக்கு “அதிமுக்கியமான” ஒன்றாக இணைப்புத்தன்மை நீடித்து வருவதால், வட்டார நாடு களோடும் உலக நாடுகளோடும் சிங்கப்பூருக்குள்ள இணைப்புகளை மேன்மேலும் மேம்படுத்த போக்கு வரத்து அமைச்சு முயற்சி எடுக்கும் என போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று கூறினார். சீரிய இணைப்புப் பொருளிய லுக்குத் துணைபுரிந்து, தரமான வேலைகளை உருவாக்குவது, சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் என்று அதிபர் உரைக்கான தமது அமைச் சின் பிற்சேர்க்கையில் திரு கோ கூறினார்.

கழிவுகளற்ற தேசமாக சிங்கப்பூர் உருவாக உறுதி

கண்களுக்குக் குளிர்ச்சியான, பசுமையான இடங்களை ஒருங் கிணைத்து அவற்றை உரு மாற்றுவதன் மூலம் அனைவரும் வாழ்வதற்குரிய, நீடித்து நிலைத் திருக்கக்கூடிய சிங்கப்பூரை நிர் மாணிக்க தன் பங்கை ஆற்றி வருவதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது. “துடிப்புமிகுந்த, அழகான, தூய்மையான நீர்’ (ஏபிசி) திட் டத்தின் மூலம் வடிகால்கள், கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை அழகான நதிகள், நீர் ஊற்றுகள், ஏரிகள் போன்ற வையாக நாங்கள் தொடர்ந்து உருமாற்ற உள்ளோம்,” என தமது அமைச்சின் பிற்சேர்க்கை யில் கூறினார் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.

Pages