You are here

சிங்க‌ப்பூர்

தாய்மொழியை மேம்படுத்தும் புதிய காணொளித் தொடர்

தாய்மொழிகளின் முக்கியத் துவத்தை மாணவர்களுக்கு வலியுறுத்த புதிய காணொளித் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளிகளை லீ குவான் இயூ இருமொழிக் கல்வி நிதி, நேற்று நியூ டவுன் உயர்நிலைப்பள்ளியில் அறிமுகம் செய்துவைத்தது. தாய்மொழியைக் கற்கும் அனுபவம் குறித்து கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், சிங்கப்பூர் பிரபலங்களான ஷபிர் தபாரே ஆலம், ஒலிவியா ஓங், தௌஃபிக் பதிசா ஆகியோரின் பகிர்வுகளும் காணொளித் தொடரில் இடம் பெற்றுள்ளன.

மீண்டும் குற்றவாளியாகும் இளையரை திருத்த திட்டம்

சட்டப் பிரச்சினையில் சிக்கும் இளையோரின் விகிதாச்சாரம் குறைவாக இருப்பினும் அதன் அளவு ஆக அதிகமாக உள்ளது என்று சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்து உள்ளார். இப்பிரச்சினையைக் கவனிக்க அமைச்சர்நிலைக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் அக்குழு பிரச்சினையில் சிக்கும் இளை யோரைச் சீர்திருத்துவதற்கான பெருத்த ஆதரவை நல்கும் என் றும் அவர் கூறினார்.

3 வாரங்களில் 5,000 மின்சார கார் பகிர்வு

‘புளூஎஸ்ஜி’ மின்சாரக் கார் பகிர்வுத் திட்டம் தொடங்கப்பட்ட மூன்று வாரங்களில் 3,300 பேருக்கு மேல் பதிவு செய்ததுடன் 5,000க்கும் மேலான கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 80 வாகனங்களும் 32 மின்னேற்ற நிலையங்களும் சென்ற மாதம் 12ஆம் தேதி பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. எதிர்பார்ப்புக்கு மேலாக கிடைத்துள்ள வரவேற்பு ஊக்கம் அளிப்பதாகவும் பெருமிதத்தைத் தருவதாகவும் ‘புளூஎஸ்ஜி’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃப்ரான்க் விட்டெ கூறியுள்ளார்.

சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள்

சிங்கப்பூர் அனைத்துலக வணிக நீதிமன்றத்திற்கு நான்கு புதிய அனைத்துலக நீதிபதிகள் மூன்று ஆண்டுகள் தவணைக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. அவர்களின் தவணைக் காலம் நாளை தொடங்க உள்ளது. திங்கட்கிழமை இஸ்தானாவில் அவர்களின் பதவியேற்பு நடைபெறும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ராபர்ட் ஷென்டன் ஃப்ரெஞ்ச், பிரிட்டனைச் சேர்ந்த டேவிட் எட்மண்ட் நியூபர்ஜர், ஜெரமி லயனல் குக், கனடாவைச் சேர்ந்த பெவர்லி மரியன் மெக்லச்லின் ஆகியோர் அந்த நால்வர். அவர்களில் இருவர் தங்களது நாட்டின் தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர்.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த இரு மானியங்கள்

நிலப்போக்குவரத்து முறையை மேம்படுத்த ஆய்வாளர்கள், மேம் பாட் டாளர்களுக்கு நிலப்போக்கு வரத்து ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. சிங்கப்பூரின் தற்போதைய போக்குவரத்து சவால்களை எதிர் கொள்ள, புத்தாக்க, நடைமு றைக்குச் சாத்தியமான தீர்வு களைக் கண்ட றிவதற்கான இரு ஆய்வு மானியங்களை ஆணையம் நேற்று அறிவித்தது. போக்குவரத்து நேரத்தைக் குறைப்பது; பொதுப் போக்குவ ரத்து சேவையைச் சிறந்த முறை யில் மேம்படுத்துவது; சாலைகளுக் கான நிலப்பகுதிகளைக் குறைப் பது, மீட்பது; நில அகழ்வு கணிப் பின் துல்லியத்தை மேம்படுத்துவது ஆகிய நான்கு துறைகளில் ஆய்வில் ஈடுபடுவோர் கவனம் செலுத்துவார்கள்.

விரைவுச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி

லாரி ஒன்று விபத்துக்குள்ளா னதைத் தொடர்ந்து செங்காங்கை தெம்பனிஸ் விரைவுச் சாலையுடன் இணைக்கும் இரு சாலைகளும் நேற்று பிற்பகலில் போக்குவரத் துக்கு மூடப்பட்டன. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையின் பொங்கோல் சாலை நுழைவில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி, செங்காங்கிலிருந்து தெம்பனீஸ் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் பாதையை அடைத்தது.

தனிநபர் நடமாட்ட சாதனங்களை சாலையில் ஓட்டினால் கடும் நடவடிக்கை

தனிநபர் நடமாட்ட சாதனங்களைச் சாலையில் ஓட்டுவோருக்கு $2,000 வரை அபராதமும் அல்லது மூன்று மாதம் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். அத்துடன், அந்தச் சாதனங்களும் பறி முதல் செய்யப்படும். இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. தனிநபர் நடமாட்டச் சாதனக் குற் றங்கள் அதிகரித்து வருவதையடுத்து தவறிழைப்போர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுவதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வியட்னாமியர் பற்றி அச்சப்படும் அவரது குடும்பம்

வியட்னாமிய பொது பாதுகாப்பு அமைச்சால் தேடப்பட்டு வரும் அதன் சொத்து மேம்பாட்டாளர் திரு பான் வான் வு கடந்த மாதம் 28ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்ல முயன்ற போது துவாஸ் சோதனைச் சாவ டியில் தடுத்து வைக்கப்பட்டார். திரு பான், திரும்ப வியட் னாமுக்கு அனுப்பப்பட்டால், அங்கு அவருக்கு மரண தண் டனை விதிக்கப்படலாம் என்று அவரது குடும்பம் அஞ்சுவதாக திரு பானுக்காக வாதிட அவரது குடும்பத்தால் அமர்த்தப்பட்டுள்ள வழக்கறிஞர் ரெமி சூ தெரிவித் தார்.

போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

கிறிஸ்மஸுக்கு முன்தினம் இரவு நீ ஆன் சிட்டி கடைத் தொகுதியில் பணியில் இருந்த போலிஸ் அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, பின்னர் அவரைத் தாக்கிய ஆடவர் மீது நேற்று அரசு நீதிமன் றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதனுடன் அந்தக் கடைத் தொகுதி ஒன்றில் பணியாற்றிய பாதுகாவல் ஊழியர் ஒருவரையும் தாக்கிய 66 வயது சிங்கப்பூரரான லாம் ஜூன் ஹின் (படம்) மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. போலிஸ் சார்ஜண்ட் ஏட்ரியன் டான் காங் வீ தாக்கப்பட் டது குறித்த மூன்று குற்றச்சாட்டுகளும் பாதுகாவல் அதி காரி பஹாரி மட்சாம் தாக்கப்பட்டது குறித்த இரண்டு குற்றச்சாட்டுகளும் லாமுக்கு எதிராகப் பதிவாயின.

முதல் 240 மாணவர்களுடன் செங்காங்கில் ஃபெர்ன் கிரீன் தொடக்கப்பள்ளி திறப்பு

செங்காங்கில் புதிதாகத் திறக்கப் பட்டுள்ள ஃபெர்ன் கிரீன் தொடக் கப் பள்ளியில் நேற்றுக் காலை முதல் முறையாக தேசிய கீதம் ஒலித்தது. தொடக்கநிலை முத லாம் வகுப்பில் சேர்த்துக் கொள் ளப்பட்ட முதல் 240 மாணவர்கள் புதிய கல்வி ஆண்டைத் தொடங்கி னார்கள். இவ்வாண்டு நாடெங்கிலும் தொடக்கநிலை முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள 38,000 மாணவர்களில் இவர்கள் அடங்குவர். புதிய பள்ளியில், வெள்ளை, பச்சை நிற உடற்பயிற்சி சீருடை அணிந்திருந்த 240 மாணவர்களும் எட்டு வகுப்பறைகளில் தங்களது சக மாணவர்களின் அறிமுகத்தைப் பெற்றனர்.

Pages