You are here

சிங்க‌ப்பூர்

வார இறுதிக்குள் ஊபர் நிறுத்தம்; தொடரும் விசாரணை

ஊபர் செயலி இந்த வாரயிறுதிக்குப் பின்னர் நிறுத்தப்படும். அமெரிக் காவைச் சேர்ந்த அந்நிறுவனம், சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இடைக்கால நடவடிக்கை களின்படி, மே 7க்குப் பிறகு ஊபர் தனது சேவையை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித் துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஊபர், தனது வட்டார வர்த்தகத்தை கிராப்பிடம் விற்றதிலிருந்து ஊபர் செயலி தொடர்ந்து இயங்க ஆணையம் இரண்டு முறை கட்டளையிட்டது.

அங் மோ கியோவில் விபத்து: பெண் பயணி காயம்

அங் மோ கியோ வட்டாரத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த விபத்தில் 30 வயது பெண் பயணி ஒருவர் காயமுற்றார். அவர் பயணம் செய்துகொண்டிருந்த டாக்சி அங் மோ கியோ அவென்யூ 5க்கும் அவென்யூ 6க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இன்னொரு வாகனம் மீது மோதியது. விபத்து குறித்து இரவு 11.40 மணி அளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் கூறினர். விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘கிளப்’களில் குறைக்கப்படும் சூதாட்ட இயந்திரங்கள்

சிங்கப்பூரில் சூதாட்டத்திற்கு எதிரான விதிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக்கி வரும் வேளை யில் ‘கிளப்’களில் சூதாட்ட இயந்திரங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றன. தற்போது 42 ‘கிளப்’களில் மட்டுமே சூதாட்ட இயந்திரங்கள் இயங்கி வரு கின்றன. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 61ஆக இருந்தது. ஏழு ‘கிளப்’ கள் சூதாட்ட இயந்திரங்களுக்கான உரிமம் காலாவதியானபோது அவற்றைப் புதுப்பிக்கவில்லை என்று உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரம் வாயிலாக தெரிய வந்துள்ளது. சூதாட்டத்தின் அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் அமைச்சு, சூதாட்ட இயந்திரங்கள் தொடர் பில் புதிய விதிமுறைகளைக் கடந் தாண்டு அறிமுகம் செய்தது.

காப்பிக்கடையில் வன்முறை: மூவருக்குச் சிறைத் தண்டனை

காப்பிக்கடையில் வன்முறையில் இறங்கிய மூன்று வாடிக்கையாளர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. $28 விலைப்பட்டியலுக்கான விவரத்தை காப்பிக்கடை ஊழியரால் கொடுக்க முடியாத நிலையில் அந்த மூவரும் அங்கிருந்த கிண்ணங்களையும் நாற்காலிகளையும் எறிந்து அமளி செய்தனர். இதனால் அந்தக் காப்பிக்கடையில் உள்ள உணவுக்கடைக்கு $10,000 பெறுமானமுள்ள நட்டம் ஏற்பட்டது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 47 வயது டான் சுங் மெங்குக்கும் 49 வயது ஆங் சிம் போவுக்கும் தலா ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கிராப்’ போன்ற கார் சவாரிச் சேவைகளுக்குப் போட்டியாக ‘ரைட்’

PHOTO: LIN ZHAOWEI FOR THE STRAITS TIMES

உள்ளூர் கார் சவாரிச் செயலியான ‘ரைட்’ நேற்று அறிமுகமானது. ‘கிராப்’ போன்ற கார் சவாரிச் சேவைகளுக்குப் போட்டியாக ‘ரைட்’ களமிறங்கியுள்ளது. நேற்று தனது சேவையைத் தொடக்கிய ‘ரைட்’ நண்பகலுக்குள் 1,000 கார் சவாரிச் சேவைகளை வழங்கியதாக அதன் தலைமை நிர்வாகி டெரன்ஸ் சோ கூறினார். “இது ஒரு நல்ல துவக்கம். எங்கள் நிறுவனம் வளர்ச்சி பெற இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று நம்புகிறேன். இந்த ஆண்டிறுதிக்குள் கார் சவாரிச் சந்தையில் பத்து விழுக்காட்டினை எங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம். இந்த இலக்கு எட்டக்கூடியது எனக் கருதுகிறோம்,” என்று திரு சோ கூறினார்.

திறன் மேம்பாட்டிற்கு அடித்தளமிட்ட ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில்

மூத்த பொறியாளராக 2001ஆம் ஆண்டு முதல் வேலை செய்து ஓய்வுபெற்ற 71 வயது திரு நவரத்னம் கருணாகரன் பின்னர் தனது நேரத்தை தொண்டூழியப் பணிகளுக்காக அர்ப்பணித்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயிலில் தொண்டு செய்து வந்த திரு கருணா, ஓய்வுபெற்றபின்னர் தனது முழுநேரத்தையும் அந்தக் கோயில் பணிகளுக்காக ஒதுக்கி உள்ளார். இன்று அந்தக் கோயிலின் தலைவர் என்ற முறையில் கோவிலின் சமூகத் திட்டங்களை நிர்வகித்து வருகிறார்.

உலு பாண்டான் ஆலைக்கு உலக விருது

Wastewater treatment plant in Ulu Pandan wins global award

உலு பாண்டானில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை சென்ற ஆண்டுதான் செயல்படத் தொடங்கியது. இருந் தாலும் அது 2018 உலக தண்ணீர் விருதுகளில் ஒரு விருதை வென்று இருக்கிறது. வருடாந்திர தண்ணீர்/ கழிவுநீர் திட்ட விருது என்ற விருதை அந்த ஆலை பாரிஸ் நகரில் பெற்றுக்கொண்டது. புதிய நடைமுறைகளைக் கையாளுவதற்காக அந்த ஆலைக்கு இந்த விருது கொடுக்கப்பட்டு இருக்கிறது. உலு பாண்டான் ஆலை குறைவான எரிசக்தியையும் குறைவான ஊழியர்களையும் குறைந்த பரப்பளவு உள்ள நிலத்தையும் பயன்படுத்துகிறது. இந்த விவரங்களை பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று அறிவித்தது.

விரைவுச்சாலையில் காருடன் விபத்து: மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் காயம்

மத்திய விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமையன்று கார் ஒன்றுடன் விபத்தில் சிக்கிய 22 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் ஒருவரும் காயம் ஏற்பட்டது. சிலேத்தார் வெஸ்ட் லிங்க் துணைச் சாலையைக் கடந்து மோட்டார்சைக்கிளில் அவர் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கார் அவரை நோக்கி திரும்பியதையடுத்து விபத்து நிகழ்ந்தது. சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி மாலை 5.13 மணிக்குச் செய்தி கிடைத்ததாக போலிஸ் குறிப்பிட்டது.

நீதிமன்றத்தில் ஜெர்மன் வங்கி மேலாளர்

மைக்கல் பிராங்க் ஹார்ட்டுங்

ஜெர்மன் வங்கியான டியூச்சி பேங்க்கின் மூத்த மேலாளர் ஒருவர், சிறார் பாலியல் சுற்றுலா திட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான மைக்கல் பிராங்க் ஹார்ட்டுங் என்ற அந்த 46 வயது ஜெர்மன் நாட்டவருக்கு $15,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார். அவருக்கு எதிரான வழக்கு இன்று தொடரும்.

பாதசாரியைத் தாக்கிய மின்சைக்கிள் ஓட்டுநருக்கு ஐந்து வாரச் சிறை

இயூ கிம் மிங்

பாதசாரி ஒருவரைத் தாக்கிய மின்சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு ஐந்து வாரச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. இயூ கிம் மிங் என்ற அந்த சைக்கிளோட்டி, ஹவ்காங் அவென்யூ 7ல் சென்ற ஆண்டு மே 18ஆம் தேதி தன் மின்சைக்கிளில் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. இடைப்பட்ட வேகத்தில் சென்றார். அப்போது வழியில் சிலர் நடந்து சென்றுகொண்டிருந் ததைப் பார்த்து ஒலி எழுப்பினார். திரு சாங் யோங் பியோ, 69, என்ற முதியவரைத் தன் சைக்கிளில் அந்த நபர் கடந்து சென்றபோது திரு சாங் வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பை இயூ மீது இடித்துவிட்டது.

Pages