You are here

சிங்க‌ப்பூர்

நிதிச் சேவை கிளையில் ஆயுதமேந்தி கொள்ளை: ஆடவருக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு போலிசார் தீவு முழுவதும் மேற் கொண்ட மூன்று நாள் நடவடிக் கையின் விளைவாக பிடிபட்ட ஆயுதமேந்திய கொள்ளையர் ஒரு வருக்கு நேற்று கிட்டத்தட்ட ஐந் தாண்டு சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது. ஹாசிம் ஹம்சா, 58, என்ற அந்தச் சிங்கப்பூரர் வயது காரண மாக பிரம்படியிலிருந்து தப்பினார். அவர் போதைப்பொருள் தொடர் பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஏற்கெனவே குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி உபி அவென்யூ 1ல் இருக்கும் வெஸ்டர்ன் யூனியன் நிதிச் சேவை கிளையில் 15 செ.மீ.

முதியோர் பராமரிப்பு தொழில்நுட்பங்கள்: தாதிமை நிறுவனம் பரிசோதிக்கிறது

ஆரஞ்ச் வேலி நர்சிங் ஹோம்ஸ்

சிங்கப்பூரில் தாதிமை விடுதிகளை நடத்தும் ஆகப்பெரிய நிறுவனமான ஆரஞ்ச் வேலி நர்சிங் ஹோம்ஸ் நிறுவனம், தான் ஸ்டார்ஹப், எஸ்டி இன்ஜினியரிங் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து முதியோரைப் பராமரிப்பதற்கான தொழில்நுட்பங்களைப் பரிசோதித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. ஊழியர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதும் மருந் தகப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதும் இந்த முயற்சியின் நோக்கம் என்று அந்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முதியவர்கள் கீழே விழுந்து விடுவதைத் தடுக்கும் முறை ஒன்றை ஆரஞ்ச் வேலி நிறுவனம், ஸ்டார்ஹப் நிறுவனத்துடன் சேர்ந்து சோதித்துவருகிறது.

எல்லை தாண்டிய சமூக சேவைக்கு அங்கீகாரம்

டாக்டர் காயத்திரி (நடுவில்)

ப. பாலசுப்பிரமணியம்

உதவி என்று வரும்போது சிங்கப்பூ ருக்கு அப்பால் வெளிநாடுகளுக் கும் சென்று உதவிக்கரம் நீட்டி வரும் சிங்கப்பூர் பொது மருத்துவ மனை மருத்துவர் டாக்டர் ந. காயத்திரி தேவிக்கு இவ்வாண்டின் சுகாதார மனிதாபிமான விருது கிடைத்து உள்ளது. 15வது முறையாக வழங்கப்படும் இவ்விருதுகள் தங்கள் பணிக்கு அப்பால் பொதுநலப் பண்பில் அதிக அக்கறை செலுத்தும் சுகா தார ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது. விருது பெற்ற 73 தனிநபர் களில் மருத்துவமனையின் அவசர நிலை பிரிவில் பணியாற்றும் 34 வயது காயத்திரியும் ஒருவர்.

மின்னணு பணப் பட்டுவாடா: மாபெரும் கட்டமைப்பு திட்டம்

சிங்டெல் நிறுவனமும் கணினி விளையாட்டுக் கருவிகளைத் தயாரிக்கும் ரேசர் நிறுவனமும் கூட் டுத் தொழிலில் ஈடுபட இணங்கி இருக்கின்றன. அதன்மூலம் தென்கிழக்கு ஆசியாவில் ஆகப்பெரிய மின்னணு பணப்பட்டுவாடா கட்ட மைப்பை உருவாக்கலாம் என்று இந்த நிறுவனங்கள் நம்புகின்றன. இந்த இரு நிறுவனங்களும் தங்களுடைய மின்னணு பணப்பட்டுவாடா முறைகளைச் சேர்த்து ஒன்றோடு ஒன்று சேர்ந்து செயல் படக்கூடிய கட்டமைப்பை உரு வாக்க திட்டமிடுகின்றன. இந்த ஏற்பாட்டு முறையின்படி ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைக்குப் பணத்தைப் பற்று வைக்கமுடியும்.

புதிய தொடர்பில்லா ரொக்க அட்டை

கட்டணங்களைச் செலுத்தும் சேவைமுறைகளை வழங்கும் ‘நெட்ஸ்’ நிறுவனம் புதிய தொடர்பில்லா ரொக்க அட்டையை நேற்று அறிமுகப்படுத்தியது. தற்போது நடைமுறையில் உள்ள துணைக்கோள அடிப்படையிலான மின்னியல் சாலைக் கட்டண முறைக்கு அது நிகரானது. புதிய மின்னியல் சாலைக் கட்டண முறை 2020ஆம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும். வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பொருத்தப் பட்டுள்ள இரண்டாம் தலைமுறை ‘ஐயு’ கருவிகளை மாற்ற ஏற்படும் செலவை அரசாங்கம் ஏற்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

ஊழியர்களின் கல்வி, பயிற்சி நிதிக்கு $200 மி. திரண்டது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழிற்சங்க உறுப்பினர்களுக்குப் பயிற்சி மானியம் வழங்கி உதவும் நிதியில் $200 மில்லியன் தொகையைச் சேர்க்கவேண்டும் என்று தொழிற்சங்க இயக்கம் நிர்ணயித்து இருந்த இலக்கு நிறைவேறி இருக்கிறது. அந்த நிதிக்காக $200 மில்லியன் திரண்டு இருக்கிறது என்று தேசிய தொழிற்சங்கக் காங் கிரசின் தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

இங் சீ மெங்: ஊழியர்களின் கருத்து கேட்டு எதிர்கால இலக்குகளை வகுப்பேன்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஊழியர்களின் கருத்துகளுக்குச் செவிமடுக்கப்போவதாக தொழிற் சங்க இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் இங் சீ மெங் தெரிவித்து இருக்கிறார். டௌன்டவுன் ஈஸ்ட்டில் நேற்று நடந்த மே தினப் பேரணியில் திரு இங் உரையாற்றினார். “வேலை பார்க்கும் மக்களுக் காக சிலவற்றைச் சாதிக்கவேண் டும் என்று திட்டம் வைத்திருக் கிறேன். முத்தரப்புப் பங்காளி களோடும் தொழிற்சங்க இயக்கத் தலைவர்களோடும் சேர்ந்து பாடு பட்டு உங்களுடன் கைகோத்து நடந்து, உங்களுக்குச் செவி சாய்த்து தெள்ளத்தெளிவான எதிர்கால இலக்கை வகுப்பேன்,” என்று திரு இங் குறிப்பிட்டார்.

அனைத்துலக நடுவர் மையத்துக்குப் புதிய தலைமை நிர்வாகி

சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மையம், தன்னுடைய புதிய தலைமை நிர்வாகியாக அலாய்சியஸ் கோ, மே 1 முதல் பொறுப்பேற்பார் என்று தெரிவித்துள்ளது. இவர், திருவாட்டி லிம் சியோக் ஹுன்னுக்கு பதிலாக பொறுப்பேற்கிறார். திருவாட்டி லிம் இந்த மையத்தின் நிர்வாக சபை உறுப்பினராகச் செயலாற்றுவார். திரு கோ, பல துறைகளிலும் சமரச பணியில் 15 ஆண்டுக்கும் அதிக காலம் அனுபவம் வாய்ந்தவர். ‘அனைத்துலக நடுவர்’ என்று அவருக்குச் சான்றிதழ் அளிக்கப்பட்டு இருக்கிறது. திரு கோ, வெளியுறவு அமைச்சில் சேவையாற்றி இருக்கிறார்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சந்தேகம்: ஆடவர் கைது

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியிருக்கிறார் என்று சந்தேகிக்கப்பட்ட 28 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைதுசெய்தது. அவர், தொழிலாளர் தினத்தன்று அதிகாலை நேரத்தில் பூகிஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் இருக்கும் புல்தரைப் பகுதியில் வாகனத்தை மோதி விட்டதாகத் தெரிகிறது.

Pages