You are here

இந்தியா

வெளியேறமாட்டோம்: ஸ்டெர்லைட் அறிவிப்பு

படம்: தமிழக ஊடகம்

சென்னை: தூத்துக்குடியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் மக்கள் போராட்டம், உயிர்ப்பலி என கடந்த நான்கு நாட்களில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலையை அரசு மூடியுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறு வன தலைமை நிர்வாக அதிகாரி பி.ராம்நாத், ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள் ளார். வெளியிலிருந்து ஊடுருவிய சில கலவரக்காரர்களே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என குறிப்பிடும் அவர், ஆலையைத் தொடர்ந்து நடத்த தாங்கள் நடத்தி வரும் சட்டப்போராட்டம் தொடரும் என உறுதிபடக் கூறு கிறார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி வெற்றி

படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு: பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் கோபத்துடன் அவையை விட்டு வெளிநடப்பு செய்தபோதிலும் கர்நாடக முதல் வராகப் பதவியேற்று இருக்கும் எச்.டி.குமாரசாமி, சட்டமன்றத்தில் நேற்று நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பின்போது தனது பெரும் பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார். “விவசாயிகளின் கடனை வாக்குறுதி கொடுத்தபடி தள்ளுபடி செய்யவேண்டும்,” என்று பி.எஸ். எடியூரப்பா வலியுறுத்திய நிலையில் அவையை விட்டு அனைத்து பாஜக எம்எல்ஏக்களும் வெளி நடப்பு செய்தனர். “இந்தக் கோரிக்கையை நிறை வேற்றாவிடில் மாநிலம் தழுவிய போராட்டம் திங்களன்று நடத்தப் படும்,” என்றும் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக் கிச்சூட்டைக் கண்டித்தும் ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி சுமார் 20,000 பேர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிடும் நோக்கில் பேரணியாகச் சென்றனர். அப்போது போலிசுக் கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போதும் மறுநாளிலும் போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 13 பேர் பலியாகினர்.

‘கட்சிக்குள் பிரியங்கா முக்கிய பங்கு வகிப்பார்’

புதுடெல்லி: பிரியங்கா காந்தி வத்ரா காங்கிரஸ் கட்சிக்குள் பல வழிகளிலும் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் இது தொடரும் என்றும் ஆனால் இதற்கு தேர்தலில் போட்டியிடு வார் என்று அர்த்தமில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. “பிரியங்கா காந்தி பல வழிகளிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இதில் என்ன தவறுள்ளது? முன் னாள் அமைச்சர் சல்மான் குர் ‌ஷித் தேர்தலில் நிற்பதற்காக பிரியங்கா முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறியுள்ளார். இது தவறு. பிரியங்கா அவர் விரும்பும் வழியைப் பின்பற்று வார்,” என்றார் காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி.

பட்டதாரிகளின் ‘தந்தூரி தேநீர்’

புனே: ரோஜா தேநீர், ஊலாங் தேநீர், ப்ளாக் தேநீர், க்ரீன் தேநீர், இஞ்சித் தேநீர் என பலதரப்பட்ட தேநீர் மக்கள் பலராலும் விரும்பி அருந்தப்பட்டு வரும் நிலையில் தந்தூரி சிக்கன், தந்தூரி ரொட்டி யைப் போன்று புதிதாக பிரபல மாகி வரும் தந்தூரி தேநீரை புனேயைச் சேர்ந்த பட்டதாரிகள் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். புனேவை அடுத்த கராடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான பிரமோத், அமோல் ராஜ்டியோ ‘தந்தூரி தேநீர்’ கடையை நடத்திவரு கின்றனர்.

தமிழகத்திலும் ‘நிபா’ பீதி: இருவருக்கு தீவிர சிகிச்சை

திருச்சி: கேரளா மாநிலம் கோழிக் கோடு, மலப்புரம் பகுதிகளில் ‘நிபா வைரஸ்’ காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட 13 பேர் இதுவரை பலியாகியுள்ள னர். இந்நிலையில் கேரளாவில் சாலை அமைக்கும் பணிக்காக சென்ற திருச்சி மாவட்டம், மணப் பாறை அருகே உள்ள கைகாட்டி, கார்வாடி கிராமங்களைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் அண்மையில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்களில் ஒரு வரான பெரியசாமி, 22, என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களாக காய்ச் சலுடன் கழுத்து வலி, தலை சுற்றல், வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு ஏற்பட்டு சுவாசிப் பதிலும் பிரச்சினை இருந்துள்ளது.

31 இடங்களில் போராட்டம்: 317 பேர் கைது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 31 இடங்களில் மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 2,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர். கலைந்து செல்ல மறுத்த 317 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற புரட்சிகர இளைஞர் முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்தவர்களை ரிசர்வ் வங்கி அருகே போலிசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

ஜெயக்குமார்: மக்கள் விரும்பாத திட்டங்கள் தேவை இல்லை

சென்னை: மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடைக்காது என தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தூத்துக்குடி சம்பவம் தமிழக அரசு வேத னைப்படக்கூடிய ஒன்று என்றார். எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அமைச்சர், தூத்துக்குடி மக்களை தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் நிச்சயம் சந்திப்பர் என உறுதி அளித்தார்.

இந்தியாவில் நெதர்லாந்து பிரதமர்

புதுடெல்லி: இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இந் தியா வந்துள்ள நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே நேற்று இந்திய பிரதமர் மோடியைச் சந்தித்தார். டெல்லியில் நடைபெறும் 130 நாடுகளின் தொழிலதி பர்கள் கூட்டத்தில் நெதர் லாந்து பிரதமர் தமது பேராளர் குழுவுடன் பங்கேற்கிறார்.

மகிழ்ச்சியில் எதிரணி

படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: கர்நாடகாவில் குமார சாமி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொண்ட அவர்கள் அடுத்த பொதுத்தேர்தலில் பாஜ கவை வீழ்த்துவதைக் குறித்து ஆலோசித்தனர்.

Pages