You are here

இந்தியா

வாத்து போல் நடக்க வைத்த தண்டனை உயிரைப் பறித்தது

சென்னை: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் அளித்த தண்டனை அவனது உயிரைப் பறித்துவிட்ட தாக புகார் எழுந்துள்ளது. இதை யடுத்து உடற்பயிற்சி ஆசிரியரும், பள்ளியின் தலைமை ஆசிரியரும் கைதாகி உள்ளனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த முரளி என்பவரின் 15 வயது மகன் நரேந்தர் திருவிக நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந் தான். நேற்று முன்தினம் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டது. நரேந்தர் பள்ளிக்குச் செல்ல பத்து நிமிடங்கள் தாமதமானதாகத் தெரிகிறது.

மாட்டுக்கு பிறந்தநாள்: விருந்து கொடுத்த விவசாயி

தனது பசுமாட்டின் 22வது பிறந்தநாளை விவசாயி ஒருவர் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்து, கேக் வெட்டி, விருந்து வைத்து கொண்டாடி உள்ளார். பெத்தனாச்சி என்ற பெயர் கொண்ட அம்மாடு 14 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. “பொதுவாக மாடுகளில் கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி எடுப்பது மிக அபூர்வம். ஆனால் பெத்தனாச்சி பசு ஐந்து தலைமுறைகள் பார்த்துவிட்டது. எனவேதான் அதன் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடினோம்,” என்கிறார் விவசாயி பார்த்திபன். மத்திய அரசின் சிறந்த கால்நடை பராமரிப்பாளர் விருதுக்கு இவர் விண்ணப்பித்த நிலையில், விருது கிடைக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றம் சென்றுள்ளார்.

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்

இந்தியாவில் இனிமேல் ஆறு லட்ச ரூபாய்க்கு (S$12,550) மேல் பொருள் வாங்கும் அந்நாட்டவர் கள் அது குறித்து நிதிப் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியிருக்கலாம். கறுப்புப் பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் முயற்சியாக இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இந்திய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. முக்கியமாக இந்த வரம்பு நகை மற்றும் ஆடம்பரப் பொருட்களுக் குப் பொருந்தும் எனச் சொல்லப் படுகிறது. “பெரும்பாலான நாடுகளில் இப்படி தகவல் தெரிவிக்க வேண் டிய பரிவர்த்தனைக்கான வரம்பு 10,000 அமெரிக்க டாலராக இருக் கிறது,” என்றார் பெயர் கூற விரும்பாத ஓர் அரசாங்க அதிகாரி.

மதுரையில் பத்தாவது உலகத் தமிழ் மாநாடு: விரைவில் அறிவிப்பு

இந்த ஆண்டில் அல்லது அடுத்த ஆண்டில் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 1966ஆம் ஆண்டு முதன்முறையாக உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதன்பின் சென்னை (1968), பாரிஸ் (1970), யாழ்ப்பாணம் (1974), மதுரை (1981), கோலாலம்பூர் (1987, 2015), மொரீ‌ஷியஸ் (1989), தஞ்சாவூர் (1995) என இதுவரை மொத்தம் ஒன்பது முறை உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

காந்தி ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்ற இஸ்ரேல் பிரதமர்

அஹமதாபாத்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் இந்தியப் பிரதமர் மோடியும் அகம தாபாத்தில் உள்ள டியோ தோலரா கிராமத்தில் ‘ஐகிரியேட்’ சென்டர் என்ற மையத்தைத் தொடக்கிவைத்த பின், சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குச் சென்ற னர். அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய நெட்டன்யாகு வும் அவரது மனைவியும் ராட்டை யில் நூல் நூற்றனர்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லி எனத் தெரியாத 36% மாணவர்கள்

புதுடெல்லி: அண்மையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் கலந்து கொண்டவர்களில் 36 விழுக்காட்டினருக்கு இந்தியா வின் தலைநகர் புதுடெல்லி என் பது தெரியவில்லை எனத் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டு இந்திய கல்வி அறிக்கை அறிக்கை (ASER) வெளியிடப்பட்டு உள்ளது. நாட்டில் மாணவர்களிடம் கல்வி, பொது அறிவு நிலை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய வருடாந்திர கல்வி நிலைத் தகவல் என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டது.

‘ஏர் இந்தியா’ நான்காகப் பிரித்து விற்பனை

புதுடெல்லி: பெருங்கடனில் மூழ்கி தத்தளிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நான்காகப் பிரித்து விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நான்கு தனித் தனி நிறுவனங்களாகப் பிரித்து பங்குகள் விற்கப்படும் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 51 விழுக்காடு பங்குகள் விற்கப்படும் என்று ‘த எக்கானமிக் டைம்ஸ்’ வெளியிட்ட தகவல் தெரிவித்தது. ஏர் இந்தியா மற்றும் மலிவு கட்டண விமான நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ ஆகிய இரண்டும் ஒரே நிறுவனமாக பங்குகள் விற்பனை செய்யப்படும்.

களைகட்டிய காணும் பொங்கல்: பொதுமக்கள் உற்சாகம்

சென்னை: காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தமிழகத்தில் காணும் பொங்கல் தினத்தன்று வெளியே சென்று கொண்டாடுவது வழக்கமாக உள் ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் கொண்டாட்டங்கள் களைகட்டின. நேற்று காலை முதலே சென்னை கடற்கரை உட்பட தமிழகம் முழுவ தும் உள்ள கடலோரப் பகுதிகளில் ஏராளமானோர் கூடினர். இதே போல் வண்டலூர் உயிரியல் பூங்கா, அடையாறு பாம்புப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

தங்க தமிழ்ச்செல்வன்: நாங்கள் வெளியிலிருந்தபடி தினகரனை ஆதரிப்போம்

புதுவை: தனிக்கட்சி துவங்குவது குறித்து தன் முடிவை இன்று அறிவிக்க இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இத னால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது. புதுக்கட்சி தொடங்கும் விஷ யத்தில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சற்றே அதிருப்தி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக தற்போது தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை தினகரன் உணர்ந்துள்ளார். மேலும் இரட்டை இலை சின்னமும் கைநழுவிப் போய்விட்டது. எனி னும், ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றி அவரது தரப்பை சற்றே ஆறுதல்படுத்தி உள்ளது.

நடுக்கடலில் பரபரப்பு: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்

நாகை: தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இத்தாக்குதல் நடந்துள்ளது. இந்திய எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

Pages