You are here

இந்தியா

வசூல் ராஜா எம்பிபிஎஸ் பட பாணியில் ஐஏஎஸ் தேர்வில் முறைகேடு

படம்: தமிழக ஊடகம்

குற்றம் இழைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலிஸ் பணிக்குப் பயிற்சி பெறும் ஒரு வரே குற்றத்தில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்து உள்ளது. சஃபீர் கரிம் என்னும் ஐபிஎஸ் அதிகாரி திருநெல்வேலி மாவட் டம் நாங்குநேரியில் துணை கண் காணிப்பாளராகப் பயிற்சி பெற்று வருகிறார். ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டதால் யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்தார். அந்தத் தேர்வு சென்னை எழும்பூரில் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தியாவில் பூட்டான் மன்னர்

நான்கு நாள் பயணம் மேற்கொண்டு இந்தியா வந்த பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கேல் வாங்சுக்கை விமான நிலையத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். பூட்டான் மன்னருடன் வந்த அவரது துணைவியார் அரசி ஜெட்சன் பேமா வாங்சுக்கையும் மகனையும் சுஷ்மா சுவராஜ் அழைத்துச் சென்றார். படம்: இந்திய ஊடகம்

இந்தியக் கடற்படைக்கு 111 ஹெலிகாப்டர்

புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சு இந்தியக் கடற்படைக்கு ரூ. 21,738 கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது என அரசு தரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது தொடர்பான மன்றக் கூட்டம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக 16 ஹெலிகாப் டர்கள் உடனடியாக பயன்படுத் தும் நிலையில் வாங்கப்படும் எனவும் 95 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது.

அரசின் சேவைகளைப் பெற 50% இந்தியர்கள் லஞ்சம்

புதுடெல்லி: அரசாங்க அலுவலகங் களில் தங்களது வேலைகளை முடிக்க சுமார் 50 விழுக்காட்டு இந்தியர்கள் லஞ்சம் கொடுத்தது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ‘லோக்கல் சர்க்கிள்’ என்ற நிறுவனம் 200 நகரங்களில் ஆய்வு ஒன்றை மேற் கொண்டது. தற்போது வெளியான அந்த ஆய்வின் முடிவில், 10க்கு எட்டு பேர் சொத்து பத்திரப் பதிவு, வாட் வரி, போன்றவைக் காக போலிஸ், மாநகராட்சி அதி காரிகளுக்கு லஞ்சம் கொடுத் ததாகக் கூறியுள்ளனர். அதில், 25 விழுக்காட்டினர் பல முறையும் 20 விழுக்காட்டினர் ஒன்று அல்லது இரண்டு முறை லஞ்சம் கொடுத்ததாகக் கூறியுள்ளனர்.

மனநோயாளியின் வயிற்றில் இருந்த 600 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

கோல்கத்தா: மனநோயாளி ஒரு வர் அவ்வப்போது °விழுங்கிய ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மேற்கு வங்காள மாநிலம் கோபர்க்தங்கா பகுதியைச் சேர்ந்த 48 வயதான மனநோயாளி ஒருவர் கடந்த சில தினங்களாக தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அடிக்கடி வாந்தியும் எடுத்து உள்ளார். இதையடுத்து அவரை கோல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த் தனர்.

மும்பை - அகமதாபாத் ரயில்கள்; 30 கோடி ரூபாய் நஷ்டம்

புதுடெல்லி: இந்தியாவில் வரும் 2023ஆம் ஆண்டில் அறிமுகமாக இருக்கும் புல்லட் ரயில் திட்டத்தால் மும்பை, அகமதாபாத் வழித்தடத் தில் பயண நேரம் குறைந்தாலும் அது லாபம் தரக்கூடிய ஒன்றல்ல என்கிறது ஆர்டிஐ தகவல். மும்பையைச் சேர்ந்த 30 வயது அனில் கல்காலி என்ற சமூக ஆர் வலர் ஆர்டிஐ எனும் தகவல் அறி யும் உரிமைச் சட்டத்தின் கீழ். மும்பை=அகமதாபாத் வழித்தடத் தில் ரயில்வே துறையின் வருமா னம் குறித்த தகவல்களைக் கேட்டு மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

சீண்டினால் நிம்மதி பறிபோகும்: எச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை

மதுரை: அடுத்த சில ஆண்டுக ளில் நாட்டின் வளர்ச்சி அதிகரிக் கும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித் துள்ளார். மதுரையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், பாஜகவினரை சீண்டுபவர்கள் அரசியல் களத் தில் நிம்மதியாக இருக்க முடியாது என எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மைக்காலமாக எச்.ராஜா தெரிவிக்கும் கருத்துகள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. ‘மெர்சல்’ படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் ராஜா தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

உளவுத்துறை ஆய்வு: நடிகர்களுக்கு மகிழ்ச்சி; கட்சிகளுக்கு அதிர்ச்சி

சென்னை: முதல்வர் பழனிசாமி, டிடிவி தினகரனின் செயல்பாடுக ளால் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக மத்திய உளவுத்துறை மேற்கொண்ட ஆய் வில் தெரியவந்துள்ளது. அடுத்த தேர்தலில் அதிமுக வுக்கு வாக்களிக்கப் போவதில்லை என ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 விழுக்காட்டினர் தெரிவித்துள் ளதாக தமிழக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம் திமுக வளர்ச்சி காணவில்லை என்றும் 46 விழுக் காட்டினர் மட்டுமே திமுகவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர் என் றும் அச்செய்தி மேலும் தெரி விக்கிறது. மத்திய உளவுத்துறை தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து அவ்வப்போது விரிவான ஆய்வறிக் கைகளை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறது.

கிரானைட் முறைகேடு: ரூ.200 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை: கிரானைட் முறைகேடு வழக்கில் தொடர்புடைய இரு நிறுவனங்களின் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உள்ளது அமலாக்கத்துறை. இதேபோல் மேலும் நிறுவனங் களின் சொத்துகளை முடக்கு வது குறித்து அமலாக்கத்துறை பரிசீலித்து வருவதாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன. மதுரையைச் சேர்ந்த குறிப் பிட்ட இரு நிறுவனங்கள் சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது விசாரணையில் அம்பலமானது. இந்நிறுவனங்கள் ரூ.450 கோடி மதிப்புள்ள அரசு சொத்துகளை மறைமுகமாக அபகரித்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது.

இந்திய மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் அரசு

அமிர்தசரஸ் நகரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாகா எனும் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் திங்கட்கிழமையன்று 68 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் விடுவித்தனர். எல்லையைக் கடந்து மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்று மற்றொரு நாட்டின் மீனவர்களைக் கைது செய்வது வழக்கமான நடவடிக்கையாக இருந்து வருகிறது. படம்: ஏஎஃப்பி

Pages