You are here

இந்தியா

‘பிரச்சினையை நீதிபதிகளே சரி செய்துகொள்ள வேண்டும்’

புதுடெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தங்களுக்கிடையிலான பிரச்சினையை நீதிபதிகளே சரி செய்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார். மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் உச்சநீதிமன்றத் தில் நிர்வாகம் சரியாக நடைபெற வில்லை, ஜனநாயகம் இல்லை என நேற்று முன்தினம் கூட்டாக பேட்டியளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது நான்கு நீதிபதிகள் புகார்

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி கள் நால்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் குறைகூறி இருப்பது நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாக திரு ரஞ்சன் கோகோய், திரு செல்லமேஸ்வர், திரு மதன் பி.லோகுர், திரு குரியன் ஜோசஃப் ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் கூட்டாக நேற்று செய்தியாளர் களைச் சந்தித்தனர். இதனை இந்திய நீதித்துறை யில் ஓர் அசாதாரண நிகழ்வாகக் குறிப்பிட்ட அவர்கள், உச்ச நீதி மன்றத்தில் நிர்வாகம் சரியில்லை என்றும் கூறினர்.

சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில் விவாதித்த ‘ராஜா’க்கள்

உயர் கல்வித் தகுதிகளைக் கொண்டுள்ள சிலர் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளதால் விவாத மொழியாக தமிழுடன் ஆங்கிலமும் இணைந்துள்ளது. அண்மைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜனின் மகனும் மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏவுமான தியாக ராஜன், ஆளுநர் உரை குறித்து பேசியபோது தமிழிலேயே தொடங் கினார். ஆனால், தமிழில் பேச சற்று தடுமாறிய அவர், சிறிது நேரத்தில் ஆங்கிலத்துக்குத் தாவினார். அதைத் தொடர்ந்து, தமிழ் ஆட்சி மொழி, பண்பாட்டுத் துறை அமைச் சரான மாஃபா பாண்டியராஜனும் ஆங்கிலத்திலேயே அவருக்குப் பதிலளித்தார்.

மோசடி செய்த ஆடவருக்கு எட்டு மாத சிறை

நிறுவனத்திற்குச் சேரவேண்டிய $17,100 தொகையைத் தன் பையில் போட்டுக்கொண்ட ஆடவர் ஒருவருக்கு எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. கருப்பையா செல்வகுமார், 62, என்ற அந்த ஆடவர் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதிக்கும் மே 9ஆம் தேதிக்கும் இடையில் செய் யப்பட்ட ஈமச்சடங்கு சேவைகளுக்காக $17,100 தொகை இந்து காஸ்கட் நிறுவனத்திற்குச் சேர வேண்டியிருந்தது.

கார் தலைகீழாக குடை சாய்ந்தது; இருவர் காயம்

புக்கிட் பாத்தோக் அவென்யூ 3ல் வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். அந்த இருவரும் சென்ற கார், வேறொரு வாகனத்தில் மோதி குடைசாய்ந்துவிட்டது. விபத்து பற்றி தங்களுக்கு இரவு 10.45 மணிக்குத் தகவல் வந்ததாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. காயம் அடைந்த இருவரும் சுயநினைவுடன் இருந்தார்கள் என தெரிய வந்ததாக சேனல் நியூஸ் ஆசியா நேற்று குறிப்பிட்டது.

ரூ.3,500 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனை களில் ரூ.3,500 கோடி ($730.45 மில்லியன்) பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை யைத் தொடர்ந்து பலரும் சொத்துகளைப் பதுக்கும் நட வடிக்கையில் ஈடுபட்டனர். அதனை அடுத்து பினாமி சொத்துகள் தடுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.

கடப்பிதழ்களை முகவரிச் சான்றாகப் பயன்படுத்துவதில் சிக்கல் எழலாம்

புதுடெல்லி: கடப்பிதழ்களை முகவரிச் சான்றாகப் பயன்படுத்துவதில் சிக்கல் எழக்கூடும் என்று கூறப் படுகிறது. ஏனெனில், கடப்பிதழ்களின் கடைசிப் பக்கத்தில் முகவரி அச்சிடப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தை நீக்கும் திட்டத்தை வெளியுறவு அமைச்சு முன்வைத்துள்ளது. இந்தியத் தூதரகத்தின் கடப்பிதழ், விசா பிரிவில் கொள்கை, சட்ட விவகாரங்களுக்கான உள்துறைச் செயலாளர் சுரேந்திர குமார் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதோடு அடுத்து வெளியாகும் புதிய வகை கடப்பிதழ்களில் இது நடைமுறைப்படுத்தப்படலாம் என்றார்.

‘தீந்தமிழன் தினகரன் பேரவை’ தொடக்கம்

தினகரன். படம்: இணையம்

சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ‘தீந்தமிழன் தினகரன் பேரவை’ என்ற புதிய அமைப்பு உதயமாகி உள்ளதாக டிடிவி தினகரன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக் கின்றன. அந்த அமைப்புக்கான உறுப் பினர் சேர்க்கைப் பணிகள் தீவிர மடைந்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது, அதன் மூலம் அதிமுகவுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்துவதே தினகர னின் திட்டம் என வெளியாகியுள்ள தகவலால் அதிமுக தலைமை கவலையில் இருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் திருநாளுக்காக சென்னையில் குவிந்த கரும்புகள்

பொங்கல் திருநாளை ஒட்டி கோயம்பேடு சந்தையில் கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. சந்தையின் எந்தப் பக்கம் திரும்பினாலும் கரும்புகளும் மஞ்சள் கிழங்குகளும் கொட்டிக்கிடக்கின்றன. அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கரும்புகள் வந்து குவிகின்றன. இதனால் இந்தாண்டு குறைவான விலைக்கு கரும்புகள் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக கரும்பு விற்பனை நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தரப்பிலும் கூறப்படுகிறது. படம்: சதீஷ்

மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆளுநர்: திருநாவுக்கரசர் கடும் விமர்சனம்

திருநாவுக்கரசர்

சென்னை: ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தில் ஆளுநர் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் கண்டிக்கதக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், ஆளுநரின் செயல்பாடானது மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது எனச் சாடினார். ஆளுநரின் ஆய்வு நடவடிக் கையைத் தமிழக அரசும் அமைச் சர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களின் அடிமைத் தனத்தை உணர்த்துவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களின் வேலை நிறுத் தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார்.

Pages