You are here

இந்தியா

சமாஜ்வாடி தலைவர் மீது பெண் பாலியல் புகார்

நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவை சேர்ந்த சமாஜ்வாடி தலைவர் அசோக்பிரதான். இவர் மீது 24 வயது பெண் ஒருவர் போலிசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை அசோக்பிரதான்தான் ஏற்பாடு செய்து நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில், அப்பெண் போலிசில் புகார் கொடுத்துள்ளார்.
“குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை அசோக்பிரதான், பங்கஜ் ஜிந்தால் ஆகியோர் பலாத்காரம் செய்தனர். அவர்கள் மட்டுமல்ல; எனது மாமனாரும் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்,” என்று புகாரில் பெண் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்: 11,181 பேர் மனுத்தாக்கல்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இரு தினங்களில் மட்டும் 11,181 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்த மாதம் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த 25ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளன. கட்சிகள் அறிவித்த வேட்பாளர்கள், சுயேட்சைகள் என நேற்று முன்தினம் வரை மட்டும் 11,181 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

பெங்களூரு: 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நாளை 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என அறிவிக் கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. மாநிலம் முழுவதும் பரவலாகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. வன்முறைச் சம்பவங்களும் குறைந்தபாடில்லை. எனவே பெங்களூருவில் நாளை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ள தாக காவல்துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே நேற்று நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

13 மணி நேர தாமதம்: சிங்கப்பூர் சென்ற பயணிகள் கடும் அவதி

சென்னை: சுமார் 13 மணி நேர தாமதம் காரணமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 1.25 மணியளவில் சிங்கப்பூர் செல்ல இருந்த விமானம், விமான நிலைய ஓடுபாதைக்குச் சென்றபோது, அதில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டறியப் பட்டது. இதையடுத்து பயணம் ஒத்திவைக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் ஓய்வு அறையில் தங்கவைக்கப்பட்டனர். எனினும் அடுத்த 13 மணி நேரத்துக்கு அக்கோளாற்றைச் சரிசெய்ய முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை, விமான நிலைய அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

மனைவியைக் கொன்ற கணவர் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது

சிவகங்கை: பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது தெரிந்துபோனதால் மனைவியைக் கொன்ற கணவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் கைதானார். சிவகங்கையைச் சேர்ந்த 68 வயதான பாலசுப்ரமணியத்தின் மனைவி விஜயா கடந்த 2013ல் கொல்லப்பட்டார். போலிசார் தீவிர விசாரணை நடத்தியும் கொலையாளி குறித்து துப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கொலை நிகழ்ந்தபோது விஜயாவின் விரல் நகங்களில் சிக்கியிருந்த சில முடிகளை போலிசார் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவை பாலசுப்ரமணியத்தின் நெஞ்சுப் பகுதியில் இருந்தவை எனத் தெரியவந்தது. சம்பவத்தன்று அவர் வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறியுள்ளார்.

தனித்துப் போட்டி: வாசன் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இம்முறை அவர் திமுக வுடன் கூட்டணி சேர முயற்சி மேற்கொண்டார். இது குறித்து அவர் திமுக பொருளாளர் ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார். எனினும் காங்கிரசுடன் மட்டுமே கூட்டணி அமைக்க திமுக தலைவர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் வேறு வழியின்றி தமாகா தனித்துக் களம் காண்கிறது. உள்ளாட்சித் தேர்தலுக் கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப் படும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கோரி திமுக வழக்கு

புதுடெல்லி: அடுத்த மாதம் நடை பெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என திமுக வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளைப் பயன் படுத்தினால் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது போல் உள் ளாட்சித் தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தினால் முறைகேடுகள் நடைபெறாது.

ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் திட்டமிட்டுச் செயல்படுகிறது தேர்தல் ஆணையம் - ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சித் தேர் தலை ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றார். “உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாலை ஆறு மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான மறுநாள் காலை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய சாதனை

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய சாதனை

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா ஒரே ஏவுகணை மூலம் இரு சுற்று வட்டப் பாதைகளில் துணைக் கோள்களை நிலைநிறுத்தி முதன் முறையாக புதிய சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத் தில் இருந்து 8 துணைக் கோள்களுடன் ‘பிஎஸ்எல்வி -சி35’ ஏவுகணை நேற்று காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண் ணில் பாய்ந்தது. இந்த ஏவுகணையில் கடல், வானிலை ஆய்வுக்காக ‘ஸ்கேட் சாட் -1’ என்ற 370 கிலோ கிராம் கொண்ட பிரதான செயற்கைக் கோள் இடம்பெற்று இருக்கிறது.

சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை

மு.க. ஸ்டாலி னுடன் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் கள். படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்படாமல் இருக்க சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப், தாய் கவுரி ஆகிய 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்தார்.

Pages