You are here

இந்தியா

இலங்கை பங்கேற்காத அனைத்துலக விசாரணை தேவை - திருமாவளவன்

திருமாவளவன்

சென்னை: இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பை இலங்கையிடம் கொடுப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் 25,000 தமிழர்கள் மாயமாகி உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து இலங்கை அரசு இடம்பெறாத வகையில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

மனைவியின் சிறப்பைப் போற்ற ‘மனைவி தினம்’

மனைவியின் சிறப்பைப் போற்ற ‘மனைவி தினம்’

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நேற்று முன்தினம் மனைவி நாள் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தந்தையர் தினம், அன்னையர் தினம், கணவர் தினம், குழந்தைகள் தினம் கொண்டாடப் படுவதைப் போல் மனைவியின் சிறப்பைப் போற்றும் விதத்தில் ‘மனைவி தினம்’ என்று யாரும் கொண்டாடுவது இல்லை எனக் கோவில் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இக்கோவிலில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றார் அவர். இதில் ஏராளமான தம்பதியர் பங்கேற்றனர். படம்: ஊடகம்

மின்துறையில் பெரும் ஊழல்: அரசுக்கு ராமதாஸ் கேள்வி

ராமதாஸ்

சென்னை: மின்துறையில் நடைபெற்ற ஊழலின் எதிரொலியாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், முன் னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு என்ன தண்டனை எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் மின் சாரக் கொள்முதலில் ஞானதேசிகன் ஒரு யூனிட்டுக்கு தலா 20 காசும் நத்தம் விஸ்வநாதன் தலா 2 ரூபாயும் கையூட்டு பெற்றதாகச் சாடியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் காவல்துறையின் கெடுபிடி ஏன்: துரைமுருகன் கேள்வி

எதிர்க்கட்சித்  தலைவர் துரைமுருகன்

சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறையின் கெடுபிடி அதிகரித்துள்ளதாகச் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். பேரவையில் நேற்று முன்தினம் பேசிய அவர், பேரவை வளாகத் தில் திடீரென போலிஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார். ஒருவார கால தடை முடிந்து திமுக உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பேரவைக்கு வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். முன்னதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய காரை தலைமைச் செய லகத்துக்குள் அனுமதிக்கும் முன்னர் போலிசார் தீவிர சோதனையிட்டனர். மேலும், திமுக எம்எல்ஏக்களின் கார்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

‘அதிமுகவின் அர்த்தமற்ற வாக்குறுதிகள்’

‘அதிமுகவின் அர்த்தமற்ற வாக்குறுதிகள்’

சட்­ட­மன்றத் தேர்­த­ல் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் பிரசாரத்தின்போது அதி­முக அர்த்­த­மற்ற தேர்தல் வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்ததாகத் தேர்­தல் ஆணை­யம் இப்போது கண்ட­னம் தெரி­வித்­துள்­ளது. கடந்த மே மாதம் நடை­பெற்ற தமி­ழக சட்­ட­மன்றத் தேர்­த­லுக்­காக அதி­முக அறிக்கை­யில் விதி­களை மீறி பல்­வேறு அறி­விப்­பு­கள் இடம்­பெற்­றி­ருந்ததாக புகார் எழுந்தது. அதனையடுத்து தேர்­தல் ஆணை­யம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஆதாரங்களை விளக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் அது பற்றி அக்கட்சி, ஆணையத் திற்குச் சரியான முறையில் விளக்கம் அளிக்கவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்; ஆயிரக்கணக்கானோர் கைது

விவசாயிகள் போராட்டம்; ஆயிரக்கணக்கானோர் கைது

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக ஆங் காங்கே பரபரப்பு நிலவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைதாகினர். நீராதாரங்களைக் காக்கவும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கவும் வலியுறுத்தி விவசாயிகள் நேற்று சாலை, ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட னர். சில பகுதிகளில் முழு கடை அடைப்புப் போராட்டமும் நடை பெற்றது. காவிரியில் இருந்து தமிழகத் திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து நேற்று மாநிலம் தழு விய அளவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வாகனம் சோதனையிடப்பட்டதால் பரபரப்பு

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவைக்கு வந்தபோது அவரது வாகனத்தை காவல் துறையினர் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது வழக்கமான நடைமுறை என காவல்துறை தரப்பில் விளக் கம் அளிக்கப்பட்ட போதிலும் திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மேலும் திமுக எம்எல்ஏக்கள் அனைவரது வாகனங்களும் இதே போல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதிமுக உறுப்பினர்களின் வாக னங்களை போலிசார் சோதனை செய்யவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆபாசப் பேச்சு ஆசிரியருக்குப் பாடம் கற்பித்த மாணவிகள்

பொது இடத்தில் பலர் பார்க்க, பெண்களிடம் அடி வாங்கும் ஆசிரியர் பினோத் குமார் சாஹு, 50. படம்: இந்திய ஊடகம்

தன்னை நோக்கி கீழ்த்தரமாகப் பேசிய ஆசிரியரை மாணவி ஒருவர் தன் தோழியுடன் சேர்ந்து பொது இடத்தில் வைத்து நையப் புடைத்த சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நிகழ்ந்தது. பிரதிக்ஷ்யா ஆச்சார்யா என்ற அந்த மாணவி, உத்கல் பல்கலைக் கழக விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ் வழியாக வந்த பினோத் குமார் சாஹு, 50, என்ற துணைப்பாட ஆசிரியர் அவரை நோக்கி கீழ்த்தர மான சொற்களைக் கூறியுள்ளார். இதைக்கண்ட பிரதிக்ஷ்யா, சாஹுவிற்குச் சரியான பாடம் புகட்டவேண்டும் என்று எண்ணி னார். உடனடியாக அவர் தன் தோழிக்குத் தகவல் தெரிவித்தார்.

ஏமாற்று விளம்பரங்களில் தோன்றினால் சிறை, அபராதம்

நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்

‘கருப்பாக இருக்கிறீர்களா? கவலையை விடுங்கள், ஒரே வாரத் தில் சிவப்பாகிவிடலாம்’ என்ற வகையிலான மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் தோன்றும் பிரபலங்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டு சிறையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க இந்திய அரசுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் 30 ஆண்டுகளாக நடப்பில் இருக்கும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை ஒழித்து விட்டு, புதிய நுகர்வோர் பாது காப்பு மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இது தொடர்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை ஏப்ரல் மாதம் சமர்ப்பித்தது.

சிறைவாசம் அனுபவிக்கும் 700 தமிழர்கள்: ஆந்திர அதிகாரி தகவல்

வேலூர்: செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் 700 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில சிறைத்துறை தலைவர் சுனில்குமார் தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், கைதான அனைவரும் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக பிடிபட்ட 700 தமிழர்கள் சித்தூர், கடப்பா, திருப்பதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Pages