You are here

இந்தியா

வாடகைத் தாய்; புதிய கட்டுப்பாடுகள்

புதுடெல்லி: இந்தியாவில் வாட கைத்தாய் முறையை வியாபார நோக்கோடு பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக புதிய மசோதா ஒன்றை இந்திய அரசு தாக்கல் செய்யவிருக்கிறது. இந்த மசோதா வுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் நாடாளு மன்றத்தில் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டால் வெளிநாட்டு இந்தியர்கள் உட்பட வெளிநாட்ட வர்கள் இந்தியாவில் வாடகைத் தாயை அமர்த்திக்கொள்ள முடி யாது. இந்தியாவில் திருமண மாகாமல் சேர்ந்து வாழ்பவர்களும் ஓரினச் சேர்க்கையாளர்களும் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்களும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற இனிமேல் அனுமதி இருக்காது.

ரோகித் தலித் மாணவர் அல்ல

நகரி: ஹைதராபாத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா தலித் அல்ல என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு இடை நீக்கம் செய்யப்பட்டதால் ரோகித் வெமுலா தன்னை மாய்த்துக் கொண்டார் என்றும் இதற்கு துணைவேந்தர் அப்பாராவே காரணம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ சங்கங்கள் போராட் டத்தில் குதித்ததால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்பயா வழக்கு: ஆபத்தான உடல் நிலையில் குற்றவாளி

புதுடெல்லி: டெல்லியில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்ற வினய் ஷர்மா திகார் சிறையில் தன்னை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள் ளார். அவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

ரகசியங்கள் கசிவு; பிரான்ஸ் அதிகாரி மீது சந்தேகம்

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டு உதவியுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்கார்பியன்’ நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்த பின்னணியில் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து ரகசியங்கள் கசிந்திருக்க வேண்டும் எனவும் இதனால் தொழில்நுட்ப ரீதியாக எதையும் செய்ய முடியாது என்றும் பிரான்ஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணி ஆற்றிய முன்னாள் பிரான்ஸ் கடற்படை அதிகாரி ஒருவர் ரகசியங்கள் வெளியானதன் பின்னணியில் இருப்பதாக ‘தி ஆஸ்திரேலியன்’ செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வெற்று அறிக்கைகளால் பயனில்லை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்த காலியாக உள்ள 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 110-ஆவது விதியின் கீழ் பள்ளிக் கல்வி, உயர்கல்வி ஆகிய துறைகளை மேம்படுத்த ரூ.359.22 கோடியில் பல புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மணமகனே இல்லாத திருமணத்துக்கு ஆடம்பரமாக அலங்காரம் செய்ததைப் போல, இந்த அறிவிப்புகள் உள்ளன. உயர்கல்வி நிறுவனங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்காமல் வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை.

வட இந்தியாவில் உணரப்பட்ட நிலஅதிர்வு

புதுடெல்லி: மியான்மாரில் 6.8 ரிக்டர் அளவுகொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அதன் தாக்கம் டெல்லி மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உணரப் பட்டது. இந்தியாவில் அசாம் மாநிலம் கௌகாத்தியில் நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டது. மேலும், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்திலும் நில நடுக்கம் உணரப்பட்டு உள்ளது. வீடுகள், அலுவலகத்தில் இருந்த வர்கள் அதிர்ச்சியில் வெளியே ஓடினர். கோல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

அடையாள அட்டை இல்லாமல் தவிக்கும் பிரபலம்

இரோம் ஷர்மிளா

கௌகாத்தி: இரும்புப் பெண்மணி என்று உலகமே அறியும் இரோம் ஷர்மிளாவிடம் (படம்) தான் ஓர் இந்தியர்தான் என்பதை உறுதிச் செய்ய எந்த அடையாள அட்டையும் இல்லை.
மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த இரோம் ஷர்மிளா, அண்மையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அப்போது தான் அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
ஆனால், அவரிடம் இந்தியர் என்பதை நிரூபிக்கக்கூடிய எந்தவொரு அடையாள அட்டையும் இல்லாததால், அரசியலில் ஈடுபட அவருக்கு அது பிரச்சினையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஐந்து மாதங்களில் ஆயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் தில் கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தின் போது, பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் அம்மாநில அரசு அளித்த பதிலில் இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

பீகார் வெள்ளம்: மோசமான அணை நிர்வகிப்பே காரணம்

­­­பு­து­டெல்லி: பீகாரில் இந்த ஆண்டு வழக்­க­மான அள­விற்­கும் குறை­வா­கவே மழை பெய்­துள்ள போதும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அணை சரியாக நிர்வகிக்கப்படாததே காரணம் என்று கூறு­கிறார் சுற்றுச்சூழல் ஆய்­வா­ளர் ஹிமான்‌ஷு தாக்கூர். மத்தியப் பிர­தே­சத்­தின் பன் சாகர் அணையில் கடந்த ஒரு மாதத்­திற்­கும் மேலாக 95.22 விழுக்­காடு தண்ணீர் சேமிக்­கப் பட்டு வந்­துள்­ளது. ஆனால், தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. பன்­சா­கர் அணையில் இனி மேல் குறைவான தண்ணீரே சேமிக்­க­மு­டி­யும் என்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி மொத்­த­மாக நீர் வெளி­யேற்­றப்­பட்­டது.

இந்திய நீர்மூழ்கி கப்பல் ரகசியம் அம்பலம்; விசாரணைக்கு உத்தரவு

புது­டெல்லி: இந்தியக் கடற்­படை­யின் நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் குறித்த ரக­சி­யங்கள், ஆஸ்­தி­ரே­லிய பத்­தி­ரி கை­யின் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யா­கி­யி­ருப்­பது பெரும் அதிர்ச்­சியை ஏற்­படுத்­தி­யது. டிசி­எஸ்­என் என்ற நிறு­வ­னம் இந்­தி­யா­வுக்­காக 6 நீர்­மூழ்­கிக் கப்­பல்­களைத் தயா­ரித்து வரு­கிறது. இந்நிலையில், அதன் வடி­வமைப்பு, தாக்கும் திறன் உள்ளிட்டவைகள் போன்ற ரகசியங்கள் கொண்ட 22 ஆயிரம் பக்க ஆவணங்கள் அம்பல மாகி இருப்பதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு மனோகர் பாரிக்­கர் உத்­த­ரவிட்டுள்ளார். “இவை இந்தியாவில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை.

Pages