You are here

இந்தியா

இரவு முழுவதும் தவித்த மக்கள்

­­­குர்­கான்: இந்­தி­யா­வின் வட, வட­கிழக்கு மாநி­லங்களில் பெய்து வரும் கனமழை கார­ண­மாக மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்டு உள்ளது. கடும் மழை கார­ண­மாக சாலை களில் வெள்ளம் பெருக்­கெ­டுத்து ஓடி­ய­தால், குர்­கா­னில் போக்கு வரத்து முடங்கியது. தேசிய நெடுஞ்சாலை­யில் ஏற் பட்ட இந்த நெரி­ச­லால் 15 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து முடங் கியது. இதனால், வாகனமோட்­டி­கள் நேற்று முன்­தி­னம் இரவு முழு­வதை­யும் சாலையிலேயே கழிக்க நேர்ந்தது. இதனால், டெல்­லி­யில் இருந்து குர்­கா­னுக்கு வாக­னங்களில் வர­வேண்டாம் என்று குர்கான் போக்­கு­வ­ரத்து அதி­கா­ரி­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

கெஜ்ரிவால்: நான் கொல்லப்படலாம்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை அழிப்பதற்காக மத்திய அரசு என் னை கொல்லவும் செய்யலாம் என்றுÿடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் களுக்காக கெஜ்ரிவால் பேசிய 10 நிமிட காணொளி நேற்று இணை யத்தில் வெளியிடப்பட்டது. அதில் தாம் கொல்லப்படலாம் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

நடுவானில் பயணி ரகளை

மும்பை: துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு சென்ற இண்டிகோ விமானத்தில் நேற்றுக்காலை பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப் பட்டது-. விமான ஊழியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், திடீரென உணவுப்பொருட்கள் வைக்கும் வண்டியில் ஏறி அமர்ந்துள் ளார். மும்பையில் விமானம் இறங்கியதும் ரகளையில் ஈடு பட்ட பயணி கீழே இறக்கப் பட்டு மத்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டார். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

2050ஆம் ஆண்டில் நகரங்களில் 60 விழுக்காடு இந்தியர்கள்

புதுடெல்லி: கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் குடியேறுவது அதிகரித்து 2050ஆம் ஆண்டில் அறுபது விழுக்காடு இந்தியர்கள் நகரங்களில் வசிப்பர் என மத்திய இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய நகர்ப்புற மேம்பாட்டு இணை அமைச்சரான இந்தர்ஜித் சிங், “கடந்த 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 31 விழுக்காட்டினர் நகரங்களில் வசிக்கின்றனர். வரும் ஆண்டுகளில் நகரங்களில் மக்கள் குடியேறுவது அதி கரிக்கும். 2050ஆம் ஆண்டில் 60 விழுக்காடு இந்தியர்கள் நகரங்களில் வசிப்பர்,” என்றார்.

தந்தைக்கு அவமானம்; உயிரைவிட்ட மாணவி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள கூக்னா சேவா நகரில் வசித்து வரும் ரத்தன் சிங் தோமர் இரவு பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக இவர் தனது 13 வயது மகள் ஜாஸ்மினின் பள்ளிக் கட்ட ணத்தைக் கடந்த மூன்று மாதங்களாகச் செலுத்தவில்லை. இந்நிலையில், அந்த மாணவி யின் வீட்டுக்கு வந்த ஆசிரியர்கள் கட்டணம் கட்டாதது தொடர்பாக ரத்தன் சிங் தோமருடன் வாக்கு வாதம் செய்தபோது அது தகராறானது. எனவே, சம்பவம் அறிந்து வந்த போலிசார் தோமரை இழுத்துச் சென்றனர்.

கார் கிடைக்காததால் 2 மணி நேரத்தில் ரத்தான திருமணம்

மீரட்: வரதட்சணையாக கார் கேட்டு மாப்பிள்ளை அடம் பிடித்ததால், இரண்டு மணி நேரத்தில் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மோனி சாவுக்கும் முகமது ஆரிப் என் பவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டினர் வரதட்சணை யாக கேட்ட எல்லா பொருட் களையும் பெண்வீட்டார் கொடுத் தாகக் தெரிகிறது. இருப்பினும் சீர்வரிசையில் கார் இல்லாத காரணத்தினால் மோனிசாவை ஆரிப் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோனிசா அழுதுகொண்டே இருந்ததுடன் தன்னுடைய புகுந்த வீட்டுக்குப் போகவும் மறுத்து உள்ளார்.

‘மாறுபட்ட விஞ்ஞானி’

ராமேசுவரம்: இந்தியாவின் முன் னாள் அதிபர் மறைந்த அப்துல் கலாமின் முதல் ஆண்டு நினைவு நாள் நேற்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இந்த நினைவு நாளில் ராமே சுவரம் பேய்க்கரும்பில் அமைந் துள்ள அப்துல் கலாம் நினை விடத்தில் ஏழு அடி உயரத்தில் அவரது உருவச் சிலைத் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிலையைத் திறந்து வைத் தார். இதில் மத்திய அமைச்சர்கள் மனோகர் பரிக்கர், பொன். ராதா கிருஷ்ணன், தமிழக அமைச் சர்கள், அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத் தினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வழக்கறிஞர்களுக்கான சட்டத் திருத்தம் நிறுத்திவைப்பு

உயர் நீதிமன்ற வாயிலில் குவிக்கப்பட்ட போலிசார். படம்: ஊடகம்

சென்னை: வழக்கறிஞர்களுக் கான நெறிமுறைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப் படுவதாக சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அறிவித் ததையடுத்து, வழக்கறிஞர்களின் போராட்டமும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களை விடு தலை செய்ய வேண்டும் என்றும் 126 வழக்கறிஞர்கள் மீதான பணி இடைநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

படம்: தகவல் ஊடகம்

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஈரோட்டில் தனியார் பள்ளிகள் சார்பில் நேற்று முன்தினம் பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர், ‘வயதில் சிறிய குழந்தைகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு, குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். படம்: தகவல் ஊடகம்

கபாலி படம் பார்த்த சோ

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தை மூத்த பத்திரிகையாளர் சோ தனது குடும்பத்தினருடன் சென்னையில் செவ்வாய்க் கிழமையன்று பார்த்து ரசித்தார்.

Pages