You are here

இந்தியா

லெஸ்டரில் நீடிக்கிறார் வார்டி

லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவுடன் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஜேமி வார்டி. படம்: ஏஎஃப்பி

லெஸ்டர்: முந்தைய பருவத்தில் லீக்கில் தனது இடத்தைத் தக்க வைக்கவே தடுமாறிய குழு ஒன்று, அடுத்த பருவத்தில் சீறிப் பாய்ந்து பட்டத்தையே தன்வச மாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியது நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. அக்குழுவின் இந்த அபார எழுச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் இங்கிலாந்து தாக் குதல் ஆட்டக்காரர் ஜேமி வார்டி, 29. தொடர்ந்து 11 ஆட்டங்களில் கோலடித்து புதிய சாதனை படைத்த இவர் 2015-16 இபிஎல் பருவத்தில் மொத்தம் 24 கோல் களைப் புகுத்தினார்.

பாம்புகள் படையெடுப்பு

திருமலை: திருமலையில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் ஆலயத்தின் திருமண மேடையில் புரோகிதர்கள் சங்கம் உள்ளது. இங்கு புரோகிதர்கள் ஓய்வு அறை ஒன்று உள்ளது. இங்கு புதன்கிழமை 10 அடி நீள நாகப் பாம்பு ஒன்று புரோகிதர்கள் அறை பகுதியில் நுழைந்தது. இதைக் கண்ட அவர்கள் அலறியடித்து ஓடினர்.

கறுப்புப் பண சொத்துப் பட்டியல்

புதுடெல்லி: கறுப்புப் பணம் பதுக்கியவர்களின் சொத்துப் பட்டியலை வருமான வரித்துறை நேற்று அதிரடியாக வெளியிட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத் துள்ள இந்தியர்களின் பட்டியலை வருமான வரித்துறை அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது அவர்களின் சொத்துப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பட்டியல் வருமான வரித் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஓடுபாதையில் பழுதாகி நின்ற விமானம்; தரையிறங்க வந்த மற்றொரு விமானம்: பெரும் விபத்து தவிர்ப்பு

கோப்புப்படம்

சென்னை: ஓடுபாதையில் ஏற் கெனவே ஒரு விமானம் பழு தாகி நின்ற நிலையில் மற் றொரு விமானம் அதே ஓடு பாதையில் தரையிறங்க வந்த தால் சென்னை விமான நிலை யத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தரையிறங்க வந்த விமானியின் சாதுரியமான செயல்பாடு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகலில் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், ஓடுபாதை யில் தரையிறங்கியபோது அதன் சக்கரங்கள் திடீரென செயலிழந்தன. இதனால் விமானத்தின் கீழ்ப்பகுதி ஓடுபாதையை உரசியது.

ரயிலில் ஹரித்துவார் சென்ற திருவள்ளுவர் சிலை

ரயிலில் ஹரித்துவார் சென்ற திருவள்ளுவர் சிலை

சென்னை: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 அடி உயர திரு வள்ளுவர் சிலை வரும் 29ஆம் தேதி நிறுவப்பட உள்ளது. திருக்குறள் மீது மிகுந்த பற்று கொண்ட பாஜக மாநிலங் களவை உறுப்பினரான தருண் விஜய் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள் ளார். திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உரு வாக்கப்பட்டு பின்னர் சென்னை கொண்டு வரப்பட்டது. இந்நிலை யில் அதை ரயிலில் ஹரித்துவார் கொண்டு சென்றுள்ளார் தருண் விஜய். சிலை வழியனுப்பு நிகழ்வு நேற்று முன்தினம் சென்னையில் நடை பெற்றது. இதில் ஆளுநர் ரோசய்யா கொடியசைத்து, சிலையை வழியனுப்பி வைத்தார்.

கலப்புத் திருமணம்: எட்டு ஆண்டுகளுக்குப் பின் மருமகளைக் கொன்ற தம்பதி கைது

சென்னை: வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் பெற்ற மகன் மீது ஆத்திரமாக இருந்த பெற்றோர், 8 ஆண்டுகளுக்குப் பின் மருமகளைப் படுகொலை செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர். திருச்செங்கோடைச் சேர்ந்த வர் சந்தோஷ். இவருக்கும் வேலூரைச் சேர்ந்த சுமதிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இத னால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலியை கடந்த 2008ஆம் ஆண்டு மணம் புரிந்தார். பின்னர் இருவரும் கோவை யில் வசித்து வந்தனர். இந்நிலை யில் கடந்த 2012ஆம் ஆண்டு இத்திருமணத்தை சுமதியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்.

24 வயது இளையருக்கு தவறான காலில் அறுவை சிகிச்சை

புதுடெல்லி: தனியார் மருத்துவ மனை ஒன்றின் மருத்துவர்கள் 24 வயது இளையரின் காயம்பட்ட காலில் அறுவை சிகிச்சை செய் வதற்கு பதில் தவறான காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்தக் கவனக்குறைவு தொடர் பாக விசாரணையை மேற்கொண் டுள்ளது புதுடெல்லி மருத்துவ மையம். டெல்லியில் உள்ள அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ரவி ராய். இவர் கடந்த ஞாயிறன்று மாடிப்படியில் இருந்து கீழே விழ அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக போர்ட்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மெட்ரோ ரயிலில் பாதுகாப்புக்காக மத்திய பெண்கள் படை

மெட்ரோ ரயிலில் பாதுகாப்புக்காக மத்திய பெண்கள் படை

புதுடெல்லி: மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்குத் தொல்லை கொடுப்போரைப் பிடிப்பதற்காகவும் பெண்களின் பாதுகாப்புக்காகவும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண்கள் பிரிவு அமர்த்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களிடம் சிலர் தவறாக நடந்துகொள்ள முயல் வதாகவும் பொருட்கள் திருட்டுப் போவதாகவும் பல புகார்கள் பெறப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள் ஏதுமின்றி எதிராளிகளைத் தாக்குவதற்கான திறனைப் பெற்றுள்ளனர் இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள்.

இரண்டோடு 22; எச்ஐவி தாக்கம் கண்ட ஆதரவற்ற பிள்ளைகளுக்கு பெற்றோர்போல அடைக்கலம் தரும் தம்பதி

இரண்டோடு 22; எச்ஐவி தாக்கம் கண்ட ஆதரவற்ற பிள்ளைகளுக்கு பெற்றோர்போல அடைக்கலம் தரும் தம்பதி

மும்பை: எச்ஐவி தாக்கம் கண்டபிள்ளைகளை நெருங்கிய உறவினர்கூட பராமரிக்காமல் ஒதுக்கிவைக்கும் வேளையில் எச்ஐ­வி­யால் பாதிக்­கப்­பட்ட 22 பேரை சொந்தப் பிள்ளை­களைப் போலவே பரா­ம­ரித்து வரு­கின்ற­னர் மும்பையைச் சேர்ந்த தம்பதி. இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு ரெஜி மும்பை­யில் உள்ள டிஒய் படில் மருத்­து­வ­மனையைக் கடந்து சென்ற­போது மருத்­து­வ­மனைக்கு வெளியே பசியுடன் படுத்­தி­ருந்த சிறு­மியைக் கண்டு அவ­ருக்கு உணவு வாங்கிக் கொடுக்க முன்­வந்தார். ஏற்­கெ­னவே பெற்றோரை இழந்­தி­ருந்த அந்தச் சிறுமி எச்ஐவி தாக்கம் கண்­டி­ருந்தார்.

"சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையைப் பேச முடியவில்லை"

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி சட்ட மன்றத்தில் இருந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் நேற்று வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி பணம் சிக்கியது தொடர்பாகவும் கரூரில் அன்புநாதன் வீட்டில் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும் திமுக சார்பில் பேச திட்டமிடப்பட்டது.

Pages