You are here

இந்தியா

தென்காசி தொகுதி மறுவாக்குப்பதிவு: ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

நெல்லை: தென்காசி தொகுதிக்குட்பட்ட 56வது வாக்குச்சாவடியில் நேற்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மாலை 2 மணியளவில் 55 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குச்சாவடியில் தேர்தலுக்கு முன்னர் வாக்குப்பதிவு ஒத் திகை நடத்தப்பட்டது. அப்போது பதிவான 52 வாக்குகளை நீக்காமலேயே 16ஆம் தேதியன்று அசல் தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்திவிட்டனர்.

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் - திமுகவிற்குச் சாதகம்

திமுக தலைவர் மு.கருணாநிதி

இரு தொகுதிகள் தவிர மீதமுள்ள 232 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று முன் தினம் நிறைவுபெற்ற நிலையில் அன்று மாலை முதலே தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகத் தொடங்கின. இதுவரை வெளியான ஐந்து கருத்துக்கணிப்புகளில் நான்கு திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. டைம்ஸ் நவ்-  சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் மட்டும் ஆளும் அதிமுக ஆட்சி யைத் தக்கவைக்கும் என்று கூறி இருக்கிறது. 139 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று அது கணித்துள்ளது.

கைபேசியால் வந்தது கைகலப்பு; கணவனின் விரல்களை வெட்டினார் மனைவி

சுனிதா

அனுமதியின்றி தனது கைபேசியை எடுத்துச் சோதித்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு பெண் தன் கணவனின் விரல்களைக் கத்தியால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் இந்தி யாவின் பெங்களூரு மாநகரில் நிகழ்ந்திருக்கிறது. பீகாரைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் சிங்கிற்கும் சுனிதாவிற்கும் (படம்) கடந்த ஏழு ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. மூன்றாண்டு களுக்குமுன் பெங்களூருக்கு இடமாறிய அவ்விருவரும் வெவ் வேறு தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களில் பணியாற்றி வந்தனர். அண்மையில், ஓய்வு வேண்டி பணியில் இருந்து சிறிது காலம் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்தார் சுனிதா.

அரவக்குறிச்சி, தஞ்சை தேர்தல்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களின் பேரில் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட் டுள்ள நிலையில், 19ஆம் தேதிக் குள் அவ்விரு தொகுதிகளிலும் தேர்தலை நடத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பண விநி யோகம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் தெரிவித்த புகார்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள் ளவே இல்லை என அதிருப்தி வெளியிட்டார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் 25ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை விடுவித்தது

சென்னை: இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரை அந்நாட்டு அரசு விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் சிறிசேன பிறப்பித்துள்ளார். ராமேசுவரம் மீனவர்களை கடந்த ஏப்ரல் 4, 27ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் வவுனியா, யாழ்ப்பாணம் சிறைகளில் அடைத்தனர். இந்நிலையில் டெல்லி வந்த இலங்கை அதிபர் சிறிசேனவிடம் மீனவர்களை விடுவிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதை அதிபர் சிறிசேன ஏற்றுக்கொண்டதையடுத்து, மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாக்களித்து திரும்பிய பெண் மின்னல் தாக்கியதில் பரிதாப பலி

அரியலூர்: வாக்களித்த பின்னர் வீடு திரும்பியபோது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உடல் கருகி பலியானார். ஜெயங் கொண்டத்தைச் சேர்ந்த 38 வயதான வளர்மதி என்ற அப்பெண் நேற்று முன்தினம் மதியம், தான் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அப்போது பலத்த மழை பெய் தது. பின்னர் இடி, மின்னல்களுக்கு மத்தியில் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பங்குழி ஓடை அருகே சென்றபோது, திடீரென அவர் மீது மின்னல் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

காரைக்கால்- நாகை இடையே கரையைக் கடக்கிறது புதிய புயல்

சென்னை: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறியதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இப்புதிய புயலானது காரைக்கால், நாகப்பட்டினம் இடையே இன்று எந்நேரத்திலும் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. “தற்போது இலங்கை, அதையொட்டிய மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இப்புயல் நிலை கொண்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் சென்னையில் பலத்த மழை பெய்தது.

‘இறந்துபோன’ வாக்காளர்கள் உயிருடன் வந்தனர்

வேலூர்: வாக்காளர் பட்டிய லில் இறந்துபோனவர்களாகக் குறிக்கப்பட்டிருந்த முதியவர்கள் இருவர் உயிருடன் வந்து தங்கள் வாக்குரிமையைப் பெற்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மணி (70 வயது), சகாதேவன் (80 வயது) ஆகிய இருவரும் வேலூர் நகர வாக்குச்சாவடிக்கு வந்தபோது, வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆவேசமடைந்த இருவரும், வாக்களிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் இருப்பதாக வாதிட்டனர். பொதுமக்களும் இருவருக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இதை யடுத்து இருவரும் வாக்க ளிக்க அனுமதிக்கப் பட்டனர்.

மயங்கி விழுந்த காவலருக்கு தமிழிசை முதலுதவி

மயங்கி விழுந்த காவலருக்கு தமிழிசை முதலுதவி

விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் நேற்றுக்காலை அத்தொகுதியின் வேட்பாளரும் பாஜக தமிழக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிக்கச் சென்றபோது அங்கு பணியில் இருந்த சூர்யா என்ற காவலர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு தமிழிசை முதலுதவி சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப்பின் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தக் காவலர் மேற்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். தமிழிசை சௌந்தரராஜன் பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடத் தக்கது. படம்: ஊடகம்

தள்ளாத வயதிலும் தளராத அரியணைக் கனவு

93 வயதான வி.எஸ்.அச்சுதானந்தன், திமுக தலைவர் கருணாநிதி.

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் முதலமைச்சர் பதவி வகித்த வயது முதிர்ந்த இரு தலைவர்களும் மீண்டும் அப்பதவியைப் பிடிக்க இந்தத் தேர்தலில் அதிக வேகம் காட்டினர். திமுக தலைவர் கருணாநிதி (வலப்படம்) இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் 93ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார். சக்கர நாற்காலிப் பயணம் என்றாலும் சளைக்காமல் தமி ழகம் முழுவதும் சென்று தமது கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்தார். இத்தேர்தலில் வென்றால் ஆறாவது தடவையாக அவர் முதல்வர் பொறுப்பேற்பார்.

Pages