You are here

இந்தியா

பொது இடத்தில் புகை பிடித்தால் வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது இனி வழக்குப்பதிவு செய்யப்படும். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சரத் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பொது இடங்களில் புகைபிடிப்ப வர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அது தொடர்பான அறிக்கையை வரும் 20ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிரடி உத்த ரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

‘ஜெயா, சல்மான் வழக்குகளால் நீதித்துறைக்கு கெட்ட பெயர்’

ஹைதராபாத்: தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தி நடிகர் சல்மான்கான் தொடர்பான வழக்குகளால் இந்திய நீதித்துறைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இரு வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், வழங்கப்பட்ட தீர்ப்புகள், மக்கள் மத்தியில் வசதி படைத்தவர்கள், அதிகாரம் உள்ளவர்களுக்கு விரைவாக பிணையும் தீர்ப்பும் கிடைக்கும் என்ற தவறான செய்தியை சொல்வதாகக் கூறியுள்ளார்.

ஆட்டோவில் சென்றபோது லாரியில் தலைமுடி சிக்கி பெண் பரிதாப பலி

காஞ்சிபுரம்: ஆட்டோவில் சென்றபோது பக்கவாட்டில் வந்த லாரியில் தலைமுடி சிக்கியதில் திருப்பதியைச் சேர்ந்த 38 வயது மோகனா பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று முன்தினம் தனது கணவர், குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் வந்திருந்தார் மோகனா. அங்குள்ள கோவில்களைச் சுற்றிப்பார்த்த பின்னர், ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். மஞ்சம்பாடி அருகே ஆட்டோ வந்தபோது, மோகனாவின் தலைமுடி வெளியே பறந்து, பக்கத்தில் சென்ற லாரியின் முன்பக்கக் கதவில் சிக்கிக்கொண்டது. இதனால் ஆட்டோவில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட மோகனா, லாரியில் சிக்கி அங்கேயே உயிரிழந்தார். இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

தேர்தல் தோல்விக்கு காரணமானவர்களைக் களையெடுக்க திமுக முடிவு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அக்கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகக் கூறப் படும் நிலையில், திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டம் கருணாநிதி தலை மையில் நடைபெற இருப்பதாக திமுக சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் திமுகவின் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதில் பங்கேற் பர் என்றும் கூறப்பட்டுள்ளது.

18ஆம் தேதி கூடும் அதிமுக செயற்குழு

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 18ஆம் தேதி காலை 11 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில், செயற்குழு உறுப்பினர்களாக உள்ள 250 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு ஜெயலலிதா கட்சியில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இக்கூட் டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

தீமிதித் திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் தடுமாறி விழுந்த ஆடவர்

தீமிதித் திருவிழாவில் குழந்தையுடன் நெருப்பில் தடுமாறி விழுந்த ஆடவர்

இந்தியாவின் வட மேற்கு மாநிலமான பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் நகரில் ‘மா மாரியம்மா மேளா’ என்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இடம்பெற்ற தீமிதி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒரு ஆடவர் தன் குழந்தையுடன் தனது நேர்த்திக் கடனைச் செலுத்த ஆயத்தமானார். அப்போது தீயை மிதித்து ஓடியபடி பாதி தூரம் வந்தவர் எதிர்பாராதவிதமாக கனன்று கொண்டிருந்த நெருப்பில் தன் இடுப்பில் சுமந்திருந்த குழந்தையுடன் கால் தடுமாறி விழுந்தார். அவரை அருகில் இருந்த மற்ற பக்தர்கள் மீட்டனர். இந்த விபத்தில் தந்தை, குழந்தை இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது.

குவியல் குவியலாக மேலும் பல புராதன சிலைகள்; பெங்களூரு விரைந்தது போலிஸ்

குவியல் குவியலாக மேலும் பல புராதன சிலைகள்; பெங்களூரு விரைந்தது போலிஸ்

கோவில்களில் உள்ள பழங்கால சிற்பங்களையும் பல அரிய சிலை களையும் வெளிநாடுகளுக்குக் கடத்தி வரும் கும்பல் பற்றி மேலும் பல தகவல்கள் கிடைத்து உள்ளன. கடந்த 3ஆம் தேதி போலிசில் சரணடைந்த சிலைக் கடத்தல் கும்பல் தலைவன் தீனதயாளனி டம் (வயது 84) கடந்த பத்து நாட் களாக போலிசார் நடத்திய விசா ரணையில் மேலும் பல இடங் களில் சிலைகள் பதுக்கி வைக் கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிலைகளை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதன் பின்ன ணியையும் அவர் போலிசாரிடம் விளக்கி உள்ளார்.

மோடி, ஜெயா இன்று சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று புதுடெல்லியில் சந்தித்துப் பேச உள்ளார். ஈராண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஜெயலலிதா டெல்லி செல்வதால் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. சென்னையில் அவர் பயன்படுத்தும் டொயோட்டா ப்ராடோ காரும் ஜெயலலிதாவுக்காகவே சிறப்பாக உருவாக்கப்பட்ட இரு நாற்காலிகளும் ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் அதிமுகவின் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜெய லலிதாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பை அளிக்க உள்ளனர்.

ஏழு ஆடவர்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது

திருப்பூர்: ஒரே ஊரைச் சேர்ந்த 7 பேரை மணந்து மோசடி செய்த பெண்ணை திருப்பூர் போலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது. பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் தன்னை திருமணம் செய்து கொண்டவரிடம் அதிகளவில் பணம், நகைகளை பறித்து ஏமாற்றி உள்ளார். இந்நிலையில் செல்வகுமார் என்பவர் அண்மையில் திருப்பூர் போலிசாரிடம் மாரியம்மாள் மீது புகார் அளித்தார். அதில், தன்னை யும் சேர்த்து 7 பேரை மாரியம்மாள் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தார்.

80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 80 வயது முதியவர் மீட்பு

புதுக்கோட்டை: 80 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதிய வர் உயிருடன் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் மேற்கு கிரா மத்தைச் சேர்ந்த 80 வயதான மெய்யப்பன் நேற்று முன்தினம் காலை திடீரென மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத் தாரும் உறவினர்களும் கிராமம் முழுவதும் அவரைத் தேடினர்.

இம்முயற்சி பலன் அளிக்காத நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து முனகல் சத்தம் வெளிப்பட்டது. இதையடுத்து மெய்யப்பனின் உறவினர்கள் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி முதியவரை பத்திரமாக மீட்டனர்.

Pages