You are here

இந்தியா

தில்லுமுல்லு கழகங்கள்: விளாசும் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் தம்மை அறவே பிடிக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவும் அதிமுக வும் கட்டிய வீட்டிற்குள் புகுந்த கருநாகங்கள் என்று வர்ணித்தார். “முன்பு நடந்ததைப் போல் இன்று நடப்பதும் சுதந்திர போர் தான். தமிழகத்தைக் கொள்ளை யடிக்கும் அதிமுக ஆட்சியை எதிர்த்து தேர்தல் போர் நடக்க உள்ளது. இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஜெயலலிதா - கனிமொழி

திமுக மகளிரணி செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி

சென்னை: தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையுமே முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்ற வில்லை என திமுக மகளிரணி செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். காணொளி ஆட்சியாக இருந்த அதிமுக ஆட்சி இப்போது ஸ்டிக்கர் ஆட்சியாக மாறிவிட்டது என்றும், அது மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

கூடுதல் துணை ராணுவம்: ராஜேஷ் லக்கானி வலியுறுத்து

 தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

புதுடெல்லி: தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கூடுதல் துணை ராணு வம் தேவை என்று டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வலியுறுத்தினார். தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லி சென்ற அவர், பறக்கும் படையில் புதிதாக மத்திய அரசு அதிகாரிகள், துணை ராணுவத்தினரை சேர்ப் பது பற்றி அங்கு தேர்தல் ஆணை யர்களுடன் ஆலோசனை நடத் தினார். இந்த ஆலோசனையின் போது பதற்றமான வாக்குச்சாவடி கள், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பறக்கும் படையின் எண்ணிக் கையை உயர்த்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு: வேல்முருகன் தகவல்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்

சென்னை: தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். எனவே, கூட்டணி குறித்த முடிவுகளுக்காக சற்றே பொறுமை காப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ், பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் பாமக, திமுக, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம்,” என்றார் வேல்முருகன்.

நெடுமாறன்: மக்களுக்காக போராடுபவர்களை தேர்வு செய்க

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்

சென்னை: தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட, தமிழகத்தின் நலன்களைக் காக்கக்கூடியவர்களுக்கே தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்து அமையக்கூடிய அரசு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். “பயிற்சி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற வழக்காடு மொழி, வழிபாட்டு மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும்.

திருவாரூரில் கருணாநிதி கொளத்தூரில் ஸ்டாலின்

 திமுக தலைவர் கரு­ணா­நிதி

தமிழக சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் பட்­டி­யலை அக்­கட்­சித் தலைவர் கரு­ணா­நிதி நேற்று வெளி­யிட்­டார். சென்னை கொளத்­தூர் தொகு­தி­யில் மு.க.ஸ்டாலினும் திரு­வா­ரூர் தொகு­தி­யில் கரு­ணா­நிதியும் போட்­டி­யி­டு­கின்றனர். 1957ல் தமிழகச் சட்­ட­மன்றத் தேர்­த­லில் களம்கண்ட ­­­­­­­தட்சிணா­மூர்த்தி என்ற முத்­து­வேல் கரு­ணா­நிதி இதுவரை தோல்­வியே காணாதவர். இந்தியாவின் பழுத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இவர் தற்போது 13வது முறையாகப் போட்­டி­யி­டு­கிறார்.

நடக்கப்போவது சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல; யுத்தம்: வர்ணிக்கிறார் விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இருப்பது சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல என்றும் அது ஒரு யுத்தம் என் றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வர்ணித்துள்ளார். தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியை ஆதரித்து கும்மிடிப்பூண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரசாரக் கூட்டத் தில் பேசிய அவர், தேர்தல் யுத்தத்தில் தங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றார். “திமுக தலைவர் கருணாநிதி தேர் தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவதாகக் கூறியுள்ளார், மகிழ்ச்சி. ஆனால் அவர் ஐந்து முறை முதல்வராக இருந்தபோது ஏன் மதுவிலக்கை கொண்டுவரவில்லை?

பண மோசடி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு

பண மோசடி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.3 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏமாற்றிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. நீலாங்கரையைச் சேர்ந்த கோபி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர், உதவிப் பொறியாளர் பணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மொத்தம் 107 பேரிடம் செந்தில் பாலாஜி பணம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா தாம் சொன்னது எதையும் செய்வதற்காகச் சொல்வ தில்லை என்பதைத் தமிழக மக்கள் தெரிந்து வைத்திருப்பதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். “தேர்தல் பிரசாரத்தில் ஈடு படும் முதல்வர் ஜெயலலிதா, பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதை விட்டுவிட்டு, உண்மை ஏதாவது கைவசம் இருந் தால், அதைப் பற்றிப் பேசட்டும் இல்லாவிட்டால் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, முதல்வர் ஜெயலலிதா என்றுதான் பாடத் தோன்றும்.

திமுக, அதிமுகவின் அரசியல் சூழ்ச்சி: தேமுதிக பகிரங்க குற்றச்சாட்டு

தேமுதிக பொருளாளர் இளங்கோவன்

ஈரோடு: திமுகவும் அதிமுகவும் சேர்ந்து அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டிருப்பதாக தேமுதிக பொருளாளர் இளங்கோவன் குற்றம்சாட்டி உள்ளார். வேறொரு கட்சி ஆட்சியமைப்பதைத் தடுப்பதே அவ்விரு கட்சிகளின் எண்ணம் என்றும் இதன் பொருட்டு இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்து செயல்படுவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் கட்சியைவிட்டு வெளியேறியுள்ளதால் தேமுதிகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. திமுக தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் சூழ்ச்சியால் நிர்வாகிகள் சிலர் வெளியேறியுள்ளனர்,” என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Pages