You are here

இந்தியா

பீகார் வெள்ளம்: மோசமான அணை நிர்வகிப்பே காரணம்

­­­பு­து­டெல்லி: பீகாரில் இந்த ஆண்டு வழக்­க­மான அள­விற்­கும் குறை­வா­கவே மழை பெய்­துள்ள போதும் வெள்ளப் பெருக்கு ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அணை சரியாக நிர்வகிக்கப்படாததே காரணம் என்று கூறு­கிறார் சுற்றுச்சூழல் ஆய்­வா­ளர் ஹிமான்‌ஷு தாக்கூர். மத்தியப் பிர­தே­சத்­தின் பன் சாகர் அணையில் கடந்த ஒரு மாதத்­திற்­கும் மேலாக 95.22 விழுக்­காடு தண்ணீர் சேமிக்­கப் பட்டு வந்­துள்­ளது. ஆனால், தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. பன்­சா­கர் அணையில் இனி மேல் குறைவான தண்ணீரே சேமிக்­க­மு­டி­யும் என்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி மொத்­த­மாக நீர் வெளி­யேற்­றப்­பட்­டது.

இந்திய நீர்மூழ்கி கப்பல் ரகசியம் அம்பலம்; விசாரணைக்கு உத்தரவு

புது­டெல்லி: இந்தியக் கடற்­படை­யின் நீர்­மூழ்­கிக் கப்­பல்­கள் குறித்த ரக­சி­யங்கள், ஆஸ்­தி­ரே­லிய பத்­தி­ரி கை­யின் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யா­கி­யி­ருப்­பது பெரும் அதிர்ச்­சியை ஏற்­படுத்­தி­யது. டிசி­எஸ்­என் என்ற நிறு­வ­னம் இந்­தி­யா­வுக்­காக 6 நீர்­மூழ்­கிக் கப்­பல்­களைத் தயா­ரித்து வரு­கிறது. இந்நிலையில், அதன் வடி­வமைப்பு, தாக்கும் திறன் உள்ளிட்டவைகள் போன்ற ரகசியங்கள் கொண்ட 22 ஆயிரம் பக்க ஆவணங்கள் அம்பல மாகி இருப்பதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு மனோகர் பாரிக்­கர் உத்­த­ரவிட்டுள்ளார். “இவை இந்தியாவில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை.

ஸ்டாலின்: பேசுவதற்கு உரிமை வேண்டும்

ஸ்டாலின்:

சென்னை: அதிமுக ஆட்சியில் மாநில நிர்வாகத் துறையால் சுதந் திரமாகச் செயல்பட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டி உள்ளார். சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயார் என்றார். எனினும் திமுக வினர் பேரவையில் பேசுவதற்கான உரிமையைச் சபாநாயகரிடம் இருந்து முறையாகப் பெற்றுத் தரும் தெம்பும் திராணியும் முதல் வர் ஜெயலலிதாவுக்கு உள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார்.

காமராஜர் சிலையிடம் மனு அளித்த கவுன்சிலர்கள்

விருதுநகர்: நகராட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி கவுன்சிலர்கள் காமராஜர் சிலையிடம் மனு அளித்தது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் நகராட்சியில் ஆணையர் பதவிக்குக் கடந்த ஓராண்டாக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் நகராட்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நகராட்சிக் கூட்டமும் நடைபெறவில்லை. அதிமுக சார்பில் நகராட்சித் தலைவராக இருக்கும் சாந்திக்கு உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் அக்கட்சித் தலைமை வாய்ப்பு தராது என தகவல் பரவி உள்ளது. இதனால் நகராட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் அவரும் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.

திமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் ஏற்புடையது அல்ல: வைகோ கருத்து

தூத்துக்குடி: திமுக எம்எல்ஏக்கள் மீதான இடைநீக்க உத்தரவை சபாநாயகர் உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், திமுக எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல என்றார். “சபாநாயகர் தனபால் தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என வைகோ மேலும் தெரிவித்தார்.

ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர்

திருவண்ணாமலை: கொலை வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த காவல்துறை ஆய்வாளரை பணிநீக்கம் செய்து வேலூர் காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை தாலுகா வில் ஆய்வாளராகப் பணியாற் றிய பழனி என்ற அந்த ஆய்வாளர், பணம் கேட்டு வழக்கறிஞர் ஒரு வரிடம் மிரட்டல் தொனியில் பேசிய ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் ஆப் மூலம் பரவியதையடுத்து அவர் மீது நடவடிக்கை பாய்ந் துள்ளது. தேவதாஸ் என்பவர் மீது கொலை வழக்குப் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக அவ ரது வழக்கறிஞர் குமார் என்பவரை தொடர்புகொண்டு பேசியுள்ளார் ஆய்வாளர் பழனி.

‘50 புதிய விமான நிலையங்கள்’

திருச்சி: இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐம்பது புதிய விமான நிலையங்கள் கட்டப் படவிருக்கின்றன. மத்திய விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு இந்த விவரத்தை வெளியிட்டார். திருச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான எரிபொருளுக்கான வரி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடு கிறது. அதை குறைத்தால் பயணி களின் எண்ணிக்கை அதிகரிக் கும். விமானங்களை இயக்கும் செலவுகளும் குறையும்,” என்றார்.

தமிழிசை: போட்டி சட்டமன்றம் நடத்தியது தவறு

தரங்கம்பாடி: திமுகவினர் சட்டமன்ற வளாகத்தில் போட்டிக் கூட்டம் நடத்தியது தவறு என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார். திருக்கடையூர் கோயிலுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். “சட்டத்தை இயற்றக்கூடிய சட்டமன்றத்தில் போட்டி சட்ட மன்றம் நடத்தியது தவறு என்பதாகவே நான் கருதுகிறேன். சபாநாயகர் உருவ பொம்மை எரிப்பு அநாகரீகமானது. “அதே சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவரையும் எதிர்க்கட்சி உறுப்பினர் களையும் சபாநாயகர் இடை நீக்கம் செய்தது தவறு. சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதைவிட வெளி நடப்பு செய்யும் நிலை மிகவும் வருத்தம் அளிக்கிறது.

126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் மீட்பு

சென்னை: தமிழக வழக் கறிஞர்கள் 126 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை அகில இந்திய வழக்கறிஞர்கள் மன்றம் மீட்டுக் கொண்டுள்ளது. முன்னதாக வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தத்தை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு கட்டமாக நீதி மன்றத்தை கடந்த மாதம் 25ஆம் தேதி வழக்கறிஞர்கள் முற்றுகை யிட்டனர். ஆனால் முற்றுகைப் போராட் டம் நடத்தக்கூடாது என்று மன்றம் எச்சரித்தும் வழக்கறி ஞர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால் போராட்டத்தை முன்னின்று நடத்தும் வழக் கறிஞர்கள் அறிவழகன் உட்பட 126 வழக்கறிஞர்களை மன்றம் இடைநீக்கம் செய்து உத்தர விட்டது.

கோவை மாணவிகள் 50 பேருக்கு திடீர் உடல் நலக்குறைவு

கோவை: கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக் குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரி வில் சேர்க்கப்பட்டு அனைவருக் கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் வளாகத்தில் அமைந்துள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வரு கின்றனர். இந்த நிலையில் நேற்றுக் காலை மாணவிகளுக்கு அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

Pages