You are here

இந்தியா

பெண்கள் அதிரடிப் படையின் ஒத்திகைப் பயிற்சி

இந்திய எல்லைக்காவல் படையைச் சேர்ந்த பெண்கள் அதிரடிப் படையினர் நேற்று புதுடெல்லியில் தீவிர ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் அணிகளில் இதுவும் ஒன்று. கோலாகலமாகக் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் இந்தியா தனது ராணுவ பலத்தைக் காட்டுவது வழக்கம். மேலும் பல மாநிலங்களைச் சேர்ந்த கலாசார நடனங்களும் இதில் இடம்பெறும். படம்: ஏஎஃப்பி

தொழிலாளர்களை பாதிக்கும் மலிவு விலைக் கார் சந்தை

ஜெனரல் மோட்டோர்ஸ், ஃபோர்ட் மோட்டோர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த மலிவு விலைக் கார் உற்பத்தியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. அதனால், இந்தியா தெற்காசிய வட்டாரத்தின் மலிவு விலைக் கார் மையமாகி வருகிறது. இந்தியாவின் மலிவு விலை கார் சந்தை பெரியளவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மூன்று டாலர் நாள் கூலிக்கு 12 மணிநேரம் கடுமையாக உழைக்கும் ஆயிரக்கணக்கான எளிய, ஏழைத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணியிடப் பாதுகாப்பு, முறையான பயிற்சி, காப்பீடு என்று எதுவும் இருப்பதில்லை.

போலிசின் தொப்பையைக் கரைக்க ‘8 போட’ புதுத் திட்டம்

சேலம்: போலிசின் தொப்பையைக் குறைக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் எட்டு போட தளம் அமைத்து, அதை அனைவரும் பயன்படுத்த எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக போலிசில் உயர் அதிகாரிகள் முதல் போலிசார் வரை பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரில் 42 விழுக்காட்டினர் தொப்பை கொண்டோராகவும் 18 விழுக்காட்டினர் நோயாளிகளாகவும் உள்ளனர். போலிஸ் என்றாலே மிடுக்கான உடை, கம்பீரமான தோற்றம் என்னும் நிலை மாறிவிட்டது.

ஆயிரம்விளக்கில் ஜெயா புகழைப் பரப்பும் ‘நகை’ கற்பகம்

நகை கற்பகம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கைதியாக சிறையில் போய் உட் கார்ந்திருந்தபோது தமிழகத்தை உலுக்கி எடுத்த அதிமுகவினரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அவர்களில் மிக முக்கிய ஒருவராக விளங்கிய பெண்தான் கற்பகம். இவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட மனு கொடுத்துள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போன போதும் சரி, அதன்பின்னர் அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் சரி, கற்பகம்தான் பலருக்கும் சுடச்சுட செய்தியாக விளங்கினார்.

அரசியலுக்கு வருகிறார் வடிவேலு

நடிகர் வடிவேலு

ஐந்து ஆண்டுகளாக ஓரம் கட்டப் பட்டிருந்த நடிகர் வடிவேலுவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து, ‘கேப்டன்’ விஜயகாந்தை வறுத்தெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2011 சட்டசபை தேர் தலில் அதிமுக, - தேமுதிக கட்சி கள் கூட்டணி அமைத்து போட்டி யிட்டன. அப்போது, தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் இருந்த நடிகர் வடிவேலு திமுக கூட்ட ணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

அவதூறு வழக்கு: நேரில் முன்னிலையாக டிராபிக் ராமசாமிக்கு அழைப்பாணை

டிராபிக் ராமசாமி

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சார்பில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், முதல்வர் ஜெயலலிதா பற்றி டிராபிக் ராமசாமி அவதூறாகப் பேசியது வீடியோ பதிவாக வாட்ஸ்-அப் மூலம் வெளிவந்துள்ளது. இந்தப் பதிவை உளவுத்துறை போலிசார் சேகரித்துள்ளனர்.

லஞ்சம் வாங்கி 100 கோடி ரூபாய் சொத்து சேர்த்த அதிகாரி கைது

படம்: பிசினஸ் டுடே டாட் இன்

விஜயவாடா: லஞ்சம் வாங்கியே நூறு கோடி ரூபாய் குவித்த காவல்துறை அதிகாரியை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்தனர். விஜயவாடாவில் கலால்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ஆதிசே‌ஷு, லஞ்சம் வாங்கி சொத்துகள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து அவரை, அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். இதில் அவர் லஞ்சம் வாங்குவது உறுதியானதையடுத்து அவரது வீடு, உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் ஆதிசே‌ஷு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகள் வாங்கிக் குவித்திருப்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடும் குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடுமையான குளிர் அடித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அன்றாடப் பணியில் ஈடுபட்டுள்ள பால்காரர்.

புதுடெல்லி: கடும் குளிருடன் கூடிய பனிப்பொழிவு காரணமாக டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் வட மாநிலங்களில் பனிப்பொழிவும் குளிரும் நாளுக்கு நாள் அதிக ரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் இம்முறை குளிரின் அளவு மக்களால் தாங்கமுடியாத அளவில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஆளுநர் உரை குறித்து விஜயகாந்த் கடும் விமர்சனம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக மக்கள் விரோத அதிமுகவின் ஆட்சி நடைபெற்று வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் ஆற்றிய உரையானது, முதல்வர் ஜெயலலிதாவை யும் அவரது ஸ்டிக்கர் அரசாங் கத்தையும் பாராட்டிப் புகழ்ந்து தள்ளும் புகழுரையாக மட்டுமே இருந்தது என விமர்சித்துள்ளார். “தமிழக ஆளுநர் ஆற்றியுள்ள உரை குறித்து தேமுதிக சார்பில் நான் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை.

விருப்ப மனுத் தாக்கல்: அதிமுகவினர் உற்சாகத்துடன் பங்கேற்பு

விருப்ப மனுத் தாக்கல்: அதிமுகவினர் உற்சாகத்துடன் பங்கேற்பு

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் விருப்ப மனுக்கள் நேற்று முன்தினம் முதல் பெறப்படுகின்றன. மனுக்கள் விற்பனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் திரளாக வந்திருந்தனர். படம்: ஊடகம்

Pages