You are here

இந்தியா

குற்றச்செயல்களை ஒடுக்க குண்டர் சட்ட விதிமுறையில் அரசு மாற்றம்

திண்டுக்கல்: குண்டர் சட்ட விதிமுறையை அரசு தளர்த்தி யிருப்பதால் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் பீதி அடைந்துள் ளனர். ஏற்கெனவே வழக்கு உள்ளவர் களைத்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற விதி தற்போது தளர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில், திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உட்பட, ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடு படுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதற்கு காவல்துறை எஸ்பியின் பரிந்துரையை ஏற்று ஆட்சியர் உத்தரவிடுவார்.

சென்னையில் ஐடி மாநாடு

சென்னை: சென்னையில் இம்மாதம் 27, 28ஆம் தேதிகளில் தகவல் தொழில்நுட்பத் துறை மாநாடு நடைபெறுகிறது. இது குறித்துப் பேசிய மாநாட்டின் தலைவர் ரவி விசுவநாதன், “சென்னையில் ‘கனெக்ட்’ என்ற வருடாந்திர மாநாடு இதுவரை 15 முறை நடத்தப் பட்டுள்ளது. இம்மாநாட்டின் 16வது பதிப்பு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும்,” என்றார்.

திருச்சி விமான நிலையத்தில் ஸிக்கா சோதனை

திருச்சி: திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணி களிடம் புதன்கிழமையிலிருந்து ஸிக்கா கிருமி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் இறுதியிலிருந்து சென்னை விமான நிலையத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, திருச்சி விமான நிலையத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

புறாவின் காலில் கட்டி கடிதம் அனுப்பினீர்களா என நீதிமன்றம் கேள்வி

சென்னை: சவுதி அரேபியா சென்று கொத்தடிமைகளாக உள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் அளித்த விளக்கத்தை ஏற்காத உயர் நீதிமன்ற நீதிபதிகள், மீனவர்கள் கடந்த ஆறு மாதங் களாக அவதிப்படும் நிலையில் அவர்களின் நிலை குறித்து சென் னையில் உள்ள மீன்வளத்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தை புறாவின் காலில் கட்டி அனுப்பி னீர்களா என்றும் கேள்வி எழுப்பி தங்களுடைய கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கட்டுமானம் இடிந்து விழுந்து விபத்து: இருவர் பரிதாப பலி

விழுப்புரம்: நட்சத்திரத் தங்குவிடுதியின் கட்டுமானம் இடிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாகப் பலியாகினர். நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேனிமலையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரிகள் மணிகண்டன் (35 வயது), சரவணன் (40 வயது), வடிவேல் (35 வயது) ஆகியோர் அப்புதிய கட்டடத்தின் இரண்டாவது மாடியின் மேல் பகுதியில் சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து சாரத்தின் மீது விழுந்தது. இதையடுத்து மூவரும் கீழே விழுந்தனர். இவ்விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

கோவில் விழாவில் மின்சாரம் தாக்கி நால்வர் பலி: 16 பேர் படுகாயம்

நெல்லை: மாதா கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பரதவர் உவரியில் இச்சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள மாதா கோவிலில் 10 நாட்களாகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் சப்பர பவனி வலம் வந்தது. அப்போது அப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி ஒன்று சப்பரத்தின் மீது எதிர்பாராவிதமாகப் பட்டுள்ளது. இதில் சப்பரம் மீது மின்சாரம் பாய அதை இழுத்துச் சென்ற இருபது பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அனைவரும் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நால்வர் உயி ரிழந்தனர்.

கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

பெங்களூரு: தமிழ் நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதைக் கண் டித்து இன்று வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு கர்நாட காவில் உள்ள அனைத்து அமைப்பு களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகாவில் இன்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்; வாகனப் போக்கு வரத்தும் நிறுத்தப்படும். பெங்க ளூருவில் இன்று போராட்டக் காரர்களால் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருள் சேவை வரி மசோதா நேற்று நிறைவேறியது

புதுடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது. நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருள் சேவை வரி மசோதாவில் அதிபர் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார். இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேறியதால் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளது.

ஜெட்லி: ஆந்திராவுக்கு சிறப்பு நிதி தருகிறோம்; சிறப்பு அந்தஸ்து இல்லை

புதுடெல்லி: ஆந்திர மாநிலத்திற்கு அவர்கள் கேட்ட சிறப்பு அந்தஸ்தை தரமுடியாது. ஆனால், அம்மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை கருத்தில்கொண்டு அந்த சட்டத்தின்படி ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திராவின் பொல்லாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு சிறப்பு நிதி வழங்குவதுடன் வரிச்சலுகையும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடனை அடைக்க குழந்தையை விற்பனை செய்த தம்பதி கைது

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் கடனை அடைக்க குழந்தையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதியை போலிசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் கான்பூரில் பாபுபூர்வா காலனியில் வசித்து வருபவர் காலித். இவரது மனைவி சயீதா. இந்தத் தம்பதிக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தையை விற்று அவர்களுக்கு இருந்த கடனை அடைத்துவிட முடிவு செய்தனர்.

Pages