You are here

இந்தியா

சட்டத்தை மிதிக்கும் அதிமுக அரசு: ராமதாஸ் விமர்சனம்

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: மனித உரிமைகளை மதிக்கத் தெரியாதவர் குழந்தைகள் உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டத்தை மிதித்து, நீதியை வீதியில் நிறுத்தும் செயலை சர்வசாதார ணமாக செய்யக்கூடிய அரசு ஜெயலலிதா தலைமையிலான அரசுதான் என்று சாடியுள்ளார். “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்த ராகப் பணியாற்றிய கல்யாணி மதிவாணனை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக நியமித்துள் ளது அரசு.

கருணாநிதி: ஆக்கப்பூர்வமான திட்டங்கள் என்றாலே அதிமுகவினருக்கு ஒவ்வாமை

திமுக தலைவர் கருணாநிதி

சென்னை: ஆக்கப்பூர்வ திட்டங் கள் என்றால் அதிமுகவினருக்கு ஒவ்வாமை (அலர்ஜி) என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயங்கொண்டம் பகுதி மின் திட்டத்துக்காக ஆயிரக்கணக் கான விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 8,300 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக எவ்விதப் பணியும் மேற் கொள்ளப் படவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை: தமிழிசை கவலை

மதுரை: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், மக்களுக்கு நல்லது செய்ய மத்திய அரசுடன் தமிழக அரசு போட்டியிட வேண்டும் என்றார். “சட்டப்பேரவை நுழை வாயில் அருகேயே காவல்துறை பெண் உதவி ஆய்வாளர் தீக்குளிக்க முயன்றுள்ளார். காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே சாதாரண பெண்க ளின் பாதுகாப்பு குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் தமிழக முதல்வர் அதிக அக்கறை காட்ட வேண்டும்,” என்றார் தமிழிசை.

தமிழகத்தில் சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்

சென்னை: தமிழகத்தில் சிறார் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பல்வேறு தகாத செயல்களில் ஈடுபட்டதாக சிறார்கள் மீது 1,814 வழக்குகள் பதிவாகின. இவற்றில் 1,483 வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளில் பதியப்பட்டவை. இதேபோல, கடந்த 2014ஆம் ஆண்டு சிறார் மீது 1,549 வழக்குகள் பதியப்பட்டன. 2014ல் பதியப்பட்ட வழக்குகளைவிட, 2015ஆம் ஆண்டு 265 வழக்குகள் அதிகரித்துள்ளன. மேலும், பல்வேறு வழக்குகள் தொடர்பாக 2014ல் 1,892 சிறார்களும், 2015ல் 2,421 சிறார்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வயிற்றில் போதைப்பொருள் கடத்திய பெண்

சென்னை: இலங்கையில் இருந்து விமானம் மூலம் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய பெண், வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை கொழும்பில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சாந்தினி என்ற அப்பெண்ணின் வயிற்றில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை அவர் கேப்சூல் வடிவில் விழுங்கியிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதானார்.

பிரேமலதாவுக்குப் புதிய பதவி: தேமுதிக செயல் தலைவராகிறார்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தனது மனைவிக்குத் தேமுதிகவில் முக் கியப் பதவி அளிக்க அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அநேகமாக தேமுதிகவின் செயல் தலைவராகப் பிரேமலதா நியமிக் கப்படலாம் எனத் தெரிகிறது.

தமிழக அரசுக்கு ரூ.14,869 கோடி இழப்பு; ஊழல், முறைகேடுகளே காரணம் என்கிறார் அன்புமணி ராமதாஸ்

சென்னை: முறைகேடு, ஊழல் காரணமாக தமிழக அரசுக்கு ஒரே ஆண்டில் 14,869 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கையைச் சுட்டிக் காட்டி அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் ஊழலைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதையே தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கடும் உயர்வு

பிள்ளையார் சதுர்த்தி, முகூர்த்த நாட்கள் காரணமாக மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை வெகுவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவே மிக அதிக விலை என வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று முகூர்த்த நாள், இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள். எனவேதான் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட வியாபாரிகள், இந்தாண்டு மல்லிகை விளைச்சல் குறைந்துள்ளதாகவும் கூறினர். படம்: தகவல் ஊடகம்

தமிழகத்தில் குலேபகாவலி ஆட்சி அமையும்: அதிமுக எம்பி பேச்சு

ராமநாதபுரம்: தமிழகத்தில் மிக விரைவில் குலேபகாவலி ஆட்சி ஏற்படும் என அதிமுக எம்பி அன்வர் ராஜா கூறியுள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத சாதனை என்றார்.

சிறுவாணி ஆற்றில் அணை: கேரளாவை கண்டித்து கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சுயநலத்திற்காக ஆட்சி நடத்து வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் கேரளாவை கண்டித்து கோவையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, அண்டை மாநில முதல்வர்களோடு நல்ல உறவை வைத்திருந்ததாகக் கூறினார். “ஜெயலலிதா தன்னுடன் இருக்கும் குடும்பத்தின் நலனுக்காகவே ஆட்சி செய்கிறார். வசூல் செய்யும் அமைச்சர்களுக்காக ஒரு ஆட்சியை நடத்துகிறார்.

Pages