You are here

இந்தியா

500 போலி மருத்துவர்களுக்கு வலைவீச்சு

திண்டுக்கல்: ஏறத்தாழ 500 போலி மருத்துவர்களுக்கு திண்டுக்கல் காவல்துறையினர் வலைவீசி உள்ளனர். போலி மருத்துவர்களைக் கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியன் தெரிவித்தார். போலி மருத்துவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் திரட்டிவருவதாக அவர் கூறினார்.
மிக விரைவில் 500 போலி மருத்துவர்களும் கைதாக வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி பாவனை பயிற்சி

ஹைத­ரா­பாத்: இந்­தி­யப் பெருங்க­டல் பகுதியை ஒட்­டி­யுள்ள இந்தியா உள்­ளிட்ட 23 நாடுகள் பங்­கெ­டுக்­கும் இரண்டு நாள் சுனாமி பாவனை பயிற்சி நேற்று தொடங்­கி­யது. இந்த பாவனை பயிற்­சி­யின் மூலம் எச்­ச­ரிக்கை, பேரி­டர்­களைக் கண்ட­றி­தல் போன்றவை சோதிக்­கப்­படும். மேலும் அதி­கா­ரி­களுக்கு கிடைக்­கும் பேரிடர் எச்­ச­ரிக்கை தக­வல்­கள் சரியான நேரத்­தில் மக்­களைச் சென்றடை­கின்ற­னவா என்­ப­தும் கண்ட­றிப்­படும். நேற்று காலை தொடங்கப்­பட்ட இந்த பாவனை பயிற்­சி­யில், இந்­தோ­னீ­சி­யா­வின் தெற்கு சுமத்­ரா­வில் ரிக்டர் அளவில் 9.2 என நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தாக கொள்­ளப்­பட்­டது.

அறுவை சிகிச்சைக்கு தாமதம் செய்த மருத்துவர்கள்; நோயாளி தீக்குளிப்பு

திருவனந்தபுரம்: வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 36 வயது சுனில் என்பவர் நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காகச் சென்றார். பரிசோதனையின்போது சுனிலின் வயிற்றில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதற்கான நாளும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சை தள்ளிப்போய்கொண்டே இருந்தது.

'காவிரி விவகாரம் ஜெயலலிதாவின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது'

தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: காவிரி கண்காணிப்பு குழுவிடம் தமிழகம் முறையிடாதது முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.

காவிரித் தீர்ப்பால் கர்நாடகாவில் வன்முறை வெடித்தது

போராட்டக்காரர்கள் சாலைகளில் பழைய பொருட்களைக் குவித்து அவற்றுக்குத் தீ வைத்தனர். 

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து பத்து தினங்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளிலும் வன் முறை வெடித்தது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட மாண்டியா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். மேலும் அம்மாவட் டத்தில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி கள் மூடப்பட்டன.

பக்தர்களைக் கவர்ந்த பிள்ளையார் சிலைகள்

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வடிவங்களில், பலவிதமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இச்சிலைகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. சிலைகளுக்கு தினந்தோறும் முறைப்படி பூசைகள் செய்யப்படுவதுடன், பல இடங்களில் பக்தர்களுக்குப் பிரசாதங்களும் விநியோகிக்கப்படுகின்றன. பொது இடங்களில் உள்ள சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைக்கும் நிகழ்வு வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. படம்: தகவல் ஊடகம்

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கைது

திருச்சி: இலங்கையில் இருந்து 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ தங்கத்தை கடத்தி வந்த இரு பெண்களை திருச்சி விமான நிலையத்தில் போலிசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் காலை திருச்சி வந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் வழக்கமான சுங்கத்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது இரு பெண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில், இருவரும் சொந்த நகைகளை அணிந்து வருவதுபோல் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

போலி வங்கி நடத்திய நான்கு பேர் கைது: ஒருவருக்கு வலைவீச்சு

தர்மபுரி: போலி வங்கி நடத்தி வந்த நான்கு பேரை தர்மபுரி போலிசார் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட தனியார் வங்கியின் பெயருடன் கூடுதலாக சில எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு அவ்வங்கியின் கிளை போன்று நால்வரும் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தனர். இதுகுறித்து தனியார் வங்கியின் சேலம் கிளை மேலாளர் போலிசில் புகார் அளித்தார். நான்கு மோசடிப் பேர்வழிகளும் வங்கிப் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைச் சேர்த்து வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி வசூலித்தது தெரிய வந்தது. நால்வரும் கைதான நிலையில், மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

செங்கல் சூளையிலிருந்து கொத்தடிமைகள் 14 பேர் மீட்பு

கோவை: செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய வந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தர்மபுரியை சேர்ந்த இவர்கள் அனைவரும் கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி ஆர்டிஓ சின்னச்சாமிக்கு தகவல் கிடைக்க, அவர் போலிசாருடன் செங்கல் சூளைக்குச் சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து 12 வயதுச் சிறுமி உட்பட, 14 பேர் மீட்கப்பட்டனர்.

முன்னாள் தேமுதிக எம்எல்ஏக்களுக்கு திமுகவில் முக்கிய பதவிகள் - அன்பழகன்

திமுக பொது செய­லா­ளர் க.அன்­ப­ழ­கன்

முன்னாள் தேமு­திக சட்டமன்ற உறுப்­பி­னர்­க­ளான வி.சி.சந்­தி­ர­­­ கு­மார், எஸ்.ஆர்.பார்த்­தி­பன், சி.எச்.சேகர் ஆகி­யோ­ருக்கு மாநில அள­வில் முக்கிய பத­வி­களை வழங்­கி­யுள்­ளார் திமுக தலை­வர் கரு­ணா­நிதி. ‘மக்கள் தேமு­திக’வினர் ஈரோட்­டில் மாநாடு ஒன்றை நடத்­தி­னர். அப்­போது அவர்­கள் கட்­சியைக் கலைத்­து­விட்­டுத் திமு­க­வில் இணை­வ­தாக அறி­வித்­த­னர். அவர்­களுக்­குத் திமு­க­வில் மாநில அள­வில் முக்கிய பத­வி­களை திரு கருணாநிதி வழங்கியுள்ளார். இது­கு­றித்­துத் திமுக பொது செய­லா­ளர் க.அன்­ப­ழ­கன் நேற்று ஓர் அறிக்கை வெளி­யிட்­டார்.

Pages