You are here

இந்தியா

அரசு வேலை பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதமாக உயர்வு

சென்னை: அரசு அலு­வ­ல­கங்களில் பணி­பு­ரி­யும் பெண்­களின் மகப்­பேறு கால விடுப்பு 9 மாதங்க­ளாக உயர்த்­தப்­படும் என்று தமி­ழக அரசு அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பாகப் பேரவை­யில் வியா­ழக்­கி­ழமை அறி­விப்பு ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. கடந்த சட்­ட­மன்றத் தேர்­த­லின்­போது விடுக்­கப்­பட்ட தேர்­தல் அறிக்கை­யில் பெண்­களுக்­கான மகப்­பேறு விடுப்­புக்­கா­லம் 9 மாதங்க­ளாக உயர்த்­தப்­படும் என்று அதி­முக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தது.

நேதாஜி பற்றிய ரகசிய கோப்பு வெளியானது

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

இந்தியாவின் சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவப் படையை நிறுவி போராட்டத்தில் ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார் என்-று ஜப்பான் அரசாங்கத்தின் 60 ஆண்டுகள் பழமையான ரகசிய ஆவணம் உறுதிப்படுத்தி யுள்ளது. ஜப்பானுக்கு பயணம் மேற் கொண்ட சுபாஷ் சந்திரபோஸ் விசித்திரமான முறையில் காணாமல் போனார். அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று ஒரு தரப் பினரும் மறைவான இடத்தில் அவர் உயிருடன் வாழ்ந்தார் என்று மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர்.

ஜெயலலிதா சொல்வது பொய்: ராமதாஸ் புகார்

பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள் என ஜெயலலிதா கருதுவதாக அவர் கூறியுள்ளார். “64 நிறுவனங்கள் மூலம் தமிழகத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய். சட்டப்பேரவையில் கேள்வி கேட்க ஆள் இல்லாத நேரத்தில் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிடு கிறார்,” என்று ராமதாஸ் சாடியுள்ளார்.

விடைபெற்ற ரோசய்யா; வித்யாசாகர் ராவ் புதிய ஆளுநராக நியமனம்

தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ரோசய்யா

சென்னை: தமிழக ஆளுநராகப் பொறுப்பு வகித்து வந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந் ததை அடுத்து தமிழகத்துக்குப் புது ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மகாராஷ்டிர ஆளுந ராகப் பதவி வகிக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை யும் கூடுதலாகக் கவனிப்பார் என அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. 83 வயதான ரோசய்யா கடந்த 5 ஆண்டுகளாகத் தமிழக ஆளுந ராகச் செயல்பட்டார். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசிடம் பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.

தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் அமைத்த ரகசிய குழு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ரகசிய வியூகங்கள் அமைத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் ரகசியக் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி கண்டதை அடுத்து சோர்வடைந்திருந்த திமுகவினரை பல வழிகளிலும் உற்சாகப்படுத்தி வந்தார் மு.க.ஸ்டாலின். தற்போது உள்ளாட்சித் தேர் தலை எதிர்கொள்ள அவர் முக்கிய நிர்வாகிகளைத் தயார் படுத்தி வருகிறார்.

தங்கம், வெளிநாட்டுப் பணம் கடத்த முயற்சி: பெண் உட்பட நால்வர் கைது

சென்னை: இலங்கையிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பய ணம் மேற்கொண்டவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக் கம்போல் சோதனை நடத்தினர். அப்போது இலங்கையைச் சேர்ந்த சாந்தி சோமசுந்தரம் என்ற 46 வயதுப் பெண் பயணி மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்ட போது அவர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.30 லட்சம். இதேபோல் சென்னையில் இருந்து மலேசியாவுக்குக் கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் மூவர் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்தியாவில் முதலீடு செய்வோருக்கு நிரந்தரவாசத் தகுதி

இந்­தி­யா­வில் முதலீடு செய்யும் வெளி­நாட்­டி­ன­ருக்கு நிரந்த­ர­வா­சத் தகுதி உள்­ளிட்ட சலுகை­­களை இந்தியா வழங்க­வுள்­ளது. இந்­தி­யா­வில் முத­லீ­டு­களைக் கவரும் முயற்­சி­யில் 18 மாதங் களில் யுஎஸ் 1.5 மில்­லி­யன் டாலர் (2.05 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) முதலீடு செய்யும் வெளி­நாட்­ட­வ­ருக்கு இந்­தி­யா­வில் நிரந்த­ர­வா­சத் தகுதி வழங்க இந்திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. அந்நிய முத­லீட்டை ஈர்த்து வரும் அதே­நே­ரத்­தில் இந்­தி­யா­வில் முதலீடு செய்யும் வெளி ­நாட்­டி­னருக்கு பல்வேறு சலுகை­களை­யும் இந்திய அரசு அளித்து வரு­கிறது.

இலங்கை பங்கேற்காத அனைத்துலக விசாரணை தேவை - திருமாவளவன்

திருமாவளவன்

சென்னை: இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பை இலங்கையிடம் கொடுப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் 25,000 தமிழர்கள் மாயமாகி உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து இலங்கை அரசு இடம்பெறாத வகையில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

மனைவியின் சிறப்பைப் போற்ற ‘மனைவி தினம்’

மனைவியின் சிறப்பைப் போற்ற ‘மனைவி தினம்’

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நேற்று முன்தினம் மனைவி நாள் அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தந்தையர் தினம், அன்னையர் தினம், கணவர் தினம், குழந்தைகள் தினம் கொண்டாடப் படுவதைப் போல் மனைவியின் சிறப்பைப் போற்றும் விதத்தில் ‘மனைவி தினம்’ என்று யாரும் கொண்டாடுவது இல்லை எனக் கோவில் தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். இக்கோவிலில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றார் அவர். இதில் ஏராளமான தம்பதியர் பங்கேற்றனர். படம்: ஊடகம்

மின்துறையில் பெரும் ஊழல்: அரசுக்கு ராமதாஸ் கேள்வி

ராமதாஸ்

சென்னை: மின்துறையில் நடைபெற்ற ஊழலின் எதிரொலியாக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், முன் னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு என்ன தண்டனை எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் மின் சாரக் கொள்முதலில் ஞானதேசிகன் ஒரு யூனிட்டுக்கு தலா 20 காசும் நத்தம் விஸ்வநாதன் தலா 2 ரூபாயும் கையூட்டு பெற்றதாகச் சாடியுள்ளார்.

Pages