You are here

இந்தியா

என்ன படித்துள்ளார் மோடி? கல்வி விவரத்தை கெஜ்ரிவாலுக்கு வழங்க உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வழங்கும்படி டெல்லி, குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கடந்த 1978-ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் 1983-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்ததாகவும் கூறியிருந்தார்.

லஞ்சம் வாங்கி ரூ.800 கோடி சொத்து குவித்த அதிகாரி கைது

ஆதிமூலம் மோகன்

காக்கிநாடா: ஆந்திரப் பிரதேசத் தில் போக்குவரத்துத் துறை துணை ஆணையர் ஆதி மூலம் மோகன் லஞ்சம் வாங்கி ரூ.800 கோடி சொத்து குவித்ததன் தொடர்பில் கைது செய்யப் பட்டார். ஆந்திர மாநிலம் காக்கி நாடாவைச் சேர்ந்த மோகனின் வீட்டில் இருந்தும் அவரது உறவினர் வீடுகளில் இருந்தும் பலதரப்பட்ட விலையுயர்ந்த கற்கள், வைரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்த மோகனின் 9 வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய சோதனையில் சுமார் ரூ.100 கோடி முதல் ரூ. 120 கோடி வரையிலான சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த ரத்தினங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

எம்பிக்களுக்கு 100% சம்பளம் உயர்த்த பரிந்துரை

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்க ளவை, மாநிலங்களவை உறுப் பினர்களுக்கு தற்போது மாதச் சம்பளமாக ரூ.50,000மும் தொகுதிப்படியாக ரூ.45,000மும் வழங்கப்படுகிறது. இது தவிர அலுவலகப்படியாக மேலும் ரூ.45,000 பெறுகின்றனர். இந்நிலையில், எம்பிக்களின் சம்பளத்தை ரூ.50,000த்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் தொகுதிப் படியை ரூ.45,000த்தில் இருந்து ரூ. 90,000 ஆக உயர்த்தவேண் டும் என்று பரிந்துரைத்துள்ளது. பரிந்துரை ஏற்கப்பட்டால் எம்பிக் களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ. 1,40,000த்தில் இருந்து ரூ. 2,80,000ஆக உயரும்.

திருமணத்தில் குறிதவறி மணமகனைத் துளைத்தது துப்பாக்கிக் குண்டு

ஹிசார்: ஹரியானாவில் திருமண வரவேற்பு விழாவில் கொண்டாட்டத்தை கலகலப்பூட்ட நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மணமகன் படுகாயமடைந்தார். ஹிசார் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமகனுடன் அவரது நண்பர்களும் உறவினர் களும் கொண்டாட்டத் தில் ஈடுபட்டபோது, மகிழ்ச்சி வெள்ளத் தில் மிதந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி மணமகன் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த மணமகன் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். “காயமடைந்த மணமகனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று மன்டீப் சிங் என்ற போலிஸ் அதிகாரி கூறினார்.

சீமான்: இரு ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிந்தால் நன்மை

சீமான்: இரு ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிந்தால் நன்மை

தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மீண்டும் மீண்டும் திமுக, அதிமுகவுக்கே வாக்களித்தால் நாம் உருப்பட முடியாது,” என்றார். இந்த இரு ஊழல் கட்சிகளையும் தூக்கி எறிந்தால் மட்டுமே தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்றும் அவர் சொன்னார். “கருணாநிதி கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தார். ஜெயலலிதா 15 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். ஆண்டுதோறும் 2,500 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு நீர்த் தேக்கமும் இவர்கள் ஆட்சியில் கட்டப்படவில்லை.

வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று முடிவடைந்தது. அடுத்த மாதம் 16ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறு கிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் 6வது நாளான நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு முடிவுக்கு வந்தது. அதிமுக, திமுக, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று பெரும்பாலும் சுயேச்சை வேட்பாளர்களே மனுக்களை சமர்பித்தனர்.

அன்புமணி: திருட்டுக் கதாநாயகன் அறிக்கை

மதுரை: பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை வந்த பாமக முதல்வர் வேட்பாளர் அன்பு மணி ராமதாஸ் அங்கு செய்தி யாளர்களிடம் பேசினார். “அதிமுகவும் திமுகவும் மக்க ளிடம் பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருகின்றன. அதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார் கள். திமுக எங்களைக் காப்பி யடித்துத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. கருணாநிதி மதுவிலக்குக் குறித்து முன்னுக் குப் பின் முரணாகப் பேசி வரு கிறார். சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையே கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால் அது திருட்டுக் கதாநாயகன்.

தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் வசந்தகுமார்

தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் வசந்தகுமார்

சென்னை: தமிழகத்திலேயே ஆகப்பெரிய பணக்கார வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் ஆவார். இவர் வெளியிட்ட சொத்து விவரங்களில் தமக்கு ரூ 332.27 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித் துள்ளார். மேலும் ரூ. 122.53 கோடி கடன் இருப்பதாகவும் அவர் தமது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இதுவரை வேட்பு மனுத் தாக் கல் செய்த கோடீஸ்வர வேட் பாளர்களில் ‘வசந்த் அண்ட் கோ’ நிறுவன உரிமையாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ‘வசந்த் அண்ட் கோ’ கடைகளின் வருவாய் அடிப் படையில் அவர் தமது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார்.

மூவாயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளையர் பலி

மதுரை: மூவாயிரம் அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலா பயணி கார்த்தி கேயன் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 29 வயதான அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆறு நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்கள் இருவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர், தடை செய்யப்பட்ட மலைப் பகுதிக்கு இரவில் சென்றுள்ளனர். அங்கு புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது கார்த்தி கேயன் மூவாயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

சுவர் விளம்பரப் பணம் பிரிப்பதில் தகராறு: அதிமுக நிர்வாகி பலி

வேலூர்: தேர்தலுக்கான சுவர் விளம்பரப் பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி அதிமுக வேட்பாளரின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் சுவர் விளம்பரம் எழுத, கட்சி முகவர்களிடம் ரூ.5 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. இது கிளைச் செயலர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளை நிர்வாகி குப்புசாமி, தனக்குரிய தொகை வரவில்லை என சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு மூண்டு, கைகலப்பில் முடிந்தது.

Pages