You are here

இந்தியா

மூன்று நாள் முதல்வரின் மனம் உருகிய உரை: விவசாயிகளுக்காக பாடுபடுவேன்

பெங்களூரு: கர்நாடகாவின் மூன்று நாள் முதல்வரான எடி யூரப்பா நேற்று பதவி விலகுவதற்கு முன் சட்டமன்றத்தில் உணர்ச்சி மிகு உரையாற்றினார். கர்நாடக சட்டமன்றத் தேர்த லுக்குப் பிறகு காங்கிரஸ், மதசார் பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்க முடிவெடுத்து முதல்வர் வேட்பாளராக குமாரசாமியை முன்னிறுத்தியது. ஆனால் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா, கர்நாடக ஆளுநரை சந்தித்த நிலையில், அவர் மே 17ஆம் தேதி முதல்வரானார்.

அமைச்சராக்குவதாக காங்கிரஸ் உறுப்பினரிடம் பாஜக பேரம்

பெங்களூரு: பெரும்பான்மை இல் லாமல் முதல்வராக பதவியேற்ற பாஜகவின் எடியூராப்பா காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய தாகக் கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மே 17ஆம் தேதி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்ளவிருந்தார். ஆனால், பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க மற்ற கட்சியிலிருந்து 8 எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும்.

இந்தியாவில் வேகமாகக் குறையும் நிலத்தடி நீர்மட்டம்: நாசா எச்சரிக்கை

புதுடெல்லி: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமியின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து ஆராய்வதற்காகச் செயற்கைக்கோள் ஒன்றை அனுப்பியிருந்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முதற்கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள், மத்திய கிழக்கு நாடுகள், கலிஃபோர்னியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி திட்டமிட்டுக் கொல்லப்பட்டதாக முன்னாள் காவல் ஆணையர் சந்தேகம்

புதுடெல்லி: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட கொலை என்று ஓய்வு பெற்ற முன்னாள் டெல்லி துணைக் காவல் ஆணையர் வேத் பூ ஷன் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உயிர் இழந்தார். அவர் மது போதையில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தனியார் துப்பறி யும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூ ஷன் சில தகவல்களை நேற்று முன்தினம் வெளியிட்டார். “ஸ்ரீதேவி மரணம் அடைந்த விதத்தை பார்த்தாலே அவரை திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர் என்று தெளிவாக தெரிகிறது.

தமிழக விவசாயிகளுக்கு ரூ.3,265 கோடி இழப்பீடு

சென்னை: பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தமிழக விவசாயிகளுக்கு 3,265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர 31 மாவட்டங்களில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 31,85,000 ஏக்கர் பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக அதிக பட்சமாக இழப்பீடு பெற்றுத் தந்து நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

விஜயகாந்துடன் சரத்குமார் கூட்டணி

திருநெல்வேலி: விஜயகாந்த் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். நடிகர் சரத்குமார் நேற்று நெல்லையில் கட்சிப் பிரமுகர் இல்ல விழாவில் பேசியபோது, “கமல் கட்சியைத் துவக்கி மக்களைச் சந்தித்து வருகிறார். அதனை வரவேற்கிறேன். கமல், ரஜினி என் சக பயணிகள்தான். அரசியல், கலைத் துறையில் என் ஒரே ஒரு நண்பர் என்றால் விஜயகாந்த்தான். எதிர்கால அரசியலில் விஜயகாந்துடன் இணைந்து போட்டியிட ஆர்வமாக உள்ளேன்,” என்று கூறினார்.

மத்திய அரசின் காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு ஒப்புதல்

புதுடெல்லி: காவிரி பிரச்சினை தொடர்பில் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல் திட்டத்தை நேற்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக இதை அரசிதழில் வெளியிடவும் உத்தரவிட் டது. அதேவேளையில் செயல் திட்டத்துக்கு எதிராக கர்நாடகா, கேரளா தாக்கல் செய்த கோரிக்கைகளையும் நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து நேற்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். மத்திய அரசு தாக்கல் செய் துள்ள காவிரி வரைவு செயல் திட் டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உடனே இதனை அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதன் தாக்கத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதே நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அம்மையம் கூறியுள்ளது. படம்: தமிழக ஊடகம்

காவிரி வாரியம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு முன் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. நீர் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட உள்ள அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயர் வைக்கவேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதில், காவிரி பிரச்சினையில் இறுதி முடிவெடுக்க மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

கோவில் சிலை முறைகேடு: தீவிரமடைந்த விசாரணை

பழனி: பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கான சிலையை வடிவமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது ஆன்மிக அன்பர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. இம்முறைகேடு தொடர் பாக சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா, அப்போ தைய கோவில் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இம் முறைகேட்டில் அறநிலையத் துறை நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்ட இரு வருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

Pages