You are here

இந்தியா

தினகரன் புதுவை பண்ணை வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பொம்மையார்பாளையத்தில் உள்ள டிடிவி தினகரன் பண்ணை வீட் டில் வருமானவரித்துறை ஆய்வு நேற்று மீண்டும் நடந்தது. தினகரனின் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது இந்தப் பண்ணை வீட்டின் சில அறைகளை வருமான வரித்துறையினர் முத்திரையிட்டு மூடிவிட்டுச் சென்றனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பண்ணை வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அந்த அறைகளைத் திறந்து சோதனையைத் தொடங் கினர்.

ஒதுக்கும் தலைமை: ஆ.ராசா கடும் அதிருப்தி

சென்னை: ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி ஆகிய இரு வரின் செயல்பாடுகளுக்கு திமுக தலைமை திடீர் முட்டுக்கட்டை விதித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் கட்சித் தலைமை மீது இருவரும் அதிருப்தி யில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பில் பல்வேறு அதிரடி தகவல்களுடன் கூடிய புத்தகத்தை எழுதியுள்ளார் ஆ.ராசா. அதை மிக விரைவில் வெளியிட அவர் திட்டமிட்டிருந்தார். அப்புத்தகத்தில் காங்கிரஸ் கட்சி, முந்தைய ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு குறித்து அவர் கடுமையான விமர்சனங் களை முன்வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிடத்தில் கம்பு சுற்றுகிறார் ரஜினி: சீமான் கடும் விமர்சனம்

சென்னை: ஜெயலலிதா இருந்தபோதே ரஜினி அரசியலுக்கு வராதது அப்பட்டமான கோழைத்தனம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள் ளார். அவர் அளித்துள்ள அண்மைய பேட்டியில் ரஜினியின் செயல்பாடு வெற்றிடத்தில் கம்பு சுற்றுவது போல உள்ளதாக விமர்சித்துள்ளார். “ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோதே களத்தில் இறங்கி எதிர்த்தவர் விஜயகாந்த். திரைக்கவர்ச்சி கதாநாயகனை அவதார புருஷர்களாக நினைத்த காலம் உண்டு. இப்போது அது தேவையில்லை,” என்றார் சீமான்.

கட்சியை மீட்பதே இலக்கு: தினகரன் உறுதி

சென்னை: தனது தலைமையில் தனிக்கட்சி தொடங்க இருப்ப தாகக் கூறப்படுவது வெறும் வதந்தி என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவை மீட்டெடுப்பதே தனது இலக்கு என்றும் மிக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருப்பதாகவும் மதுரையில் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். “போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினையில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது.

வெறிச்சோடிக் கிடக்கும் பேருந்து நிலையம்

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,000 பேருந்துகள் இயக்கப்படும். வேலை நிறுத்தம் காரணமாக அங்கு இயக்கப்படாத பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. படம்: சதீஷ்

மணல் கடத்தல்: கல்லூரி மாணவர் உட்பட 8 பேர் கைது

வேலூர்: தமிழகம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிர மடைந்துள்ளன. இந்நிலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட கல் லூரி மாணவர் ஒருவரும் சிக்கி யுள்ளார். அவருடன் மேலும் ஏழு பேரை வேலூர் போலிசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கடும் மணல் தட்டுப்பாடு நிலவி வருகி றது. இதனால் மணல் விலை மிகவும் அதிகரித்துள்ளது.

வேட்டி, சேலையுடன் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரத்தில் தமிழர்களின் கலாசாரத்தைப் பின்பற்றும் வகையில் வெளிநாட்டு ஆண்களும் பெண்களும் வேட்டி, துண்டு, புடவை அணிந்து கரும்பு, மஞ்சள், சர்க்கரை, அரிசி, காய் கனிகளுடன் புதுப்பானை வைத்துப் பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கும்போது மகிழ்ச்சியுடன் குலவையிட்டு, தாங்கள் தயாரித்த பொங்கலைக் கிராம மக்களுக்கும் வழங்கினர். படம்: ஊடகம்

இலவச வேட்டி, சேலை திட்டத்தைத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை நேற்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து முதல் கட்டமாக ஏழு குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலையை வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படம்: ஊடகம்

ஆங்கிலப் பாடம் போதிக்கும் பார்வையற்ற ஆசிரியை பாப்பாத்தி

படம்: ஊடகம்

பெரம்பலூர்: பார்வையற்ற பெண் ஆசிரியை ஒருவர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆங் கிலப் பாடம் கற்பித்து அசத்தி வருகிறார். மாணவ, மாணவியருக்கு எளி தில் புரியும்படியும் ஆடிப் பாடியும் எளிமையாக பாடம் நடத்துகிறார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் உரையாடவும் பயிற்சி அளிக்கிறார். ‘தனியார் பள்ளி மாணவர் களுடன் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில் இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது’ என அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே பெரு மிதம் கொள்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம், பொம் மனப்பாடிக் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை 107 மாணவ, மாணவியர் படிக்கின்ற னர்.

தந்தை, அண்ணனைச் சந்தித்து ஆசி பெற்ற கனிமொழி

படம்: ஊடகம்

சென்னை: திமுக மகளிரணித் தலைவி கனிமொழி நேற்று தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார் (படம்). திமுகதொண்டர்கள் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி கனிமொழிக்கு வாழ்த்து கூறியிருந்தனர். தொடர்ந்து தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழச்சியில் கலந்துகொண்ட கனிமொழி கேக் வெட்டி, அவர்கள் வழங்கிய பரிசுகளையும் ஏற்றுக்கொண்டார்.

Pages