You are here

இந்தியா

தனி ஒருவனாக தினகரன்

ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று நேற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்த டிடிவி தினகரன், எதிர்க்கட்சி வரிசையில் தனி ஒருவராக அமர்ந்திருந்தார். வெளியே அவரது தொண்டர்கள் ‘வருங்கால முதல்வர், நாளைய முதல்வர் தினகரன் வாழ்க’ என்று முழக்கங்கள் எழுப்பினர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகிவிட்டதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. படம்: தமிழக ஊடகம்

நூறாயிரம் போக்குவரத்து ஊழியர் மீது நடவடிக்கை

தலைக்கவசத்துடன் ஓட்டுநர் சிவக்குமார். படம்: தமிழக ஊடகம்

சென்னை: சம்பள உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிக பாதிப் பில்லை என்றும் பல்வேறு மாவட் டங்களில் சராசரியாக 40 விழுக் காட்டுக்கும் மேலான பேருந்துகள் ஓடுவதாகவும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. அரசு பேருந்து ஊழியர்கள் பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது போராட்டத்திற்கு விதித்திருந்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஊழியர்கள் அனைவரும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என நேற்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எட்டுப் பெண்களை மணந்து பல கோடி ரூபாய் சுருட்டியவருக்கு வலைவீச்சு

புருஷோத்தமன். படம்: ஊடகம்

கோவை: எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கோடிக்கணக் கில் மோசடி செய்த தொழிலதிபரை போலிசார் தேடி வருகின்றனர். கோவை வெள்ளலூரைச் சேர்ந்த புருஷோத்தமன், 57, என் பவர் காந்திபுரத்தில் லாரி போக்கு வரத்து நிறுவனம் நடத்தி வந்தார். அப்பகுதியிலுள்ள திருமணத் தகவல் மையத்தில் இரண்டாவது திருமணத்துக்காக அவர் பதிவு செய்திருந்தார். கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குமுதவல்லி என்பவரும் அந்தத் தகவல் மையத்தில் பதிவு செய்தி ருந்தார். இந்நிலையில், திருமணத் தகவல் மையம் ஏற்பாட்டின்பேரில் புருஷோத்தமனுக்கும் குமுத வல்லிக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

மதுபான விடுதியில் தீ விபத்து; ஐவர் கருகி மரணம்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள உணவகத்துடன் கூடிய மதுபான விடுதியில் நேற்று அதி காலை மூண்ட தீயில் ஐந்து ஊழி யர்கள் கருகி மாண்டனர். ஐவரும் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் என்றும் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன. பெங்களூரு நகரின் மத்தியில் பரபரப்பான காய்கறி சந்தைக்கு அருகில் உள்ள கும்பாரா சங்கா கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ள கைலாஷ் மதுபான, உண வகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து அங்கு வந்த தீ அணைப்பாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடு பட்டனர்.

தமிழக சட்டமன்றம்: திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழக சட்டமன்றம் இவ்வாண்டில் முதல்முறையாக நேற்று கூடிய நிலையில் வழக்கம்போல எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிழக ஆளுநராக பன்வாரி லால் புரோகித் பொறுப்பேற்றபிறகு சட்டமன்றம் கூடியது இதுவே முதல்முறை. அதுபோல, ஆர்கே நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி யிட்டு வென்ற டிடிவி தினகரன் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. தினகரன் ஆதரவு எம்எல்ஏக் கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய் யப்பட்டுள்ளதால் அவர்கள் சட்ட மன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ‘அனைவருக்கும் வணக்கம். புத்தாண்டு வாழ்த்துகள்’ எனத் தமிழில் தமது உரையைத் தொடங்கினார் ஆளுநர்.

இன்று சட்டமன்றம்; தினகரன் நுழைகிறார்

தினகரன். கோப்புப்படம்

சென்னை: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஆர்கே நகரில் எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்ட டிடிவி தினகரன் முதன் முதலாக சட்ட மன்றத்துக்கு இன்று செல்வார் என்பதாலும் இது அவருக்கு முதல் சட்டசபைக் கூட்டம் என்ப தாலும் பரபரப்பு கூடி இருக்கிறது. இன்றைய கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையின் மூலம் தொடங்கி வைப்பார்.

பிச்சையாகக் கிடைத்த உணவை கடையில் விற்கும் யாசகர்கள்

படம்: தமிழக ஊடகம்

திருநள்ளாறு: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி விழாவுக்குப் பிறகு சனிக்கிழமை களில் பக்தர்களின் வருகை அதிக அளவில் உள்ளது. பக்தர் கள் அதிகம் வரும் நாட்களில் யாசகர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து வருகிறது. யாசகர்களுக்குப் பக்தர்கள் அன்னதானமாக வழங்கும் உணவுப் பொட்டலங்களை, அவர் கள் மீண்டும் கடைகளில் விற்று விடுகிறார்கள். யாசகர்கள் பற்றி தொடர்ந்து ஏராளமான புகார்கள் வருகின்றன.

வேலைநிறுத்தம்: ஓட்டுநருக்கு அடி, அடுத்தடுத்து விபத்துகள்

தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத் தம் நேற்று நான்காவது நாளாகத் தொடர்ந்தது. தற்காலிக ஓட்டுநர், நடத்துநர் கள் மூலமும் அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்தவர்களாலும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட் டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் மக்களின் அவதி இன்று மீண்டும் தொடரக்கூடும் என்றும் ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன. இதற்கிடையே, வேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்துத் துறை வருமானம் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.

ஆர்எஸ் புரம் காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறப்பானது

கோயம்புத்தூரில் உள்ள ஆர்எஸ் புரம் காவல் நிலையம் இந்தியாவி லேயே சிறந்தது என்பதற்கான விருதை அந்நாட்டின் உள்துறை அமைச்சிடம் இருந்து பெற்றுள்ளது. விவேக காவல் நிலையம் என் னும் பட்டியலுக்கான விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து சென்னை அண்ணா நகர், கோவை ஆர்எஸ் புரம் காவல் நிலையங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் ஆர்எஸ் புரம் இந்திய அளவில் முதல் இடத்துக்குத் தேர்வானது. அதற் கான விருதை மாநில தலைமை போலிஸ் அதிகாரி டிகே ராஜேந் திரனும் ஆர்எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் டி ஜோதியும் பெற்றுக்கொண்டனர்.

மலேசிய மணல் கப்பல் மங்களூர் சென்றது

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் தனி யார் இறக்குமதி செய்யும் மணலை விற்பனை செய்ய தடை விதிக்கும் அரசாங்க நடைமுறைகள் அமலில் இருந்து வருவதால் தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு மலேசியா விலிருந்து மணல் ஏற்றி வந்த கப்பல் வெள்ளிக்கிழமை மங்களூர் துறைமுகத்துக்குத் திருப்பிவிடப் பட்டது. ‘எம்வி குரோட்டோன் ஈகிள்’ என்ற கப்பல், மலேசியாவிலிருந்து 58,616 டன் ஆற்றுமணலை ஏற்றிக் கொண்டு புதன்கிழமை தூத்துக் குடி துறைமுகத்துக்கு வந்தது. ‘டெல்டா இன்ஃபிராலாஜிஸ்டிக்’ என்ற முகவை நிறுவனம் மூலம் அந்த மணலை ‘ஆசிய ‌ஷிப்பிங் ஏஜென்சிஸ்’ என்ற நிறுவனம் இறக்குமதி செய்தது.

Pages