You are here

இந்தியா

“சட்டியுமில்ல, பருப்புமில்ல, எண்ணெய்யுமில்ல. ஆனா லும் வடை சுடுகிறார்கள்,”

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசின் அண்மைய சமூக வலைத்தளப் பதிவு ஒன்று ரஜினியை மறை முகமாக விமர்சிப்பதாக உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அண்மைய பதிவில், “சட்டியுமில்ல, பருப்புமில்ல, எண்ணெய்யுமில்ல. ஆனா லும் வடை சுடுகிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். மேலும், தான் குறிப்பிட் டுள்ள மேற்கண்ட வரிக்கும் இன்றைய தமிழக அரசிய லுக்கும் என்ன சம்பந்தம்? என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவே ராமதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள் ளதாகத் தெரிகிறது. 

‘ஆர்கே நகர் மக்களை இழிவுபடுத்திய நடிகர் கமல்’

Express Photo by Tashi Tobgyal

சென்னை: ஆர்கே நகர் தொகுதி மக்கள் பணம் பெற்றுக் கொண்டு வாக்களித்ததாக கூறுவது மிகவும் தவறானது என அத்தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தினகரன் பணத்தின் மூலம் வெற்றி வெற்றதாக அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார் கமல். இது தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த தினகரன், செய்தியார்களிடம் பேசினார்.

டிராபிக் ராமசாமி: குற்றவாளி ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கூடாது

படம்: தகவல் ஊடகம்

சென்னை: காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்பதில் மாற்றுக் கருத்தில்லை என பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவி த் துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், அதிமுக வட்டாரங்களில் அவர் மீதும் கடும் அதிருப்தி நிலவுகிறது. ஆனால் ராமசாமி இத்தகைய எதிர்ப்புகளையும் அதிருப்தியையும் தாம் பொருட்படுத்தப் போவதில்லை என்றும், வழக்கில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயில் பெயரை மாற்ற ஆலய நிர்வாகம் முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை மீண்டும் ‘ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில்’ என மாற்றுவதற்கு திருவாங்கூர் ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில், ‘ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில்’ என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டு வந்தது. கேரளாவில் இதே பெயரில் உள்ள கோயில்களில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப் படுகின்றனர். கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலைக் கோயில் பெயரை “சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்” எனப் பெயர் மாற்றம் செய்தது.

பாஜக உறவு வேண்டாம்: தினகரன் திட்டவட்டம்

சென்னை: பாஜக தலைமைக்கு தமிழகத்தில் பிடிக்காத நபர் என் றால் அது சசிகலாதான் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அண்மைய பேட்டியில், தாம் அரசியலில் நீடிக்கும் வரை பாஜக வுடன் எக்காரணத்தை முன்னிட் டும் உறவு பாராட்டப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். “பாஜக நிச்சயம் எங்களுடன் இணைந்து செயல்பட முன்வராது. அது நடக்காத ஒரு விஷயம். அதே சமயம் அவர்களே வலிய அழைத்தாலும் நாங்கள் போக மாட்டோம். “நான் அரசியலில் இருக்கிற காலம் வரை மதச்சார்பற்ற அணி யில்தான் இருப்பேன். பாஜக வுடன் எந்த காலத்திலும் ஒட்டோ, உறவோ இல்லை,” என்று தினக ரன் தெரிவித்துள்ளார்.

கடலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

எண்ணூர் ஆற்றை ஆக்கிரமித்து புதுத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆறுகள்தான் நமது உயிர் என்றும் ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுவதை எக்காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்க இயலாது என்றும் எண்ணூர் பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆறுகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எண்ணூர் பகுதி மக்கள் நேற்று கடலில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ‘ஆறுகளை ஆக்கிரமிக்காதே...

மும்பையில் போராட்டம்; ராணுவம் குவிப்பு

 படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: மராட்டிய சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக 200 ஆண்டு களுக்கு முன்பு பீமா கோரே கான் என்ற இடத்தில் மாபெரும் போர் நடந்தது. இதில் 2,500 பேஷ்வா படை யினரும் 500 மகர் படையினரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரே கானில் வெற்றித்தூண் நிறுவப் பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி ஒன்றாம் தேதியன்று இந்த நினைவுத் தூணுக்கு தாழ்த்தப் படுத் தப்பட்டோர் (தலித்) ஒன்று திரண்டு வீர வணக்கம் செலுத்து வது வழக் கம். ஆனால் இந்த ஆண்டு பீமா கோரேகான் வெற்றியைக் கொண் டாடுவது தேசத் துரோகம் எனக் கூறி இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லையாம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி நேற்று கூட்டிய கூட்டத்தில் 104 அதிமுக எம்எல்ஏக்கள் மட் டுமே வந்திருந்ததால் அவரது அரசு பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தினகரன் தலைமையிலான எம்எல்ஏக்கள் பதவியிழப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டசபையின் தற் போதைய பலம் 216 ஆக உள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட உறுப் பினர் பலம் கொண்ட கட்சிதான் ஆட்சியில் இருக்க முடியும்.

பெருகும் ஆதரவு; திமுகவில் மீண்டும் அழகிரியைச் சேர்க்க வலியுறுத்து

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வைப்புத் தொகைகூட வாங்க முடியாத அளவிற்கு திமுக படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, ஸ்டாலின் செயல் தலை வராக உள்ள வரை திமுகவுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று அவரது சகோதரர் மு.க.அழகிரி கருத்துரைத்திருந்தார். அவர் இப்படிப் பேசியது ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் திமுகவின் ஒருசாரார் ‘அழகிரி மீண்டும் கட்சிப் பணியாற்றி னால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிர காசமாகும்,’ என்று கருதுகின்றனர். இதனால், அழகிரிக்கு மீண்டும் கட்சியில் முக்கியப் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று திமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மோதலில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்

தஞ்சை: புத்தாண்டுக் கொண்டாட் டத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரண மாக தஞ்சை அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு நிகழ்ந்த வன்முறையில் பத்து வீடுகள் சூறையாடப்பட்டன. ஆம்பலாபட்டு அருகே உள்ள குடிக்காட்டுப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த இளையர்கள் புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள் கோபமடைந்தனர்.

Pages