You are here

இந்தியா

துரோகிகள் கட்சியில் இருந்து வெளியேறுவர்: தினகரன்

திருவாரூர்: அதிமுகவுக்கு துரோ கம் இழைத்தவர்கள் விரைவில் கட்சியில் இருந்து வெளியேறு வார்கள் என ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், துரோகத்தால் பறிபோன இரட்டை இலை சின்னம் மிக விரைவில் தங்கள் வசம் வரும் என நம்பிக்கை தெரிவித்தார். “தேர்தலுக்கு பிறகு சுயேச்சை வேட்பாளரான தினகரன் காணா மல் போய்விடுவார் என எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். அவர்களின் கனவு பொய்யாகி விட்டது. அவர்கள் தான் காணாமல் போயுள்ளனர். “சட்டப்பேரவையில் நான் என்ன பேசப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.

மேலவைக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி

புதுடெல்லி: யூனியன் பிரதேசமான டெல்லி சார்பில் மூன்று மாநிலங்க ளவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பதவிக்கு வரும் 10- ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளதால் மூன்று இடங்களிலும் போட்டியின்றி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. அக்கட்சி சார்பில் ரகுராம் ராஜன் போட்டியிடுவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

ஆண் பொறியாளரைக் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி

பெண்ணைக் கடத்தி, கட்டாய மணம் புரிந்த சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். மாறாக, ஆடவரைக் கடத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் இந்தியாவின் பீகாரில் நிகழ்ந்துள்ளது. வரதட்சணை இன்னும் ஒழியாததால் இப்படி ஆணைக் கடத்தி கட்டாய மணம் செய்து வைக்கும் வழக்கம் பல்லாண்டு காலமாகவே பாட்னா மாவட்டத்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், அங்குள்ள பந்தாரக் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்படி ஆண் பொறி யாளர் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாயப் படுத்தப்பட்டார்.

பத்து ஆண்டுக்கும் மேல் சிறையில் இருப்போரை விடுவிக்க வலியுறுத்து

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண் டனை பெற்று சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்ப வர்கள் சட்டத்திற்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீடிக்கும் மவுன விரதம்: நேரில் வரமாட்டார் சசிகலா

சென்னை: சிறையில் மவுன விரதம் மேற்கொண்டிருப்பதால் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யிலான விசாரணை ஆணையத் தில் சசிகலா நேரில் முன்னிலை யாக மாட்டார் என தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. அவர் ஜனவரி மாத இறுதி வரை மவுன விரதத்தைக் கடை பிடிக்க இருப்பதாகவும், இதன் காரணமாக அவரால் நேரில் முன்னிலையாக முடியாது என்றும் விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்திருப்பதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மதுரையில் ஜப்பானியர் திருமணம்

படம்: ஊடகம்

மதுரை: கல்வி நிறுவனம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றும் ஜப்பான் தலைநகர் தோக்கியோவைச் சேர்ந்த யூடோ நினாகா, சிகாரு ஒபாதா என்ற பெண்ணைத் தமிழ்க் கலாசாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளார். தமிழைத் தெளிவாகவும் தடையின்றியும் பேசக்கூடிய சிகாரு, தமிழ்க் கலாசாரத்தின் மீது அதிக ஈர்ப்பு கொண்ட வர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மங்கள வாத்தியங்கள் முழங்கின. மணமகனுக்கு பட்டு வேட்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச்சேலை அணிவிக்கப் பட்டிருந்த நிலையில் கெட்டிமேளம் கொட்ட திருமணம் தடபுடலாக நடந்தது.

ஆதரவற்ற குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாடிய துணை முதல்வர்

உலகெங்கும் புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தமிழகத் துணை முதல்வர் ஓபிஎஸ் புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். பொதுமக்கள் புத்தாடைகள் உடுத்தியும் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். புத்தாண்டை ஒட்டி கோயில் களில் சிறப்புப் பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியாக ஓபிஎஸ் தனது புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப் படங்களை ஓபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படம்: ஊடகம்

மும்பை தீ விபத்தின் தொடர்பில் இரண்டு மேலாளர்கள் கைது

மும்பை: பதினான்கு பேரைப் பலிகொண்ட கமலா மில்ஸ் தீச்சம்பவத்தின் தொடர்பில் மேல்மாடி மதுக்கூடத்தின் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்ற மாதம் 29ஆம் தேதி நேர்ந்த தீச் சம்பவம் முதலில் ‘1எபவ்’ மதுக்கூடத்தில் தொடங்கி இருக்கலாம் என போலிசார் குறிப்பிட்டனர். ‘1எபவ்’ நிறுவனத்தைச் சேர்ந்த கெவின் பாவா, லிஸ்பன் லோப்பெஸ் ஆகிய இரு மேலாளர்களைக் கைது செய்ததாக போலிசார் தெரிவித்தனர்.

வருமான வரி முறையில் ‘நேரடி வரி’

புதுடெல்லி: மறைமுக வரியை மாற்றும் அடுத்தகட்ட நடவடிக்கையாக வருமான வரி, கார்ப்பொரேஷன் வரி ஆகியவற்றை நேரடி வரி முறையாக மாற்றும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிதியமைச்சகம் புதிய நேரடி வரிச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் பனிமூட்டத்தால் 300 விமானச் சேவைகள் தாமதம்; பயணிகள் அவதி

புதுடெல்லி: அடர்ந்த பனிமூட்டத் துடன் இருந்த புதுடெல்லியில் புத்தாண்டு தினமான நேற்று 300க்கும் அதிகமான விமானச் சேவைகள் தாமதமாகின. நூற்றுக்கணக்கான பயணி கள் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதாயிற்று. 50 மீட்டர் தூரத்துக்கப்பால் பார்க்க முடியாத அளவுக்கு பனிமூட்டம் மோச மானதால் பல விமானச் சேவை கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. புதுடெல்லி மட்டுமின்றி வட இந்தியாவின் வேறு பல பகுதிகளிலும் பனிமூட்டம் கார ணமாக ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.

Pages