You are here

தலையங்கம்

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

கருத்துக் கணிப்புகளுக்குத் தடை

சென்னை: ஆர்.கே.நகர் சட்ட மன்றத் தொகுதி குறித்து கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்தது. இது குறித்து ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பல்வேறு விதிமுறை கள் அமலில் இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. மேலும் இம்மாதம் 10ஆம் தேதி மாலை 5.00 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5.00 மணி வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ஆணை யம் தெரிவித்தது. ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு 12ஆம் தேதி அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

சிங்கப்பூரில் சமயங்களின் பொறுப்பும் கடமையும்

சமய நல்லிணக்கத்திற்கு உலகின் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது சிங்கப்பூர். பல சமயங்கள், இனங்களைச் சேர்ந்த மக்கள் சிங்கப்பூரில் வாழ்கிறார்கள். பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என எந்த சமயத்தவராக இருந்தாலும் இந்த நாட்டுக்கே உரிய தனித் தன்மையான நல்லிணக்க அணுகுமுறையை அவர்கள் கைக்கொண்டு வருகிறார்கள்.

சிங்கப்பூரிலுள்ள சமய அமைப்புகளும் சமயத் தலைவர் களும் தங்களது சமய நன்னெறிகளை மக்களுக்குப் போதிக்கும் அதே அளவுக்கு மற்ற சமயங்களைப் பற்றிப் புரிந்துகொண்டு, பல சமயங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

மைல்கல்லில் தமிழ்தான் பாஜகவுக்கு வழிகாட்டும்

இன்றைய உலகில் ஏறக்குறைய 6,500 மொழிகள் பேசப் படுகின்றன. அவற்றில் சுமார் 2,000 மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை 1,000க்கும் குறைவு. உலகில் பல மொழிகள் புழங்கும் நாடுகள் பல இருக்கின் றன. இருந்தாலும் மொழியைப் பொறுத்தவரையில் இந்தியாவைப்போல வேறு ஏதாவது ஒரு நாடு இந்த உலகில் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

பல கலாசார, சமய, மொழிகளின் நாற்றங்கால்களைக் கொண்ட இந்தியா என்ற துணைக் கண்டத்தில், 1961 ஆம் ஆண்டு நிலவரப்படி 1,652 அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழிகள் புழக்கத்தில் இருந்தன. என்றாலும் அவற்றில் சுமார் 1,100 மொழிகள்தான் நன்கு பரிண மித்த மொழிகளாக வகைப்படுத்தப்பட்டன.

பிரிட்டனிலும் தாக்குதல்: விழித்துக்கொள்வோம்

உலகில் நாடாளுமன்ற ஆட்சிமுறையை, மக்களாட்சி முறையைப் பலப்படுத்திய நாடுகளில் மிக முக்கியமான நாடு பிரிட்டன். அந்த நாட்டின் நாடாளுமன்றம் உலக நாடாளுமன்றங்களுக்கு எல்லாம் தாய் என்று வர்ணிக் கப்படுகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் நாடாளுமன்றம் உலக ஜனநாயகத்தின் மூலாதாரத் தூண்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. பல நாடுகள், பல சமயங்கள், பல கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றாகச் சேர்ந்து சுதந்திரம், மக்களாட்சி, பேச்சு சுதந்திரம் எல்லாவற்றுக்கும் உலகம் முழுவதற்கும் கேட்கும்படி ஓங்கி குரல் கொடுத்து வருவது இன்று நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாகவே நடந்துவருகிறது.

வரவுசெலவுத் திட்டம்- முன்னேற ஒரு கைகாட்டி

உங்களுக்கு வயது 40 ஆகிவிட்டதா? நீரிழிவு, ரத்தத் தில் கொழுப்பு, ரத்த அழுத்தம், கருப்பைப் புற்றுநோய் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உங்களிடம் $5 இருந்தாலே போதும். வயது 50ஐ தாண்டிவிட்டதா? மலக் குடல் புற்றுநோய் சோதனையையும் இதே செலவில் நீங்கள் செய்துகொள்ளலாம். முன்னோடித் தலைமுறையின ரைச் சேர்ந்தவரா? இவை எல்லாமே உங்களுக்கு இல வசம்.

‘சாஸ்’ எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டத்தில் உள்ளவரா? $2 இருந்தாலே இந்தச் சோதனைகளை நீங்கள் செய்துகொள்ளலாம். 18 வயது முதல் 39 வரை வயதுள்ள சிங்கப்பூரர்களுக்கும் நீரிழிவு ஆபத்து இருக் குமானால் அதற்கான சோதனைகளுக்கு இந்தச் செலவு தான் ஆகும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களின் கடமை

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் பாதி அளவுக்குப் பொறுப்பு வகிப்பவை சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவை ஊழியர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு வேலை வழங்குகின்றன. மொத்தத்தில் அவை சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய அங்கமாக, முதுகெலும்பாக இருக்கின்றன.

ஆனால் இன்று உலக நிலவரம் வேகமாக மாறுகிறது. தொழில்துறைகள் உருமாறுகின்றன. அதற்கு ஏற்ப நிறுவனங்கள் குறிப்பாக, இத்தகைய நிறுவனங்கள் தலை கீழாக மாறவேண்டிய கட்டாயத்தை உலகச்சூழல் ஏற்படுத்திவிட்டது.

நிறுவனர்களுக்கு நினைவிடம்

சிறிய நாடான சிங்கப்பூரை உலகம் போற்றும் மாநகராக உருவாக்க நமது முன்னோடித் தலைமுறையினர் செய்த தியாகமும் ஆற்றிய பங்கும் அளப்பரியது.

நவீன நாடானாலும் பசுமையான நகரம் என்ற பெயரை சிங்கப்பூருக்குப் பெற்றுத் தருவதில் முழுப் பொறுப்பு வகித்த அவர்களைப் போற்றிப் புகழ இந்தத் தீவில் பற்பல கட்டடங்களும் நினைவுச் சின்னங்களும் பாது காக்கப்பட்டு வருகின்றன. இந்த முன்னோடிகளின் நினைவுகளை என்றென்றும் நாம் மறக்காமல் இருக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவுதான் நிறுவனர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கும் திட்டம்.

அரசியல் ஜல்லிக்கட்டில் மூக்கணாங்கயிறு காளை

இந்தியாவின் அரசியல் எத்தனையோ தடாலடிகளை, கேலிக்கூத்துகளை, அதிரடிகளைச் சந்தித்து இருக்கிறது. அதிமுகவின் இமாலயத் தலைவியாக இருந்துவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் ஆண்டபோது, 1999 ஏப்ரல் 17ஆம் தேதி, அவரின் ஆட்சியை ஒரே ஒரு வாக்கில் கவிழ்த்துவிட்டார். இருந்தாலும் அதே வாஜ்பாய் சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் ஆட்சியைப் பிடித்தது அடுத்த அதிரடியாக இருந்தது.

மலை விழுங்கிகளும் அரசியல் கைப்பிள்ளையும்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எத்தனையோ பேர் பொறுப்பு வகித்து இருக்கிறார்கள். அவர்களில் பலரும் பலதடவை முதல்வராக இருந்திருக்கிறார்கள். முதல் வராக ஆகி ஆட்சிபுரிந்த எல்லாருமே மக்களின் ஆதர வுடன் வாக்கு வளத்துடன் அந்தப் பதவியைப் பிடிக்க பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அரசியலில் ஒரு முயற்சிகூட செய்யாமல் அதிர்ஷ்டம் காரணமாக யானை மாலைபோட்டு ஆட்சிக்கு வந்தவரைப்போல் முதல்வர் பதவியில் அமர்ந்தவர் - ஒருதடவை அல்ல இரண்டு தடவை அமர்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் தமிழகத்தின் இப்போதைய முதல்வர் ஓ பன்னீர்செல்வமாகத்தான் இருக்க முடியும்.

டிரம்ப்-உலக அரசியலில் ஒரு நிலநடுக்கம்

உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடான அமெரிக்கா வின் 45வது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டோனால்ட் டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ‘அமெரிக்காதான் முதலில்’ என்றும் அமெரிக்கர்களைக் கொண்டு பலமிக்க அமெரிக்காவை உருவாக்கப்போவ தாகவும் அமெரிக்கர்கள் நலனுக்கே முதல் முன்னுரிமை தரப்போவதாகவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கப் போவதாகவும் பதவி ஏற்றுக்கொண்டு ஆற்றிய உரையில் டிரம்ப் சூளுரைத்து இருக்கிறார்.

Pages