You are here

தலையங்கம்

ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டு

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று தொன்றுதொட்டு குறிப்பிடப்படும் தமிழ் இன மக்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மிக முக்கிய மான நாள். உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை அவர்கள் இன்று கொண்டாடுகிறார்கள்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஜல்லிக்கட்டு என்ற ஒரு வீரவிளையாட்டுடன் கொண்டாடுவது தமிழர்களின் வழமை. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில்தான் இந்தப் பாரம்பரியம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உருமாறும் அரசியல்; தலைவியான தோழி

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நடராஜன்

இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்தின்படி கோடானு கோடி வாக்காளர்கள் வாக்கு அளித்து தேர்ந்து எடுத்த, இந்திய அளவில் மிக பலம் பொருந்திய ஓர் அரசியல் தலைவியான ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அந்தக் கட்சியை அவரின் தோழியான சசிகலா கைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்.

வகுப்பறைகள் உலகப் பயிலகமாக மாறட்டும்

கடல் அலைகளை கரையில் இருந்தபடி வேடிக்கை பார்ப் பது வாழ்க்கை அல்ல. அலைகளில் விழுந்து புரண்டு நீந்தி சமாளித்து எழுந்து கரையேறுவதுதான் வாழ்க்கை. கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பாடமும் வாழ்க்கையில் கடைசி வரை வராது. இத்தகைய நியதி களை எல்லாம் பிள்ளைகளின் மனதில், குறிப்பாக அவர் களின் பிஞ்சு வயதிலேயே நன்கு பதியவைக்க வேண்டிய தேவை முன் என்போதையும்விட இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் படுவேகமாக மாறி வருவதே இதற்கான காரணம்.

நிச்சயமில்லாத நிலையை நிச்சயமாக்கிச் சென்ற 2016

சுமார் ஓராண்டுக்கு முன் தன்னைத்தானே ஒரு சுற்று சுற்றிவரத் தொடங்கிய இந்த பூமி ஏறக்குறைய இன்னும் ஒரு வார காலத்தில் அந்தச் சுற்றை முடிக்கப்போகிறது. 2016வது சுற்று முடிந்து அடுத்த 2017வது சுற்றுக்குப் பூமி ஆயத்தமாகிவிட்டது நிச்சயம் என்றாலும் உலகில் வாழும் மக்களைப் பொறுத்தவரையில் பலவற்றிலும் நிச்சயமில்லாத நிலையிலேயே அவர்களை விட்டுவிட்டு இந்த ஆண்டு விடைபெறுவதாகத் தெரிகிறது.

விரைந்து வளரும் உறவு

சிங்கப்பூர்- கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையேயான உறவில் மற்றொரு மைல்கல். இரு நாட்டு இணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த வாரம் கையெழுத்தான இந்த உடன்பாடு இருநாட்டு உறவை புதிய மேல்நிலைக்கு எடுத்துச் செல்லும்.

நாடுவரை உறவு என்ற ஒரு திராவிடத் தலைவி

இந்தியாவில் பொதுவாழ்வில் ஈடுபட்டுவந்துள்ள தலை வர்களில், கடைசிவரை குடும்பம் என்று வாழ்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் வீடுவரை உறவுமின்றி வீதிவரை மனைவியின்றி காடுவரை பிள்ளையுமின்றி கடைசி வரை நாடு என்றும் நாடுவரை உறவு என்றும் வாழ்ந்த அரசியல் தலைவர்களைக் காண்பது மிக அரிது. அத்தகைய ஓரிரு தலைவர்களில் ஒரு தலைவி தான் செல்வி ஜெயலலிதா.

தனக்கென்று யாருமில்லாத நிலையில், நாட்டையே தன் உறவாக்கிக்கொண்டு, இந்திய அரசியல் வரலாற் றில் ஒரு துருவ நட்சத்திரமாக ஜொலித்த ஜெயலலிதா, ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள ஒரு நாட்டில், அவர் களில் பலரைவிட அதிகமாகச் சாதித்துள்ள ஒரு பெண் தலைவியாகப் பார்க்கப்படுகிறார்.

சுசுகி கிண்ண ஏமாற்றம்; தேவை நீண்டகால மாற்றம்

ஆசியான் நாடுகள் பங்கேற்கும் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தகுதிச் சுற்றிலேயே சிங்கப்பூர் குழு போட்டியைவிட்டு வெளியேறியதற்குப் பலரும் பயிற்றுவிப்பாளர் வீ சுந்தரமூர்த்தியைப் பலிகடாவாக்கினர். அவர் தமது உத்திகளில் தற்காப்பில் அதிக கவனம் செலுத்தியதால்தான் இந்த கதி என்பது இவர்களின் குறைகூறல்.

மெச்சப்பட வேண்டிய துணிவு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கறுப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அதிரடியாக அறிவித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இதனால் இந்திய மக்களுக்குப் பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. வங்கிகள், ஏடிஎம்கள் இல்லாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் சொல்ல முடியாதவை. இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளும் போதிய அளவு ரொக்கத் தொகை கிடைக்காமல் சங்கடங்களை எதிர் நோக்கி வருகின்றனர். உணவுத் தொழில் உட்பட பல தொழில்கள் முடங்கியுள்ளன.

உள்ளூர் போலிசாகிறதா உலக போலிஸ்?

உலகையே தன் தோளில் சுமந்து உலக போலிசாக கட மையாற்றி வருகின்ற நாடு அமெரிக்கா. உலகில் தன் னைப்பேணித்தனம் கூடாது என்றும் சுதந்திரம், சகிப்புத் தன்மை, ஒளிவுமறைவு இல்லாத போக்கு ஆகிய பொது வான, மிதவாத கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண் டும் என்றும் நாடுகளை அன்பாகவும் அதட்டியும் மிரட்டியும் ஒடுக்கியும் வந்துள்ள நாடு அமெரிக்கா. இப்படிப்பட்ட ஒரு நாடு, தன்னைப்பேணித்தனம்தான் மிகமிக முக்கியம் என்று வலியுறுத்திக் கூறிவந்துள்ள ஒருவரைத் தன் தலைவராக இப்போது தேர்ந்தெடுத்து இருக்கிறது.

இந்தியப் பொருளியலுக்கு அதிர்ச்சி சிகிச்சை

உலகிலேயே மக்கள் தொகையில் முதலிடத்துக்கு முன் னேறிக்கொண்டு இருக்கும் இந்தியா, பெரிய பொருளியல்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு US$ 2.2 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது மில்லியன் மில்லியன்) இப்படிப்பட்ட ஒரு நாட்டில் அன்றாடம் கோடானுகோடி மக்களிடம் கோடானுகோடி பணம் புழங்குகிறது. அந்த நோட்டுகளில் 23 பில்லியன் நோட்டுகள் அதாவது 100க்கு சுமார் 85 நோட்டுகள் ரூ500 மற்றும் ரூ 1,000 நோட்டுகள். பணக்காரர்கள் முதல் யாசகம் கேட்போர் வரை யாரைப் பார்த்தாலும் எல்லார் கையிலும் இந்த மதிப்புப் பணம்தான் அதிகம் புழங்கும்.

Pages