You are here

தலையங்கம்

கையில் திறன் இருந்தால் வழியில் பயமில்லை

உடல் நலத்துடன் வாழவும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று திடமாகச் செயல்படவும் ஊட்டச்சத்துகளும் உடற் பயிற்சியும் உதவுகின்றன. ஊட்டச்சத்துகள் உடனடியாகப் பலன் தரா. தொடர்ந்து பல மாதங்கள் உட்கொண்டால் தான் உடல் வளம் பெறும். உடற்பயிற்சியும் அப்படித்தான். பயிற்சி செய்யச் செய்யத்தான் உடலுக்கு வலு கிடைக்கும். இவை இரண்டையும் இடையில் விட்டுவிடவும் கூடாது. தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

பொருளியலை வளர்க்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த முறையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் லீ சியன் லூங்.

இயக்கு நிலையில் இருந்து இயங்கு நிலைக்கு

உலகில் இயற்கை வளம் மிக்க, நிலவளம் மிக்க நாடு களில் பலவும் வளர்ந்த நாடுகளாகத் திகழ்கின்றன. ஆனால் அத்தகைய வளங்கள் எதுவுமே இல்லாமல் குறுகிய காலத்தில் வளர்ந்த நாடுகளையே வியக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்த நாடு சிங்கப்பூர். நில வளமோ நீர்வளமோ இதர இயற்கை வளங்களோ எதுவும் இல்லை என்றாலும் தனது மனிதவளத்தை மட்டுமே மூலதனமாக வைத்து முன்னேறிய நாடாக இருக்கும் சிங்கப்பூர், உலகில் அதிக வருவாய் தரும் பொருளியலைத் தக்கவைத்துக்கொண்டு வருகிறது.

மின்சாரம் இல்லை, விளக்கு எரிகிறது

இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் வாழ்கின்ற, உலகக் கண்ணோட்டம் அதிகம் உள்ள, முன்னேறிய மாநில மாகத் திகழ்கின்ற தென்கோடி தமிழ்நாட்டு மக்கள், மக்களாட்சி தத்துவத்தின் மூலம் வாக்களித்து தேர்ந்து எடுத்து தாங்கள் ஆட்சியில் அமர்த்திய தங்கள் முதல மைச்சருக்கு என்ன ஆயிற்று என்பதைக்கூட தெரிந்து கொள்ள முடியாத சூழலில் இருக்கிறார்கள்.

அதிமுக என்ற மாநிலக் கட்சிக்கு கடந்த 1980கள் முதல் தலைமை ஏற்று அரசியலில் படுதோல்வியையும் பல வெற்றிகளையும் பார்த்து வந்துள்ள 68 வயது முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா, செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அடைபட்டு இருக்கிறார்.

பொருளியல் யானையும் பொருத்தமான பாகனும்

உலகில் தன்னைப்பேணித்தனம், உள் கண்ணோட்டம், சோஷலிசக் கொள்கைகள் போன்றவற்றைக் கடைப் பிடித்து உலகப் பொருளியலுடன் ஒட்டி, உறவு கொள்ளா மல் இருந்து வந்த நாடுகளில் பலவும் கால ஓட்டத்தில் பின் தங்கிவிட்டன. இத்தகைய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேவேளையில், உலகமயத்தைத் தழுவி, உலகுக் குத் தன் கதவுகளை அகலத் திறந்துவிட்டு, சரியான கொள்கைகளை வகுத்து, அவற்றைச் செம்மையாக அமலாக்கி, வெளிக் கண்ணோட்டத்துடன் திகழ்ந்து, பல துறைகளிலும் பல நாடுகளோடும் ஒத்துழைத்து, தாராள வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொண்டு செயல்பட்ட நாடுகள் பலவும் இன்று பொருளியலில் வளர்ந்த நாடுகளாக, வழிகாட்டும் நாடுகளாகத் திகழ்கின்றன.

செந்தமிழ் நாடெனில் சிங்கப்பூர் நினைவு

இந்த உலகின் விலைமதிப்பு இல்லாத செவிச்செல்வ மாகத் திகழ்கின்ற ஏழு செம்மொழிகளில் ஒன்றான செந்தமிழ் மொழியை நினைக்கையில் சிங்கப்பூர்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. உலகத் தொடர்புக்காக ஆங்கிலத்தையும் நிலம் வாழ் மொழியாக மலாய் மொழியையும், மண்டிக்கிடக்கும் கலாசாரங்கள், பழமை, பாரம்பரியங்களைக் கட்டிக்காக் கும் முயற்சியாக உலகின் செம்மொழிகளான தமிழையும் சீனத்தையும் தன் மொழி உலகின் நான்கு திசைகளாக-நான்கு அதிகாரத்துவ மொழிகளாக ஆக்கி அழகு பார்க்கும் நாடு சிங்கப்பூர்.

உரி தாக்குதலுக்கு நரி தந்திரம்

உலகின் தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா,-பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில், அவை சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதலே காஷ்மீர் பிரச்சினை காரணமாக நல்லுறவு இல்லை. இரு நாடு களும் கடந்த 70 ஆண்டு காலத்தில் நான்கு தடவை போரில் ஈடுபட்டுள்ளன. அவற்றில் மூன்றுக்கு காஷ்மீர் தான் காரணம். இமயமலைப் பகுதியான காஷ்மீரில் ஏறக்குறைய 43% பரப்பை நிர்வகிக்கும் இந்தியா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை முழுமையாகத் தன்னுடையது என்று கோரு கிறது. காஷ்மீரின் 37% பரப்பை நிர்வகிக்கும் பாகிஸ் தானோ இதை ஏற்க மறுக்கிறது.

தண்ணீர் அரசியல்

­­­­­­இந்­தி­யா­வின் தென்கோடியில் உள்ள தமிழகம் தனது தண்ணீர்த் தேவைக்கு அதனைச் சுற்றியுள்ள கர்­நா­டகா, கேரளா, ஆந்­தி­ரா­ மாநிலங்களில் இருந்து வரும் நதிகளை நம்­பித்­தான் இருக்கிறது. நதி நீர் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தமி­ழ­கத்­திற்­கு அண்டை மாநி­லங்கள் தண்ணீர் வழங்­க வேண்டும். ஆனால், நதி நீர் பிரச்சினை மாநி­லங்களுக்­கிடையே தீர்க்­கப்­ப­டாத பிரச்­சினை­யாக பூதா­கார­மா­கிக்கொண்டே வரு­கிறது. இதில் பெரும் பிரச்சினையாக இருப்பது காவிரி நீர்ப் பிரச்சினை.

‘ஸிக்கா’ வலையில் சிக்காதிருக்க...

உலகுக்குத் தேவையான மழையை வாரி வழங்குவதில் மழைக்காடுகளுக்கு பெரும்பங்கு உண்டு. நிலத்துக்குக் குளிரூட்டி, இயற்கைக்கு வளம் சேர்ப்பவை அவை. ஆப்பிரிக்கக் கண்டத்தின் உகாண்டாவில் உள்ள அப்படிப்பட்ட ஒரு மழைக்காட்டின் பெயர் ‘ஸிக்கா’.

தமிழினத்தை உயர்த்திய தலைமகன்

ஒரு சமூகத்தின், நாட்டின் தலைவன் சிறந்து விளங்கினால் அவனது சமூகமும் நாடும் சிறப்புறும். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர். நாதன் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தவர், இந்திய சமூகத்துக்குச் சிறப்புத் தேடித் தந்தவர், தமிழினத்துக்கு உயர்வு கொண்டு வந்தவர்.

நம்பிக்கையை விதைத்த நாயகன்

‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது’ எனும் பொன்மொழிக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வளங்கள் ஏதும் இல்லாத நிலையிலும் மனிதவளம் ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, மூன்றாவது உலக நாடாக இருந்ததை முதல் உலக நாடுகளில் ஒன்றாக மாற்றிக் காட்டி, பொருளியல் வளர்ச்சியில் வளர்ந்த நாடுகளையே வாய்பிளக்க வைத்த பெருமைக்கு உரியது நம் நாடு.

கல்வி கேள்விகளிலும் விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்மாதிரி நாடாகத் திகழ்ந்துவரும் நம் நாடு விளையாட்டிலும் முத்திரை பதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது நீச்சல் நாயகன் 21 வயது ஜோசஃப் ஸ்கூலிங்கின் இமாலய வெற்றி.

Pages