You are here

தலையங்கம்

வரவேற்க வேண்டிய கட்டுப்பாடு

தேக்கா மார்க்கெட் பகுதியில் குடியிருப்பவர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் பலன் கிடைத்திருக்கிறது. தேக்கா உணவு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மது விற்பனை நேரம் குறைக்கப் பட்டிருப்பதால் இனி அவர்களால் ஓய்வு நாளை சற்று நிம்மதியாக கழிக்க முடிகிறது.

லிட்டில் இந்தியாவில் தேசிய பேரிடரைத் தவிர்க்க...

ஆயகலைகள் அறுபத்து நான்கில் அரிய கலை சமையல் கலை. அதுவும் இந்திய சமையல், குறிப்பாக அறுசுவையும் அடங்கிய தமிழக சமையல் கலை என்பது உலகம் முழுவதும் மணம் பரப்பும் ஒன்று. தன் மக்களை மட்டுமல்லாது மற்றவர்களையும் கவர்ந்து ஈர்க்கும் இந்திய சமையல் மணமும் சுவையும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பெரிதும் பரவி இருப்பதற்கு சிங்கப்பூர் முக்கியமான ஓர் அடுப்பங்கரை யாக அன்று முதலே இருந்து வருகிறது.

உறவை பலமாக்கும் வேகம்

மலேசியத் தீபகற்பமும் சிங்கப்பூர் தீவும் கடல் நீரில் வழி அமைத்து கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்னர் கரைகளை ஒன்றிணைத்தன. படகுகளை நம்பியிருந்த பயணிகள், சரக்குப் போக்குவரத்தை 1923ல் செயல்படத் தொடங்கிய 1.05 கிலோ மீட்டர் ஜோகூர் மேம்பாலம் பல மடங்கு எளிதாக்கியது. சாரை சாரையாக மக்களும் வாகனங்களும் பாலத்தைக் கடக்கத் தொடங்கினர். இருநாட்டு உறவை வலுப்படுத்திய இந்த முதல் தரைப் பாதையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் காலத் தில் சிங்கப்பூர்வாசிகளுக்கும் மலேசிய மக்களுக்கும் இடையே மேலும் அணுக்கமான பிணைப்பை அதிவேக ரயில் போக்குவரத்து ஏற்படுத்திவிடும்.

மதிப்புக்கு உரியது மதிப்பெண் மட்டுமல்ல!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிஎஸ்எல்இ’ எனப்படும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு மதிப்பீட்டு முறை மாற்றங்கள் கடந்த புதன்கிழமை வெளியானது. இப்போது நடைமுறையில் இருக்கும் ‘டி-ஸ்கோர்’ முறைக்குப் பதிலாக எட்டு அடைவுநிலைகளைக் கொண்ட மதிப்பெண் தர அளவைமுறை 2021ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவுள்ளது. நடப்பில் உள்ள ‘டி=ஸ்கோர்’ முறை மாணவர்களைத் துல்லியமாக, அதிகமாக வேறுபடுத்திக் காட்டுகிறது என்று பல காலமாகக் குரல்கள் ஒலித்து வந்த நிலையில் புதிய முறையின்படி அந்த வகைப்படுத்தல் பெரிதும் குறையும் என்பது வரவேற்கத்தக்க அம்சம்.

நோகாத கண்ணுக்கு மருந்து

வறுமை அல்லது வசதி குறைவு காரணமாக அடிப்படை வசதிகள் கிட்டாமல் எந்த ஒரு சிங்கப்பூரரும் அவதிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மக்களுக்குப் பயன்தரக்கூடிய பல உதவித் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் ‘சாஸ்’ எனப்படும் சமூக சுகாதார உதவித் திட்டம். இத்திட்டத்தின் மூலம் குறைந்த, நடுத்தர வருமானம் உடைய சிங்கப்பூரர்களும் முன்னோடித் தலைமுறையினரும் அக்கம்பக்கத்திலுள்ள தனியார் மருந்தகங்களில், பல்மருந்தகங்களில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெற இயலும். சிகிச்சைக்குரிய மீதக் கட்டணத்தைச் சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் அரசாங்கத்திடம் மானியமாகப் பெற்றுக்கொள்ளும்.

அவசரக் கோலம் அள்ளித் தெளிப்பு

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தமது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினரிடையே வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறுவது தொடர்பான அதிருப்தியை நீக்கி அதன் ஆதரவைப் பெறுவதற்கும் கட்சிக்கான மக்கள் ஆதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் கடந்த பொதுத் தேர்தலில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா வேண்டாமா என்பது குறித்து இரண்டாண்டுகளுக்குள் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதாக உறுதி அளித்தார்.

அந்த உறுதிமொழியும் அதன் பின் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என முடிவெடுத்த தும் இனிவரும் ஆண்டுகளுக்கு பிரிட்டனின் தலைவிதியை நிர்ணயம் செய்யவுள்ளன.

ஊழியர்களைப் பாதுகாக்கும் சன்மானம்

வேலையிட மரணங்களைக் குறைக்க சாமம், பேதம், தானம், தண்டம் என எல்லா வழிகளிலும் இறங்கி இருக்கிறது அரசாங்கம். கடந்த மாதம் தண்டல்காரன் போல் கடும் விதிகளால் எச்சரித்தது. இப்போது சலுகை களை அறிவித்து ஊக்குவித்துள்ளது. வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார தரக்கட்டுப்பாட்டை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனைகள் சென்ற மாதம் அறிவிக்கப்பட்டன. குறைந்தபட்ச வேலை நிறுத்த காலத்தை இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் ஆக்குவது, நிறுவனத்தின் ஊழியர் வேலை அனுமதிச் சீட்டு பெறும் தகுதியை தற்காலிகமாக நிறுத்துவது என கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

ஆயுதம் அழிக்கும் பேராயுதம்

சிறிய அள­வி­லும் பெரிய அள­வி­லும் எவரும் எதிர்­பா­ராத நேரத்­தில், எதிர்­பா­ராத வழி­களில் உல­கெங்­கும் தாக்­கு­தல்­கள் பெரு­கிக்­கொண்டே இருக்­கின்றன. ஆக அண்மை­யில் துப்­பாக்­கி­யால் சுடப்­பட்டு, கத்­தி­யால் பலமுறை குத்­தப்­பட்டு பரி­தா­ப­மாக உயி­ரி­ழிந்தார் பிரிட்­ட­னின் தொழிற்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திருமதி ஜோ காக்ஸ். இரு பிள்ளை­களுக்­குத் தாயான 41 வயது ஜோ காக்ஸின் உயிரைப் பறித்­தது ஒரு தனி­ம­னி­த­னின் வெறித்­த­னம்.

விவேக தேசத்தின் விவேக உத்தி

அணுப்பெருக்கத்தின் வேகத்தைவிட அதிவேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் தொழில்நுட்பத்தால் ஏராளமான பலன்களை அனுபவித்தாலும் பாதிப்புகளையும் எதிர் கொள்ளவே வேண்டியுள்ளது.

அந்த வகையில் உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கி, தகவல் பரிமாற்றத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் இந்த நூற்றாண்டின் அரும்பெரும் கண்டுபிடிப்பான இணையம், எத்தனையோ வசதிகளை ஏற்படுத்தி வந்தாலும் ஆபத்துகளையும் கொண்டு வந்துள்ளது.

உலக மக்கள் அனைவரையும் கணினிக்குள் இணைக் கும் இணையத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் விஷக் கிருமிகளும் உட்புகுந்து விடுகின்றன.

அஷ்வின்கள் நிறைந்த சமூகமாவோம்

பள்ளிக்கூடம் சென்றுவிட்டு நண்பர்களுடன் வீட்டுக்குத் திரும்பிச்சென்றுகொண்டு இருந்த ஒரு 12 வயது பையன், திடீரென்று சாலையில் வாகன விபத்து நிகழ்ந்ததைக் கண்டு தன்னை அறியாமலேயே ஓடிச்சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி இருக்கிறான். ‘ஆபத்து போகாதே’ என்று அவனை நண்பர்கள் தடுத்தனர். பெரியவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. பலரும் விபத்தைப் படம் எடுத்துக்கொண்டும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் நின்றிருந்தனர்.

Pages