You are here

தலையங்கம்

வாக்கும் வக்கும்

தமிழ்நாட்டில் 15வது சட்டமன்றத் தேர்தலில் 234 உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு நாளை நடக்கிறது. அந்த மாநிலத்தில் வசிக்கும் சுமார் 7 கோடி (70 மில்லியன்) பேரில் கிட்டத்தட்ட 5.8 கோடி வாக்காளர்கள் மாநில நிர்வாகத்தை யார் கையில் ஒப்படைப்பது என்பதை நாளை முடிவு செய்கிறார்கள். இவர்களில் 40 மில்லியன் பேருக்கு வயது 50க்கும் குறைவு.

சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா உறவுக்கு இன்னும் உரம்

ஆசியாவில் தென்கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள, நிலப்பரப்பு குறைந்த சிங்கப்பூரும் ஆசிய பசிபிக்கின் முக்கிய முதுகெலும்புகளில் ஒன்றாக இருக்கின்ற, பெரும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவும் மிக முக்கியமான ஒரு புதிய உடன் பாட்டில் கையெழுத்திட்டு உள்ளன. 
வர்த்தகம், பொருளியல், புத்தாக்கம், அறிவியல், தற்காப்பு, கல்வி, பயணம், இளையர்கள், கலை கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த உடன்பாட்டை இரு நாடுகளும் பெரிதும் வரவேற்று இருக்கின்றன.

மனதைத் தொடும் திட்டங்களும் மன நாட்டமும்

மனதைத் தொடும் திட்டங்களும் மன நாட்டமும் சிங்கப்பூரின் புதிய 2016 வரவுசெலவுத் திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துமுடிந்துவிட்டது. நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவக்கூடிய ஏராளமான திட்டங்கள், செயல் திட்டங்கள், கொள்கைகள், செலவுத்தொகை, வரவுத் தொகை அனைத்தும் அமைச்சு வாரியாக அறிவிக்கப்பட்டு அவை பற்றி ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப் பட்டன.

நீரிழிவு நோயை வீழ்த்தும் போரில் களம் காண்போம்

மனித உடல் என்பது மிகப்பெரிய பலதுறைத் தொழிற்சாலை. உடலில் எல்லா ஆலைகளும் செவ்வனே செயல்பட போதிய எரிசக்தி வேண்டும். அந்தச் சக்தியை நாம் உண் ணும் உணவுப்பொருட்கள் மூலம் சர்க்கரை வடிவில் நம் உடல் பெறுகிறது. அப்படி உடலில் சேரும் சர்க்கரைப் பொருட்களை நம் உடல் சிதைத்து அதைச் சக்தியாக மாற்றிக்கொள்கிறது.

ஊழல் புகார்கள் குறைவு மேலும் ஓர் அனுகூலம்

ஊழலுக்கெதிராக பங்காற்றிய அர்ப்பணிப்புக்காக கெளரவிக்கப்பட்டவர்களுடன் புகைப்படமெடுத்துக் கொண்ட பிரதமர் லீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் புதிய ஊழல் விவகாரங்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 132 ஆகக் குறைந்தது. வந்த புகார்கள் அதிகம் என்றாலும் ஆதாரம் இல்லாமல் புலன்விசாரணையைத் தொடங்கும் அளவுக்குப் போதிய முகாந்திரம் இல்லாமல் இருந்தவை அவற்றில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊளைச்சதை அகல உதவும் புதிய திட்டம்

பூலாவ் சிராங்கூன் என்றும் குறிப்பிடப்படும் கோனி தீவு.

சிங்கப்பூரின் ஒரே சொத்தான அதன் மக்கள், உழைப்புக்கு ஏற்றவர்களாக, காலத்துக்குத் தோதானவர்களாக, தொழில்நுட்பம் சாரந்தவர்களாக, நோய்நொடி இல்லாதவர்களாக, புத்தாக்கமிக்கவர்களாக, எந்தச் சூழலையும் சமாளிக்கும் வகையில் மாற்றங்களுக்கு ஏற்ப உடனே மாறிக்கொள்பவர்களாக இருக்கவேண்டும் என்பதே இலக்கு. இந்த இலக்கு நிறைவேற வேண்டுமானால் சிறு வயதிலிருந்தே இவற்றுக்கான உடலுறுதியும் மனஉறுதியும் மக்களிடையே நிலைப்பட வேண்டியது அவசியம்.

ஓராண்டு நிறைவு – முன்னோக்கியப் பார்வை!

திரு லீ குவான் இயூவின் சாதனைகளை விளக்கும் பதாகைகளை நாடாளுமன்றக் கட்டத்தின் அருகே நிறுவும் ஊழியர்கள். 

சரித்திர நாயகர்கள், போற்றலுக்கும் ஆய்வுக்கும் உட்படும்போது, அது பெரும்பாலும் அவர்களுடைய இறந்தகால வரலாற்றை நோக்கிய மீள்வலியுறுத்தலாகவே அமைகின்றது. ஆனால், இதிலும் சிங்கப்பூரின் சரித்திர நாயகனும் இந்நாட்டுத் தோற்றுவாயின் முக்கிய காரணகர்த்தாவுமாகிய சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ மாறுபடுகிறார்.

காரை முந்தும் பேருந்து, ரயில்

சிங்கப்பூரில் பத்தில் ஆறு பேர் பேருந்து அல்லது ரயில் மூலம் வேலைக்குச் செல்கிறார்கள். கார் இருந்தும் அதை விட்டுவிட்டு பொதுப் போக்குவரத்தை நாடும் சிங்கப்பூரர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து தங்களுக்கு மனநிறைவாக இருக்கிறது என்று சொல்லும் மக்களின் விழுக்காடும் கூடி வருகிறது. கடந்த 2015ல் இது 91.8% என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் தேர்வில்  மோடி தேர்ச்சி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் 2016=2017ஆம் ஆண்டுக்கான தன்னுடைய வரவு செலவுத் திட்டத்தை சென்ற மாதம் 29ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த அந்தத் திட்டம் பாஜக அரசின் மூன்றாவது நிதிநிலை அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 1.25 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு என்பதாலும் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் என்ப தாலும் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் உலக அளவில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிற-து. 

கண்காணிப்பை முடுக்கி, கொசுக்களை முடக்குவோம்

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்பானிய மொழியில் டெங்கி என்பதற்கு “கவனமாக இருத்தல்” அல்லது “ஜாக்கிரதையாக இருத்தல்” என்ற பொருள் உண்டு. எவ்வளவு பொருத்தமான காரணப் பெயர்! முன்னெப்போதையும்விட இந்த ஆண்டில் சிங்கப்பூரர்கள் டெங்கி காய்ச்சல் குறித்தும் அதனை உண்டுபண்ணும் ஏடிஸ் கொசுக்கள் குறித்தும் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஆண்டு டெங்கி சம்பவங்கள் சாதனை அளவாக 30,000த்தைத் தொடக்கூடும் என தேசிய சுற்றுப்புற வாரியம் எச்சரித்திருக்கிறது. இதற்கு முன் 2013ல் டெங்கி சம்பவங்கள் 22,000ஆக இருந்தன.

Pages