You are here

திரைச்செய்தி

புகுந்த வீட்டாரைக் கவர்ந்த சமந்தா

திருமணத்துக்குப் பின் புகுந்த வீட்டாரை வெகுவாகக் கவர்ந்துவிட்டார் சமந்தா. அவரது குணநலன்களை மாமனாரும் நடிகருமான நாகார்ஜுனா புகழ்ந்து தள்ளுகிறார். “ஒரு சிறந்த நடிகை எனது மருமகளாக வந்து எங்கள் கலைக் குடும்பத்தில் இணைந்திருக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘ராஜுஹரிகாதி-2’ படத்தில் நடித்த போது சமந்தாவின் நடிப்பாற்றலைத் தெரிந்துகொண்டேன்,” என்கிறார் நாகார்ஜுனா.

சிம்பு: யாரும் என்னை மிரட்டவில்லை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு எதிராக ஒரு பாடலைப் பாடி வெளியிட்டுள்ளார் சிம்பு. இதையடுத்து அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள் ளனர். இந்நிலையில் யாரும் தன்னை மிரட்டவில்லை என சிம்பு கூறியுள்ளார். “பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டுக்குப் பிறகே இந்தப் பாடல் வெளி வந்துள்ளது. இது நான் எழுதிய பாடல் அல்ல.

தென்னிந்திய திரையுலகை வியப்பில் ஆழ்த்தும் ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. அதைத் தொடர்ந்து ‘மெர்சல்’ படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. திரையரங்கிற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில் ‘மெர்சல்’ உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்து இருக்கிறது.

அனுபமா: முன்னணி நடிகர்களுடன் அனுபமா

‘கொடி’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆசையாக இருப்பதாகவும் நல்ல கதைக்காக காத்திருப்பதாகவும் கூறுகிறார். மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ்பெற்றார் அனுபமா பரமேஸ்வரன்.

விழிப்புணர்வு நடவடிக்கையில் இலியானா

இலியானா

இடுப்பழகி இலியானா மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களை அதிலிருந்து மீட்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்த இலியானா அண்மையில் மன உளைச்சலுக்கு ஆளானார். அதுபற்றி அவர் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன் எனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. ஒரு காலத்தில் எப்போதுமே நான் சோர்வாகவும் கவலையுடனும் இருப்பேன். அந்தக் காலக் கட்டத்தில் ஒரு வகையான மனபாதிப்பு எனக்கு இருந்தது. அதுபற்றி அப்போது எனக்குப் புரியவில்லை.

கல்விக்குக் கைகொடுக்கும் விஜய் சேதுபதி

வசதி குறைந்த, ஆதரவற்ற, உடற்குறையுள்ளோரின் கல்விக்கு உதவும் வகையில் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் இதனை அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “நான் விளம்பரப் படங் களில் அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.

ரகுல்: எனது விருப்பங்கள்

ரகுல்

ஒவ்வொரு படத்துக்கும் நூறு விழுக்காடு உழைப்பைத் தருவதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங். சில படங்கள் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், தன் உழைப்பிலும் நடிப்பை வெளிப்படுத்துவதிலும் குறை வைத்ததில்லை என்கிறார். “சில படங்கள் வெற்றி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் வித்தியா சமான வேடங்களில் நடிக்க ஆசைப் படுகிறேன். “சினிமாவில் மாறுபட்ட கதைகள் வர வேண்டும். எனக்கும் மாறுபட்ட வேடங் கள் கிடைக்க வேண்டும். இதுவே எனது விருப்பம்,” என்கிறார் ரகுல். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடி யாக ஒரு படத்தில் நடிக்கி றாராம்.

முத்தக்காட்சியில் நடிக்க மறுத்த நாயகன்

காத்ரீனா

முத்தக்காட்சியில் நடித்தே பெயர் பெற்ற நடிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட திரையுலகில் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்துள்ளார் ஒரு கதாநாயகன். அவர் சல்மான்கான். தற்போது ‘டைகர் ஜிந்தா ஹே’ என்ற படத்தில் காத்ரீனா கைஃப்புடன் இணைந்து நடிக்கிறார் அவர். இது அடிதடிப் படம் என்றாலும் காதல் காட்சிகளும் பரவலாக இடம்பெறுமாம். குறிப்பிட்ட ஒரு காட்சியில் காத்ரீனாவுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று காட்சியை விவரித்தாராம் இயக்குநர். அதைக் கேட்ட சல்மான் முத்தம் எல்லாம் கொடுக்கமுடியாது எனக் கறாராகக் கூறிவிட்டாராம். இத்தனைக்கும் முத்தம் வாங்கும் காத்ரீனாகூட இக்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

உறுதியாக நின்ற நயன்: நெகிழும் இயக்குநர்

‘அறம்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நயன்தாரா.

‘அறம்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. கோபி நயினார் இயக்கியுள்ள படம் இது.இவர் வேறு யாருமல்ல, ‘கத்தி’ கதை யார் என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு வித்திட்டவர். அதன் பிறகு இவர் கூறிய மற்றொரு கதையைக் கேட்ட நயன்தாராவுக்கு அது பிடித்துப் போகவே ‘அறம்’ வளர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் தம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகச் சொல்லியுள்ளார் நயன். இதைச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கோபி நயினார். கடந்த காலத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்க ளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனுயாவின் புகார்

‘சிவா மனசுல சக்தி’, ‘நண்பன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தவர் அனுயா. சில மாதங்களுக்கு முன்னர் இவரது ஆபாசப் படங்கள் சில இணையதளங்களில் பரவின. எனினும் அவை அனைத்துமே ஏமாற்று வேலை செய்து போலியாக உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்தது. இந்நிலையில் இணையத்தளங்களில் இருந்து அந்த ஆபாச படங்களை நீக்குமாறு சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளார் அனுயா. “சமூகவலைத் தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Pages