You are here

திரைச்செய்தி

ரஜினிக்கு ஈடாக விஜய்: வியூகம் வகுக்கிறது திமுக

தமிழ்நாட்டு அரசியலில் பரபரப் பான திருப்பங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் முக்கிய எதிர்க்கட்சி யான திமுக மாநிலத்தில் செல் வாக்குமிக்க நடிகர் யாரையாவது தன் பக்கம் ஈர்க்கவேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகியிருப்ப தாகத் தெரிகிறது. பிரபல நடிகர்களான கமல் ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் அரசியல் பக்கம் தங்கள் பார்வை யைத் திருப்பியிருக்கும் நிலையில், இவர்களின் தாக்கத்தைச் சமாளிக் கும் முயற்சியாக நடிகர் விஜய்யை தன் பக்கம் இழுக்க திமுக வியூ கம் வகுப்பதாக அந்தக் கட்சி யினர் தெரிவிக்கிறார்கள்.

‘டிக் டிக் டிக்’

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கிறது ‘டிக் டிக் டிக்’. இதில் அவரது ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க விண்வெளியை மையப்படுத்தி உருவாகியுள்ள படம். சிங்கப்பூரைச் சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடிக்க, ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக், வின்சன்ட் அசோகன், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். எதிர்வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இது இசையமைப்பாளர் இமான் இசையில் வெளியாகும் 100வது படமாம். இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

அனிருத்: நான் வைபவ், வெங்கட் பிரபு, சிவாவின் விசிறி

வைபவ், சானா அல்தாப்.

‘மேயாத மான்’ படத்தைப் பத்து முறைக்கு மேல் பார்த்துவிட்டாராம் இசையமைப்பாளர் அனிருத். அந்தப் படத்தில் நாயகன் வைபவ் நடிப்பு தம்மை வெகுவாகக் கவர்ந்தி ருப்பதாகக் கூறியுள்ளார். வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகி உள்ளது ‘ஆர்.கே. நகர்’. இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அனிருத். இதில் வைபவ், சானா அல்தாப் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். வில்ல னாக சம்பத் நடிக்க, பிரேம்ஜி இசை யமைத்துள்ளார்.

சிம்பு இசைக்காக காத்திருக்கும் ஓவியா

 ஓவியா

‘ஓவியா நடித்துள்ள படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘90 எம்.எல்.’ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை அனிதா உத்தீப் இயக்கி உள்ளார். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். சிம்பு இசையமைக்கிறார். ‘சக்கபோடு போடு ராஜா’வுக்குப் பிறகு அவர் இசையமைக்கும் படம் இது. விரைவில் பின்னணி இசைப்பணிகளைத் துவங்க உள்ளாராம்.

‘ஆத்ம பரிசோதனை முக்கியம்’

திரிஷா.

எவ்வளவு நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்கள் அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாது என்கிறார் திரிஷா. ஒவ்வொருவரும் தமக்குத் தாமே துணை என்ற எண்ணத்துடன் இருக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். திரிஷா சினிமாவில் நடிக்கத் துவங்கி கிட்டத் தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும்கூட கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார். இவரது நடிப்பில் ‘மோகினி’ உள்ளிட்ட மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது, நண்பர்களுடன் எப்படிப் பழகுவது என்பது குறித்து சில ஆலோசனைகளை அளித் துள்ளார் திரிஷா.

‘குத்தூசி’

சிவசக்தி இயக்கத்தில் திலீபன் நாயகனாக நடித்துள்ள படம் ‘குத்தூசி’. இது விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் படைப்பாம். நாயகியாக அமலா ரோஸ் நடித்துள்ளார். “தற்போது விளை நிலங்கள் சுருங்கி, குறைந்துவிட்டன. விவசாயம் பார்க்க போதுமான ஆட்களும் இல்லை. இந்நிலையில் மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக விளைநிலத்தை விற்க முயற்சிக்கிறார் ஒரு விவசாயி. அதை விரும்பாத மகன் நிலத்தை விற்க விடமால், வாழ்க்கையில் சாதித்துக் காட்டுகிறார் என்பதுதான் கதை,” என்கிறார் இயக்குநர்.

மேலும் செய்திகளுக்கு

திரையில் மோதப்போகும் கதாநாயகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன்

இடையே பனிப்போர் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இருவரும் தொடர்ந்து அதை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் நடித்துள்ள புதுப்படம் ஒரே நாளில் வெளியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ‘சீமராஜா’வில் நடித்து வருகிறார் சிவகார்த்தி கேயன். இதில் அவரது ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடை பெற்று வருகிறது. இதில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

நிவேதா பெத்துராஜ்: சவால்களைச் சந்திக்கப் பிடிக்கும்

நிவேதா பெத்துராஜ்.

கார்ப் பந்தயத்தில் போட்டியிட்டு பல மாதிரியான அனுபவங்களையும் நான் பெற்றுள்ளேன். போட்டிகளில் சில முறை வென்றுள்ளேன்; பலமுறை தோற்றுள்ளேன். வெற்றி தோல்வி யைக் காட்டிலும் முக்கியமாக சவால் களைச் சந்திப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். “வெற்றியும் தோல்வியும் வீர னுக்கு அழகு என்று சொல்வர். வெற்றிபெற்றபின் வீறு கொண்டு எழுவதும் தோல்வி கண்டதும் துவண்டு விடுவதும் எனது வழக்கமல்ல. என்னைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டுமே எனக்கு ஒன்றுதான்.

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய காதல் பாடல்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா.

நயன்தாரா நடித்து வரும் படத் திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் சிறப்புப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இயக்குநர் நெல்சன் இயக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. லைக்கா புரொடக் ஷன்ஸ் தயா ரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் 3வது பாடலை நேற்றிரவு 7 மணிக்கு அனிருத் வெளியிட்டார். ‘ஒரே ஒரு’ என்று தொடங்கும் இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வருவதாகக் கூறப்படும் நிலை யில் அவர் நயன்தாராவிற்காகப் பாடல் எழுதியிருப்பது ரசிகர் களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 13ல் ‘கடைக்குட்டிச் சிங்கம்’ வெளியீடு

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. அவருடன் சாயிஷா சைகல், பிரியா பவானி சங்கர், அர்த்தனா உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விவசாயப் பின்னணியில் குடும்பப் பாங்கான படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Pages