திரைச்செய்தி

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ படம் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் சூர்யா, திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 3டி முறையில் படமாக்கப்பட்டு வருகிறது.
கமல் நடிக்க இருக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் பிரபலங்கள் பலர் இணைந்திருக்கின்றனர்.
கார்த்தி ‘ஜப்பான்’ படத்திற்குப் பிறகு ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகனாக நடித்து வருகிறார்.
‘ஹனுமான்’ திரைப்படத்துக்கு விற்கப்படும் டிக்கெட்டுகளில் ஒவ்வொன்றில் இருந்தும் 5 ரூபாயை அயோத்திக்கு வழங்க முடிவு செய்துள்ளது படக்குழு.
பார்த்திபன் மூலம் வடிவேலுக்கு உருவாகும் சிக்கல்கள்தான் இவர்களது நகைச்சுவைக் காட்சிகள். மீண்டும் நாங்கள் இணையலாம் என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.