You are here

திரைச்செய்தி

எழில் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி

உதயநிதி

எழில் இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராம். அண்மையில் எழில் இயக்கத்தில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து உதயநிதியைச் சந்தித்து கதை சொன்னாராம் எழில். அது பிடித்துப்போனதால், அதில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், தானே தயாரிப்பதற்கும் முன் வந்துள்ளார் உதயநிதி. இந்தப் படத்தில் சூரியும் நடிக்க இருக்கிறாராம்.

‘நெருப்புடா’ பாடல் தலைப்பைக் கைப்பற்றிய விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

‘கபாலி’ படத்தின் பாடல் தலைப்பு ஒன்றை விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார். அது என்ன பாடல்? ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலின் முன் னோட்ட காட்சிகளும் இணையத் தில் வெளியாகி பல்வேறு சாத னைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், ‘நெருப்புடா’ என்ற பாடல் தலைப்பை தற்போது விக்ரம் பிரபு கைப்பற்றியுள்ளார்.

நயன்தாராவை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

திரையுலகில் நயன்தாராதான் தனக்கான முன் உதாரணம், வழிகாட்டி என்கிறார் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ். “இந்தியில் நடிக்க வருமாறு எனக்குப் பலமுறை அழைப்பு வந்தது. இந்த விஷயத்தில் நான் நயன்தாராவைப் பின்பற்றினேன்,” என விளக்கமும் தருகிறார். கடந்த ஆறு மாதங்களாகவே அவருக்கு வெவ்வேறு தரப்பிடம் இருந்தும் இந்தியில் நடிக்க வருமாறு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றனவாம். ஆனால் யாரிடமும் கீர்த்தி அகப்படவில்லை. “இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது என்று சொல்வார்கள். அதை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன்.

காதல் தோல்விக்கு கலங்கக்கூடாது - காஜல் அகவர்வால்

காஜல் அகவர்வால்

காதலில் தோல்வி அடைந்தால் வருத்தப்படக்கூடாது என்று நடிகை காஜல் அகவர்வால் கூறியுள்ளார். எல்லா காதலும் வெற்றி பெற்று திருமணத்தில் முடிவது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இன்று பெரும்பாலான இளையர்கள் காதல் வயப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை காதலோ டுதான் நகர்கிறது. ஆனால் காதலில் தோல்வி அடைந்தவர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள். நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். அதில் இருந்து அவர்கள் மீண்டு புதிய வாழ்க் கையைத் தொடங்க வேண்டும்.

பவர்ஸ்டாருக்காக அமைக்கப்பட்ட வித்தியாசமான பின்னணி இசை

பவர்ஸ்டார் சீனிவாசன்

திரை வண்ணன் இயக்கத்தில் சிவா, பவர்ஸ்டார், நைனா சர்வார் இணைந்து நடித்துள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’. ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், பவர்ஸ்டார் சீனிவாசன் இடம்பெறும் முக்கியமான காட்சிகளுக்கு என வித்தியாசமான பின்னணி இசையை அமைத்திருப்பதாகச் சொல்கிறார் ரகுநந்தன். “பின்னணி இசைக்கான பணியைக் கவனிக்கும் சமயங்களில் எல்லாம், பவர்ஸ்டார், சிவா இணைந்துள்ள காட்சிகள் தினமும் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தன.

ஒரே படத்தில் மகேஷ்பாபு, விஜய்

ஒரே படத்தில் மகேஷ்பாபு, விஜய்

இயக்குநர் சுந்தர்.சி பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் அதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பார் என்றும் கலை இயக்குநராக சாபுசிரில், கிராபிக்ஸ் நிபுணராக கமலக்கண்ணன் பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் நாயகன் யார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.

விஷால் படம்: மஞ்சிமா விளக்கம்

‘சண்டக்கோழி 2’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். விஷால் ஜோடியாக தாம் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் இளம் நாயகி மஞ்சிமா மோகன். விஷால் அடுத்ததாக லிங்குசாமி இயக்கவுள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகியான மஞ்சிமா மோகன் நடிக்க உள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியை மஞ்சிமா மறுத்துள்ளார்.

படத்தில் இருந்து விலகிய சமந்தா

சமந்தா

விரைவில் திருமணம் செய்ய இருப்பதால் தனு‌ஷின் ‘வட சென்னை’ படத்தில் இருந்து அதன் நாயகி சமந்தா விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இளம் நடிகர் ஒருவரைக் காதலிப்பதாக அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சமந்தா. அவர் குறிப்பிட்டது நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா என்று தகவல் பரவியுள்ளது. எனினும் இருதரப்புமே இதை இன்றுவரை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருந்தார் சமந்தா. இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. மொத்தம் மூன்று பாகங்களாக இப்படம் தயாராகிறது.

கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகிறது ‘கவலை வேண்டாம்’

ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் ‘கவலை வேண் டாம்’

ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் ‘கவலை வேண் டாம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா நடிப்பில் கடைசியாக ‘போக்கிரி ராஜா’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் நடிக்கும் படம் ‘கவலை வேண்டாம்’. இதில் ஜீவா ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

சாந்தினிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

சாந்தினி

திரையுலகில் தனக்கான அங் கீகாரம் கிடைத்துவிட்டதாக பூரிப்புடன் சொல்கிறார் இளம் நாயகி சாந்தினி. தற்போது எட்டு புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், இதுவே தனக்கு அங்கீ காரம் கிடைத்ததற்கான அடையாளம் என்றும் அவர் கூறுகிறார்.

கே. பாக்யராஜின் இயக்கத்தில் சாந்தனு வுடன் ‘சித்து+2’ படத்தில் கதாநாயகி யாக அறிமுகமான வர் சாந்தினி. பின்னர் ‘வில் அம்பு’ உள்பட சில படங் களில் நடித்தார்.

Pages