You are here

திரைச்செய்தி

டாப்சியின் பிரசாரம்

டாப்சி

நடிகை டாப்சியை தமிழ்ப் படங் களில் தொடர்ந்து காண முடிய வில்லை. அம்மணி இந்தியில் பிசியாக இருப்பதாக சில ரும், வேறு புது வாய்ப்புகள் கிடைக் காத காரணத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாக ஒரு தரப்பும் மாறி மாறி சொல்லி வரு கின்றனர். இரண்டில் எதுதான் உண்மை என தெரிந்து கொள்ள வேண்டாமா? விசாரித்த போதுதான் டாப்சி பிற மொழி படங் களில் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது உறுதி யானது. அது மட்டுமல்ல, நடிப் புடன் சேர்த்து சமூக சேவைகளி லும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளாராம்.

குழந்தை கடத்தல் குறித்த படம் ‘காத்தாடி’

குழந்தை கடத்தல் குறித்த படம் ‘காத்தாடி’

கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காத்தாடி’. இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார். இவர் நடிகை ஸ்ரீதேவி யின் அக்காள் மகன். நடிகை மகேஸ்வரியின் சகோதரர். இப் படத்தின் கதாநாயகியாக தன்‌ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், குமார் டேனியல், நான் கடவுள் ராஜேந்திரன், ‘பசங்க’ சிவகுமார், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பேபி சாதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம். ஜெமின் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு இசையமைத்துள் ளார் பவன். பின்னணி இசையை மட்டும் தீபன் என்பவர் வழங்கி உள்ளாராம்.

‘இறைவி’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள்

‘இறைவி’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள்

­­­‘இறைவி’ படத்­தில் படத்தயா­ரிப்­பா­ளர்­களைத் தவறாக சித்­தி­ரித்­ததோடு தமி­ழர்­களின் மனம் புண்­படு­மாறு வச­னங்கள் அமைத்­த­தற்­கும் இயக்­கு­நர் கார்த்­திக் சுப்­பு­ரா­ஜிற்­கு படம் இயக்கத் தடை­வி­திக்தத் தயா­ரிப்­பா­ளர்­கள் சங்கத் தலைவர் கலைப்­புலி தாணு தலைமை­யில் குழு ஒன்று கூடியிருக்கிறது. ‘இறைவி’ படத்­தின் ஒரு காட்­சி­யில் “தமிழ் தமிழ் எனப் பேச­ற­வங்களுக்­குச் சரியான செருப்­படி கொடுத்­தீங்க,” என்ற ஒரு வசனம் தமிழ் இன உணர்­வா­ளர்­களை மிகவும் கோபப்­படுத்­தி­யி­ருக்­கிறது.

விவசாயி ஆகிறார் விஷால்

விஷால்

நடிகர் சங்கப் பொதுச்செயலாளரான விஷால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின், நெல் திருவிழாவில் கலந்து கொண்டார். “விவசாயிகளின் சிரமங்கள் பற்றி செய்தித்தாளில் படிப்பதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது. நாமும் அவர்கள் போல் விவசாயம் செய்தால்தான் அவர்களின் சிரமங்கள் புரியும். அதனால் நான் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன்,” என்று விஷால் அறிவித்திருக்கிறார்.

இலக்கைக் காட்டிய கடவுளுக்கு நன்றி - தன்‌ஷிகா

தன்‌ஷிகா

சிறிய வர­வு­செ­ல­வுத் திட்ட படங்களில் அறி­மு­க­மாகி நடித்து வந்த தன்‌ஷிகா, எஸ்.பி.ஜக­நா­த­னின் ‘பேராண்மை’, பாலாவின் ‘பரதேசி’, வசந்த­பா­ல­னின் ‘அரவாண்’ படங்களில் நடித்­த­தன் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் முக்கிய நடிகை­யானார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜி­னி­யின் மகளாக ‘கபாலி’யில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்­ச­லுக்­குத் தயாராகி வரு­கிறார். தன்‌ஷிகா வாய்ப்­பு­களுக்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது கைகொ­டுத்த படம் ‘காத்தாடி’. அண்மை­யில் வெளி வந்த ‘கத சொல்­லப்­போ­றோம்’ படத்­தின் பாடல் வெளி­யீட்டு விழா அண்மை­யில் நடந்தது.

மனதுக்குப் பிடித்த மணமகன் சிக்கவில்லை - ஸ்ரேயா

ஸ்ரேயா

நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா உள்ளிட்ட சில கதாநாயகிகள் 30 வயதைத் தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்கள். இவர்களிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தால், “எங்கள் மனதுக்குப் பிடித்த மாப்பிள்ளை இன்னும் சிக்கவில்லை, திருமணத்துக்கான நேரம் கனியவில்லை,” என்றெல்லாம் காரணங்கள் சொல்லி நழுவுகிறார்கள். இதனால் அவர்களின் பெற்றோர்கள் பெரும் தவிப்பில் உள்ளனர். சில கதாநாயகிகள் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகிறார் கள். பிரியாமணியும் சமந்தாவும் தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

மீரா ஜாஸ்மின்: காதலிப்பதை தவிர நாயகிகளுக்கு வேறு வேலையில்லை -

நாயகனை காதலிப்பதைத் தவிர பெண் கதாபாத்திரங்களுக்கு சினிமாவில் வேறு வேலை இல்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் கூறியுள்ளார். “சமூகத்திலும் சினிமா விலும் பெண் ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கி றாள். கதாநாயகனுடன் மரத் தைச் சுற்றி ஒடுவது, காத லிப்பது, நடனமாடுவது இதைத் தவிர பெண் கதாபாத்திரங் களுக்கு சினிமாவில் வேறு வேலையில்லை.

விஜய்யின் ‘எங்க வீட்டு பிள்ளை’

விஜய் தனது 60வது படத்தில் நடித்து வரு கிறார். ‘அழகிய தமிழ் மகன்’ பட இயக்குநர் பரதன் இயக்கி வருகிறார். இப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில் லை. படப்பிடிப்பு முடிந்த பிறகே படத்திற்கு பெயர் தேர்வு செய்யப்படுகிறது. முதலிலேயே பெயர் வைத் தால் அது தங்களுக்குச் சொந்தம் என்று சிலர் சர்ச்சை கிளப்புவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அஜித் கொள்கைகளைப் பின்பற்றும் நயன்தாரா

திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் நயன்தாரா விடம் காதல் தோல்விக்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவும் பிரபுதேவாவை பிரிந்த பிறகு, படப்பிடிப்புத் தளங்களில் அமைதியே உருவாக இருந்தார். மதிய இடைவேளை நேரங் களில் நடிகர், நடிகைகள், மற்ற ஊழியர்கள் அனைவரும் ஜாலி யாக அமர்ந்து அரட்டையடிக்க இவர் மட்டும் தனியாக சென்று கேரவனிலேயே உட்கார்ந்திருப்பார். தனிமை விரும்பியாக இருந்தார்.

முன்னோட்டத்துக்கு வரவேற்பு

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘தர்மதுரை’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பாம். இப்படத்தில் முதன்முறையாக தமன்னாவுடனும் சிருஷ்டி டாங்கேவுடனும் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

Pages