You are here

திரைச்செய்தி

‘மானசி’

‘மானசி’ படத்தின் ஒரு காட்சியில் நரேஷ்குமார், ஹாரிசா.

ஆடுகளைப் பாசத்துடன் வளர்க்கும் இளைஞனின் கதை ‘மானசி’ மூவி மேஷன்ஸ் எம்.ஜே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மானசி’. நரேஷ்குமார் என்ற புதியவர் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் நவாஸ் சுலைமான்.

‘மீண்டும் ஒரு காதல் கதை’

‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தில் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார்.

ரசிகர்களைக் கவர வருகிறது ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மலையாளத் திரையுலகில் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இது தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் நடித்த இஷா தல்வார் இதிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாடலாசிரியர் அருண் காமராஜ் எழுதிய ‘மைபோட்டு மைபோட்டு’ எனும் பாடல் வெளியாகி உள்ளது. இது திருமணச் சடங்கின் போது பாடப்படும் பாடலாக அமைந்துள்ளது.

ஜனனி: ரசிகர்கள் மனதைக் கவர்வேன்

ஜனனி அய்யர்

பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் புகழ் பெற்ற ஜனனி அய்யர், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ‘பிரேமம்’ படத்தில் வந்த மலர் ஆசிரியை போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்போது ‘உல்டா’, ‘தொல்லைக்காட்சி’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடிக்கிறார் ஜனனி. “ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் ‘உல்டா’. மனோத்துவ ரீதியிலான திகில் கதையுடன் இப்படம் தயாராகி உள்ளது.

யதார்த்தமான கதையுடன் தயாராகும் படம் - ‘ஜெனிபர் கருப்பையா’

யதார்த்தமான கதையுடன் தயாராகும் படம் - ‘ஜெனிபர் கருப்பையா’

டி.எஸ். வாசன் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜெனிபர் கருப்பையா’. கதாநாயகியாக மிருதுளா விஜய் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்கபூர், ரோகினி, பாத்திமா பாபு, செவுந்திரபாண்டி, மாஸ்டர் பரணி, சிவாஜி, ராஜ்முரளி ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லன் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசராவின் தம்பி கோட்டா சங்கர் ராவ் இந்த படத்தில் வில்லனாக அறிமுகம் ஆகியுள்ளார். கதை, திரைக்தை, வசனம் எழுதி இயக்குபவர் ஜி.எம்.சரவணபாண்டி. இவர் ‘தலைமுறை’ படத்தை இயக்கியவர்.

இளம்நாயகி சாதனாவின் லட்சியம்

சாதனா டைட்டஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாதனா டைட்டஸ். இவர் நல்ல படங்களில் நடிப்பதே தனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். இப்போது சக்தி இயக்கும் ‘எய்தவன்’ படத்தில் மட்டும் கலையரசன் ஜோடியாக நடித்து வருகிறார் சாதனா. தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். “தமிழில் எனது முதல் படம் ‘பிச்சைக்காரன்’.

விரக்தியுடன் ‘நம்பியார்’ படத்தை வெளியிடும் ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த், சுனேனா

ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா முதன்முறையாக தயாரித்திருக்கும் படம் ‘நம்பியார்’. இதில் ஸ்ரீகாந்த், சுனேனா, சந்தானம் நடித்திருக்கிறார்கள். கணேஷ் இயக்கியுள்ளார். தணிக்கை பிரச்சினையால் படம் வெளியாவது தாமதமாகிறது என்று தகவல் வெளியானது. இது பற்றி ஸ்ரீகாந்த் சலிப்புடன் நடந்ததை விவரிக்கிறார். “நகைச்சுவைக்கும் குடும்ப உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகியுள்ளது.

இமான்: வதந்திகளை நம்பாதீர்கள்

இமான்

அதிக சம்பளம் வாங்குவதாக தன்னைப் பற்றி பரவும் செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் இமான் அண்ணாச்சி. “சினிமாவில் எப்படி ஜெயிப்பது என்று தெரியாமல் நானும் திணறியிருக்கிறேன். வாய்ப்புத் தேடியபோது நண்பர்கள் சிலர் ஒரு தேநீர்க் கடையில் கூடிப் பேசுவோம். இப்போது அவர்களில் பலர் உயரமான இடங்களுக்குப் போய்விட்டனர். ஆனாலும் இன்னமும் சிலர் அங்கே அன்றாடம் வருவதைப் பார்க்கிறேன். அப்போது வருத்தமாக இருக்கும்.

படப்பிடிப்பில் காயமடைந்த ஐஸ்வர்யாராய்

படப்பிடிப்பில் காயமடைந்த ஐஸ்வர்யாராய்

நடிகை ஐஸ்வர்யாராய் இந்திப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சிறையில் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங் வாழ்க்கை இந்தியில் திரைப்படமாக தயாராகிறது. சரப்ஜித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர். பாகிஸ்தானில் இந்திய உளவாளி என்று சந்தேகித்து இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இந்தச் உண்மை சம்பவத்தின் பின்னணியில் திரைப்படம் தயாராகிறது. இதில் சரப்ஜித் கதாபாத்திரத்தில் ரந்திப் ஹோடாவும் அவரது சகோதரி தல்பிர் கவுர் வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கின்றனர்.

மே 5ஆம் தேதி வெளியாகிறது ‘தர்மதுரை’ படத்தின் பாடல்கள்

மே 5ஆம் தேதி வெளியாகிறது ‘தர்மதுரை’ படத்தின் பாடல்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தர்மதுரை’. இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் மே மாதம் 5ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையில் அமைந்துள்ள இப்பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன், தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார்.

சிவகார்த்தி, பகத் பாசில் கூட்டணி

சிவகார்த்தி, பகத் பாசில் கூட்டணி

சிவகார்த்திகேயனும் மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பகத் பாசில் மலையாள சினிமா உலகின் பரபரப்பான நடிகர்களில் ஒருவர். பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், அவர் நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்ததில்லை. இந்நிலையில், முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழ் படத்தில் நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயன் இப்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார்.

Pages