You are here

திரைச்செய்தி

சிவாதான் எனது முன்மாதிரி: பிரியா

பிரியா பவானி சங்கர்.

திரையுலகில் சிவகார்த்திகேயன் தான் தனக்கு முன்மாதிரி என்கிறார் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சித் தொடர் மூலம் பலரையும் ஈர்த்த இவர், 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர். இந்நிலையில் தனது வளர்ச்சிக்குக் காரணம் ரசிகர்கள்தான் என்று அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். திரைப்பட வாய்ப்புத் தடி வந்தபோது அதை ஏற்க முதலில் தயங்கினாராம். பிறகு சிவகார்த்திகேயன் பற்றி நினைத்தபோது தமக்குத் தைரியம் வந்தததாகச் சொல்கிறார்.

"தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோதே எனக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். திரைப்பட வாய்ப்பு வந்தபோது ஏற்கத் தயங்கினேன்."

லட்சுமிக்குப் பயனளித்த உரையாடல்

 லட்சுமி மேனன்

நடனம் குறித்து பிரபுதேவாவுடன் விரிவாகக் கலந்துரையாடியது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாக லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். 'யங் மங் சங்' படத்தில் இவரும் பிரபுதேவாவும் இணைந்து நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தமிழில் லட்சுமி நடிக்கும் படம் இது. இப்படத்தில் நடிப்பதற்கு பிரபுதேவாதான் முக்கிய காரணமாம்.

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் காஜல்

தெலுங்குத் திரையின் முன்னணி நடிகராக இருந்த என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரும் திரை நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் என்.டி.ஆர். கதாபாத்திரத்தில் அவரது மகன் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அண்மையில் இந்தப் படத்திற்கு பூசை போடப்பட்டது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மூத்த நடிகருடன் இணையும் தமன்னா

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்த தமன்னா தற்பொழுது தந்தை வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘பாகுபலி’ படங்களைப் பார்த்து அவரைப் பாராட்டாத ஆட்களே இல்லை. அதனால் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் கிடைக்கவில்லை.

கின்னஸ் புகழ் ‘ரிதம் மசாலா’

இந்திய கலாசார திருவிழாவின் ஓர் அங்கமாக, இந்தியர் மரபு டைமை நிலையத்திற்கு வெளியே இன்று காத்திருக்கிறது அதிர் வூட்டும் அசத்தலான ஒரு கலைப் படைப்பு. புகழ்பெற்ற ‘டிரம்ஸ்’ தாள வாத்தியக் குழுவான ‘ரிதம் மசாலா’, இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை தாள வாத்திய இசைவிருந்து படைக்க உள்ளது. பாரம்பரிய இந்திய தாள வாத்தியக் கருவிகளான தபேலா, தவில் போன்றவற்றுடன் மேற் கத்திய, மத்திய கிழக்கு ‘டிரம்ஸ்’ கருவிகளை ஒருசேர வாசிக்க உள்ளனர் ‘ரிதம் மசாலா’ குழுவி னர். இக்குழுவைத் தோற்றுவித்த வரான 48 வயது திரு பாஸ்கரன் ஸ்ரீகரம், 2001ஆம் ஆண்டு முதல் தமது சக கலைஞர்களுடன் ‘டிரம்ஸ்’ வாசித்து வருகிறார்.

‘எனக்கு திருமணம் நடக்குமா?’

கவுதம் கார்த்திக் தன்னுடைய திரையுலக அனுபவத்தைப் பற்றியும் தற்பொழுது நடித்து வரும் படங்களைப் பற்றியும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திரையில் அதிகம் சாதிக்கவேண்டி இருப்பதால் திருமணத்தில் தற்பொழுது விருப்பம் இல்லை. திருமணம் என்று ஒன்று நடக்குமா என்று தெரியவில்லை,” என்று மனம்திறந்து பேசினார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து எந்த மாதிரி படம்?

தாய்மை அடைவதைத் தள்ளி வைக்கும் சமந்தா

திருமணத்துக்குப் பிறகு சமந்தா நடித்து திரைக்கு வந்திருக்கும் ‘ரங்கஸ்தலம்’ தெலுங்கு படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது. அதனால் அவரைத் தங்களுடைய படங்களில் நடிக்குமாறு பல இயக்குநர்கள் அணுகி உள்ளனர். இதற்கிடையில் அவர் ஐந்து படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு இருக்கிறார். வரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். அதனால் தாய்மை அடைவதற்கான காலத்தைத் தள்ளிப்போட்டு இருக்கிறாராம்.

‘டூலெட்’ தமிழ்ப் படத்திற்கு தேசிய விருது

கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான 65வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. பிரபல இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான குழு விருதுகளைத் தேர்வு செய்தது. விருதுகளை அறிவிக்கும்போது, ‘வட்டார மொழி திரைப்படங்கள் தரத்தில் வியக்க வைக்கின்றன’ என்று சேகர் கபூர் தெரிவித்தார். அறிவிக்கப்பட்ட விருதுகள் மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி 2’ படத்திற்கு ‘சிறந்த வெகுஜனப்படம்’, ‘சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர்’ (பீட்டர் ஹெய்ன்), ‘சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்’ என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன.

‘காளி’ பட வெளியீடு: தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நாயகனாக நடித் துள்ள ‘காளி’ படத்துக்கு நீதிமன் றம் விதித்த தடை நீங்கியுள்ளது. விஜய் ஆண்டனி ‘அண்ணாதுரை’ படத்தை வெளியிட்ட தால் தமக்கு ஏற்பட்ட ரூ.4.73 கோடியை ஈடுகட்டும் வரை ‘காளி’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என ‘பிக்சர் பாக்ஸ்’ அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடுத்தார். இதைய டுத்து ‘காளி’க்கு தடை விதிக்கப்பட் டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தை அணுகினார் விஜய் ஆண்டனி. அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘பிக்சர் பாக்சு’க்கு ரூ.2 கோடியை விஜய் ஆண்டனி நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வைப்புத் தொகையாக செலுத்திய பின் படத்தைத் திரையிடலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

உற்சாகத்தில் மிதக்கும் பிரியா

பிரியா பவானிசங்கர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குத் தாவிய பின்னர் பிரியா பவானிசங்கரின் காட்டில் அடைமழைதான். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமானவர், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், அவரது முறைப்பெண்ணாக நடிக்கிறார். அடுத்து அட்லியின் உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடி இவர்தான். இந்நிலையில் ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க, அவரது ஜோடியாக பிரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வருவதால் உற்சாகத்தில் திளைக்கிறாராம் அம்மணி.

Pages