You are here

திரைச்செய்தி

அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகும் ‘பூமராங்’

‘இவன் தந்திரன்’ படத்தை அடுத்து அதர்வாவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார் ஆர்.கண்ணன். இப்படத்துக்கு ‘பூமராங்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம். அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பவர் மேகா ஆகாஷ். திரைத்துரையில் நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக இப்படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்படம் வெளியீடு காணத் தயாராகி வருகிறது.

‘அனைத்திலும் தனித்துவம் இருக்கும்’

 இந்துஜா.

தமது நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது தனித்துவம் இருக்கும் என்கிறார் நடிகை இந்துஜா. கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். ‘மெர்க்குரி’ படத்தில் இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். “முதலில் தமிழகம் தவிர மற்ற இடங்களில்தான் ‘மெர்க்குரி’ திரைப்படம் வெளியானது. எப்போது தமிழகத்தில் வெளியாகும் என ஒருவித படபடப்புடன் காத்திருந்தேன்.

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் ரம்யா பாண்டியன்

தனது வீட்டிலேயே அழகான தோட்டம் அமைத்து இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் இளம் நாயகி ரம்யா பாண்டியன். தன் வீட்டு மாடியில் உள்ள அந்தத் தோட்டத்தில் பாலக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள், கத்தரி, வெண்டை, வெள்ளரி என பல்வேறு காய்கறிகளை வளர்த்து வருவதாகச் சொல்கிறார். “என் வீட்டுத் தோட்டத்து காய்கறிகளைக் கொண்டே தினமும் சமைத்துச் சாப்பிடு வோம். அதில் தனி சுகம் இருக்கிறது. இந்தக் காய்கறி களில் கூடுதல் சுவை இருப்ப தாகவும் தோன்றுகிறது,” என்கிறார் ரம்யா.

மாறுபட்ட வேடத்தில் ரகுல் பிரீத்

ரகுல் பிரீத் சிங்

‘என்ஜிகே’ படத்தில் மிகவும் அருமையான வேடம் கிடைத்திருக்கிறது என பூரிப்புடன் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங். இதுவரை அவர் நடித்திராத மாறுபட்ட வேடம் என்றும் கூறியுள்ளார். அண்மைக் காலமாக இயக்குநர் செல்வராக வனைப் பற்றி ரகுல் பிரீத் பாராட்டித் தள்ளுவது தெரிந்த சங்கதிதான். அவரது இயக்கத்தில் உருவாகும் ‘என்ஜிகே’ படத்தில் ரகுல்தான் நாயகி. இந்தப் படம் தனது திறமையை பறைசாற்றும் என்கிறார் ரகுல். “எனது நடிப்புத் திறமை நன்றாக வெளிப்படும் பாத்திரத்தை செல்வராகவன் எனக்கு கொடுத்து இருக்கிறார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.

மிரள வைக்க வரும் ‘வெல்வெட் நகரம்’

தமிழ்ச் சினிமாவில் வரலட்சுமிக்கான நல்ல நேரம் துவங்கிவிட்டது போலும். வரிசையாக நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில் லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக்களம் கொண்டவை. அதிலும் ‘வெல்வெட் நகரம்’ ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் என்கிறார் வரலட்சுமி. அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன் இயக்கும் படம் இது. “நம் எல்லோரிடத்திலும் ஒரு மிருகம் உறங்கிக் கொண்டே இருக்கும். அது நல்ல மிருகமா, கெட்ட மிருகமா என்பது நமக்கு மட் டுமே தெரியும். பொதுவாக அந்த மிருகத்தை நாம் நாகரிகம் என்ற போர்வையில் நாம் கட்டிப்போட்டிருக்கிறோம்.

‘நடிகையர் திலகம்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படத்துக்கு, தணிக்கைக்குழு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற செய்தியாளர் வேடத்தில் சமந்தாவும், விஜய் அந்தோணி என்ற புகைப்படக் கலைஞர் வேடத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர்.

பிள்ளையைக் காப்பாற்றத் துடிக்கும் தாயாக பூர்ணா

“கணவர், குழந்தைகள் என்று மகிழ்ச்சியான இல்லறவாழ்வில் ஈடுபட்டிருக்கும் பூர்ணா திடீரென ஓர் அதிர்ச்சி சம்பவத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது. தன்னுடைய குழந்தைகளைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் பேயிடமிருந்து குழந்தைகளை பூர்ணா எப்படி காப்பாற்றினார் என்பதே ‘குந்தி’ என்கிற படத்தின் கதை,” என்கிறார் படத்தைத் தமிழில் மறுபதிப்பு செய்திருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா. தெலுங்கில் ‘ராட்சசி’ என்கிற பெயரில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தப் படம்.

அனுஷ்காவின் ஆன்மீகப் பயணம்

புகழின் உச்சியில் இருக்கும் நடிகை அனுஷ்கா தமிழ்த் திரையில் உயரமான நடிகை என்று கூடச் சொல்லலாம். ‘பாகுபலி’ படத்தின் மூலம் தனியான சிறப்பைப் பிடித்துவிட்டார். ‘அருந்ததி’, ‘பாகமதி’ எனச் சில நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளால் அவருக்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அனுஷ்கா மற்ற நடிகைகளைப்போல கிடையாது. பொது விழாக்களில் கூட அவர் இயல்பான பெண் போலவே எளிமையாக இருப்பார்.

‘கனவு காண எனக்குப் பயம்’

‘கண்ணுக்குள்ளே’, ‘ராமர்’, ‘சூரன்’, ‘திலகர்’, ‘ஒரு நாள் இரவில்’ போன்ற படங்களில் நடித்திருப்பவர் அனுமோல். இவருக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களே தொடர்ச்சியாக வருகின்றன. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “நான் இதுவரை ஏற்று நடித்த வேடங்கள் என்னை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் எனது மனதுக்குப் பிடித்த வேடமாக இருக்க வேண்டும். பல நடிகைகள் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று பரிசோதனை முயற்சியில் இறங்குகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்: சாவித்திரியாக வாழ்ந்தேன்

“இன்றைய தலைமுறையினருக்கு நடிகை சாவித்திரியைப் பற்றித் தெரிந்திருந்தாலும் அவர் நடித்த படங்களைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். இந்த இளம் தலைமுறையினருக்கு பழம்பெரும் நடிகை சாவித்திரியை கண்முன்னே கொண்டு வர இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். படத்தில் அவருடைய அனுபவத்தையும் அவர் சந்தித்த சவால்களையும் கூறும்போது, “சாவித்திரி மேடம் ஒரு சராசரி மனு‌ஷி. அவர்களுக்கு நடந்ததுபோல் இன்றைக்கு யாருக்கும் நடக்காது என்று சொல்ல முடியாது. இந்த ஒரு விஷயமே ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு போதுமான செய்தி யாகும்.

Pages