You are here

திரைச்செய்தி

“இனியும் நடைபோடுவேன்”

‘பலூன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல ‘ஜீ தமிழ்’ கைப்பற்றியுள்ளது. இதனால் அப்படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். எனவே அப்படத்தின் நாயகி அஞ்சலியும் மகிழ்ச்சியில் திளைக்கிறார் என்பது ஆச்ச ரியத் தகவல் அல்ல. திரையுலகில் நடிக்க வந்து சத்தமின்றி பத்து ஆண்டு களைக் கடந்துள்ளார் அஞ்சலி. இன்னொரு பத்து ஆண்டுகள் சினிமாத் துறையில் நீடிக்க வேண்டும் என்பதே இவரது விருப்பமாம். அஞ்சலி நடிப்பில் ‘பலூன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் ஜெய்யுடன் இணைந்து நடித் துள்ளார். இப்படத்தில் தான் ஏற்றுள்ள கதா பாத்திரம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பது அஞ்சலி யின் நம்பிக்கையாக உள்ளது.

கவர்ச்சி உடையில் சூர்யா பட நாயகி

நடிகை மீரா மிதுன் நகைக்கடை விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படம் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டத்தை வென்றவர் சென்னையைச் சேர்ந்த மீரா மிதுன். ஒப்பனைப் போடப் பிடிக்காத இவர் மாடல் அழகியான பிறகே ஓப்பனைப் போட ஆரம்பித்தாராம். இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் மீரா நடிகையானார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திச் சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மீரா மிதுனும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வேலைக்காரன்’ வசூலில் வென்றான்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் மக்களுக்குத் தேவையான சமூக கருத்துகள் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளதால் ‘வேலைக்காரன்’ படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சென்னையில் மட்டும் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.89 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதிதிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்று கூறுவதுபோல் அதிதிக்கு திரைப்பட வாய்ப்புகள் பல குவிந்து வருகின்றன. ‘பிரேமம்’ படத்தில் மலர் ஆசிரியராக நடித்த சாய் பல்லவிக்கும் ‘இறுதிச் சுற்று’ படத்தில் மதியாக நடித்த ரித்திகா சிங்கிற்கும் எவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளதோ அதேபோன்ற வரவேற்பு ‘அருவி’ படத்தில் நடித்த அதிதி பாலனுக்கும் கிடைத்துள்ளது. இதில் அவரது நடிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டும் ‘வாடி ராசாத்தி’ என சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது.

‘சீவலப்பேரி பாண்டி’ விஜய் சேதுபதி

‘சீவலப்பேரி பாண்டி’யின் கதையைத் தற் போதைய காலகட்டத்திற்கு தகுந்தாற்போல் சிறிது மாற்றம் செய்து மறுபதிப்பு செய்து வெளியிட இருக்கிறார் பி.ஜி.ஸ்ரீகாந்த். இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக் கிறார். ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தில் ஆதித்யனிடம் கீபோர்டு வாசிப்பவராகப் பணியாற்றி யவர்தான் இந்த ஹாரிஸ் ஜெயராஜ். நெப்போலியன் நடித்த வேடத்தில் விஜய் சேது பதியை நடிக்க வைப் பதற்கான பேச்சுவார்த் தைகள் தற்போது நடைபெற்று வருகின் றன. சம்பளம், கால்‌ஷீட் பிரச்சினை கள் காரணமாகப் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் சாக்‌ஷி

மாடல் அழகியான சாக் ‌ஷி அகர்வால் அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்புத் தோற்றத் தில் நடித்திருந்தார். ‘யோகன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த இவர், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், கன்னடப் படங்களில் நடித்துவரும் சாக் ‌ஷி அகர்வால் முதன் முறையாக மலையாளத்திலும் அடியெடுத்து வைக்கிறார். ‘ஓராயிரம் கினாக்கள்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் சாக்‌ஷி அகர்வால், பிரமோத் மோகன் இயக்கும் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

‘இயக்குநர்தான் முக்கியம்’

பார்வதி நாயர்

‘நிமிர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களைச் சந்திக்க உள்ளார் பார்வதி நாயர். பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ஜனவரியில் வெளியீடு காண்கிறது.

காஜல் கூறும் திடீர் அறிவுரை

காஜல் அகர்வால்.

“சினிமா நிரந்தரமானது அல்ல. எனவே இதைத் தவிர்த்து இன்னோர் உலகத்தில் பிரவேசிக்கவும் தயாராக இருக்கவேண்டும்,” என்று பக்குவமாகப் பேசும் காஜல், நடிப்புக்குப் பிறகு என்ன செய்வது என சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார். ஏதேனும் வியாபாரத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதாம். அதற்கான ஏற்பாடுகள், முதலீடு குறித்து ஆலோசித்து வருகிறார். “நடிகைகள் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபடவேண்டும். அவர்கள் தகுதிக்கு ஏற்ப அதைத் தேர்வு செய்துகொள்ளலாம். “நான் சினிமாவை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டால் மீண்டும் நடிக்க வர மாட்டேன். இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவில் நீடிப்பேன்.

மஞ்சிமா தினமும் செய்யும் முதல் வேலை

மஞ்சிமா மோகன்.

காலையில் எழுந்த உடன் தனது கைபேசி எங்கே என்று தேடுவதுதான் மஞ்சிமா மோகனின் முதல் வேலையாக இருக்குமாம். ரசிகர்களுடன் இணையம் வழி உரையாடுவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் இந்த இளம் நாயகி. “சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை சொல்வதற்கும், சமூகப் பிரச்சினைகளை விமர்சனம் செய்து ‘மீம்ஸ்’ போடுவதற்கும் தனித் திறமை வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள் நல்ல அறிவாளிகள், கற்பனைத் திறன் அதிகம் உள்ளவர்கள் என்று கருதுகிறேன். “ஒவ்வொரு முறையும் ரசிகர்களுடன் இணையம் வழி உரையாடும் போது, பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்கிறார்கள்.

‘மன்னர் வகையறா’

விமல், கயல் ஆனந்தி

நீண்ட இடைவேளைக்குப் பிறகு விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ ஜனவரியில் வெளியாக உள்ளது. இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கி உள்ளார். தனது சொந்த நிறுவனமான ஏ3வி சினிமாஸ் மூலம் விமல் தயாரித்துள்ள படம் இது. அவரது ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக், சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம். தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Pages