You are here

திரைச்செய்தி

ராதிகா ஆப்தே: நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரிப்பு

சலசலப்பை ஏற்படுத்திய நாயகி தென்னிந்தியத் திரையுலம் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ராதிகா ஆப்தே. இது திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் ரீதியில் நிறைய தொல்லைகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளார் ராதிகா. குறிப்பாக புதுப்பட வாய்ப்புகள் தேவையெனில் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நடிகைகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதே அவர் முன்வைத்துள்ள மிகப் பெரிய குற்றச்சாட்டு. தமிழில் ‘டோனி’, ‘வெற்றிச்செல்வன்’, ‘கபாலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்

‘பொட்டு’ படத்தின் ஒரு காட்சியில் பரத், சிருஷ்டி டாங்கே.

‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘செளகார்பேட்டை’ படங்களுக்குப் பிறகு வடிவுடையான் இயக்கும் படம் ‘பொட்டு’. படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. இதுவும் பேய்க்கதையா என்று கேட்டால், மர்மப் புன்னகையை முகத்தில் தவழ விடுகிறார் வடிவுடையான். “செளகார்பேட்டை’ படத்தை மனதில் வைத்து இப்படிக் கேட்கி றார்கள். இதை பத்தோடு பதி னொன்றாக வரும் பேய் படமாக ஓரம் கட்டமுடியாது. ‘தம்பி வெட் டோத்தி சுந்தரம்’ படத்தில் எப்படி ஒரு கதை இருந்ததோ அதுபோல் இதில் ஒரு அழுத்தமான கதை யோடு வந்திருக்கிறேன். இயக்கு நராக எனக்குத் தனி அடை யாளத்தை இந்தப் படம் பெற்றுத் தரும்,” என்று பதில் வருகிறது.

இந்திய விவசாயத்தை அழிக்க சதி: குமுறும் இளம் இயக்குநர்

‘குத்தூசி’ படத்தின் ஒரு காட்சியில் திலீபன், யோகிபாபு.

“இந்தியா ஒரு விவசாய நாடு. அதன் முதுகெலும்பே விவசாயம்தான் என்பது உலக நாடுகள் அத்தனைக்கும் தெரி யும். ஆனால் இந்திய விவசாயத்தின் இன்றைய நிலை என்ன என்பதை அலசியுள்ளேன்,” என்கிறார் குத்தூசி படத்தின் இயக்குநர் ‌ஷிவசக்தி. இந்திய விவசாயத்தை அழிக்க உலகளவில் சதி நடப்பதாக இவர் குற்றம்சாட்டுகிறார். இப்படத்தில் ஏ.ஆர்.முருகதாசின் தம்பி திலீபன், புதுமுகம் அமலா ஜோடி சேர்ந்துள்ளனர். சீனுராமசாமியின் பட்டறையில் இருந்து வந்திருப்பவர் ‌ சிவசக்தி.

நவம்பர் 14ல் சந்தானம் படப் பாடல்கள் வெளியீடு

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. இதன் பாடல் வெளியீட்டு விழாவை நவம்பர் 14ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்துக்குச் சிம்பு இசையமைத்துள் ளார் என்பதுதான் விசேஷம். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சிம்பு இசையில் அனிருத் பாடிய ‘கலக்கு மச்சான்’ என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந் தர், உஷா ராஜேந்தர் உள்ளிட்டோரும் இப்படத்துக்காகப் பாடியுள்ளனர்.

‘ஸ்கெட்ச்’ முன்னோட்டம்

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஸ்கெட்ச்’. இதில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார். ‘வாலு’ விஜய் சந்தர் இயக்குகிறார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் தீபாவளி விருந்தாக வரும் 18ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் ‘மெர்சல்’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் இந்த முன்னோட்டம் திரையிடப்படுமாம். படத்தின் பாடல்களை நவம்பரில் வெளியிட இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் ‘ஸ்கெட்ச்’ வெளியாகுமாம்.

ரசிகர்களுக்காக கலங்கிய கதாநாயகி

ரகுல் பிரீத் சிங்கின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு அண்மையில் திருப்பதியில் நடைபெற்ற சம்பவமே நல்ல சாட்சி என்கிறார்கள் திரையுலகப் புள்ளிகள். திருப்பதியில் ஜவுளிக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் ரகுல். இந்நிகழ்வில் வேறு சில பிரமுகர்களும் பங்கேற்றனர். எனினும் ரகுல் பிரீத் தான் சிறப்பு விருந்தினர் என விளம்பரப் படுத்தப்பட்டது. இதையடுத்து அவரைக் காணவும், கைபேசியில் படம்பிடிக்கவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கூடுதல் போலிசார், ரசிகர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனராம்.

முறிந்து போன நட்சத்திர காதல்

நடிகர் ஜெய்யும் நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக செய்தி வெளியிடாத ஊடகமே இல்லை. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. அவ்வப்போது தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் தாங்கள் காதலிப்பதை இருவரும் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. ஜெய், அஞ்சலி காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் இப்போது அறவே பேசிக் கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. காதல் முறிவுக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. ஆனால் இருவரும் பிரிந்துவிட்டது என்னவோ உண்மை என தமிழக சினிமா இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

மோதல்: சந்தானம் மீது போலிசில் புகார்

சென்னை: பண விவகாரம் கார ணமாக ஏற்பட்ட மோதலை அடுத்து பிரபல திரைப்பட நடிகர் சந்தானம் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து அவர் தலைமறைவாகி விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நகைச்சுவை நடிகராக அறிமுக மாகி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். இவர் தனது நண்பர் சண்முக சுந்தரத்துடன் இணைந்து சென்னை அருகே உள்ள குன்றத் தூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் கட்ட திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பெருந்தொகையை சண்முகசுந்தரத்திடம் கொடுத்த தாகவும் சில மாதங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிகிறது.

புது முயற்சிகள் பிடிக்கும் - நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

மொழி எப்போதுமே தமக்கு ஒரு தடையாக இருந்ததில்லை என இளம் நாயகி நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். புது முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகம் எப்போதுமே தம்மிடம் இருந்து வருவதாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நாயகிகளின் பட்டியலில் நிக்கிக்கும் இடம் கிடைத்திருக்கிறது. வெறும் கவர்ச்சிப் பொம்மையாக மட்டுமே வந்து போகாமல், நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான ‘ஹரஹர மஹாதேவகி’ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

முத்தக் காட்சியால் சர்ச்சை; பெண் இயக்குநரின் பதிலடி

பியா பாஜ்பாய், டோவினோ தாமஸ்

‘அபியும் அனுவும்’ படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ள படம். ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர். பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவின் மகளுமான விஜயலட்சுமி இயக்குநராகவும் பின்னர் உருவெடுத்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் ‘அபியும் அனுவும்’. இதில் பியா நாயகியாகவும் மலையாள நடிகர் டோவினோ நாயகனாகவும் நடித்துள்ளனர்.

Pages