You are here

விளையாட்டு

ஆசியக் கிண்ணம்: வாய்ப்பை இழந்தது

சிங்கப்பூர் குழு ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை சிங்கப்பூர் இழந்தது. தேசிய விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் பஹ்ரேனிடம் 3=0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டதன் மூலம் சிங்கப்பூரின் ஆசியக் கிண்ணக் கனவு கலைந்தது. தகுதிச் சுற்றில் ‘இ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டம் 0=0 எனச் சமநிலையில் முடிந்தது குறிப்பிடத் தக்கது. துர்க்மெனிஸ்தான், தைவான் ஆகியவை இந்தப் பிரிவில் உள்ள மற்ற இரு அணிகள்.

அவமானத்துடன் வெளியேறிய இத்தாலி

மிலான்: நான்கு முறை கிண்ணம் வென்றிருக்கும் இத்தாலி அணி ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் விளை யாடத் தகுதி பெறாமல் பெரும் தலைக்குனிவைச் சந்தித்துள்ளது. ‘பிளே ஆஃப்’ சுற்றின் முதல் ஆட்டத்தில் சுவீடன் 1=0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற் றது.

பிரபல பாக். கிரிக்கெட் வீரர் ஓய்வு

பிரபல பாக். கிரிக்கெட் வீரர் ஓய்வு கராச்சி: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பந்தடிப்பாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், 40, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் உலகத் தரவரிசையில் உச்சத்தை எட்டிய அஜ்மல் 2006ஆம் ஆண்டு அனைத்துலக அரங்கில் அடியெடுத்து வைத்தார். அப்போது முதலே விக்கெட் வேட்டையில் ஈடுபட்ட அஜ்மல் பந்தை எறிவதாகப் புகார் எழுந்தது.

வாய்ப்பை தவறவிட்ட வடஅயர்லாந்து

பெல்ஃவாஸ்ட்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற் கும் பொன்னான வாய்ப்பை வட அயர்லாந்து தவறவிட்டுள்ளது. நேற்று அதிகாலை தலைநகர் பெல்ஃவாஸ்ட்டில் நடைபெற்ற ‘பிளே ஆஃப்’ சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து டனான போட்டியில் அது 0=0 என சமநிலை காண, முதல் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1=0 என வென்றதால் இறுதியில் சுவிட்சர்லாந்து அணி தகுதி பெற்றுள்ளது. ஆட்டம் முடிய வினாடிகளே இருந்தபோது வடஅயர்லாந்தின் ஜானி எவன்ஸ் தலையால் முட்டி அனுப்பிய பந்து சுவிட்சர்லாந்தின் கோல்காப்பாளரைக் கடந்துச் சென்றது.

செபாஸ்டியன் வெட்டல் வெற்றி

எஃப்1 கார் பந்தய வெற்றியாளர் விருதுப் போட்டிகளில் தோல்வி கண்ட செபாஸ்டியன் வெட்டல், நேற்று முன்தினம் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயப் போட்டியில் ஃபெராரி காரை ஓட்டி வெற்றி வாகை சூடியுள்ளார். எஃப்1 விருதை நான்கு முறை தட்டிச்சென்ற வெட்டல், போட்டி தொடங்கியதிலிருந்து முன்னிலை பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இவருக்கு அடுத்த இரண் டாவது நிலையில் வந்த மெர்சிடிஸ் காரை ஓட்டிய வால்ட்டேரி போட்டாசைவிட 2.8 வினாடிகளில் முந்தி வந்து போட்டியை வெட்டல் நிறைவு செய்தார்.

வேகம் குன்றாத முன்னாள் லிவர்பூல் வீரர்கள்

சிங்கப்பூர்: ‘பேட்டல் ஆஃப் த மாஸ்டர்ஸ்’ எனப்படும் முன்னாள் சிங்கப்பூர் தேசிய காற்பந்து வீரர்கள், லிவர்பூல், ஆர்சனல் குழுக்களைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற மூன்று நாற்பது நிமிடப் போட்டிகளில், லிவர்பூல் வீரர்கள் அணி சிங்கப்பூர் லயன்ஸ் அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. முன்னாள் ஆர்சனல் வீரர்களு டனான மற்றோர் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-2 என சமநிலை கண்டனர். இது ஒருபுறமிருக்க, இவர் களுக்குக் காற்பந்தின் மீதான வேகம் இன்னும் அதே அளவு இருக்கிறதா என்ற சந்தேகம் ரசி கர்களுக்கு இருக்குமாயின் அது ஆர்சனலுடனான லிவர்பூல் ஆட் டத்தில் தீர்ந்திருக்கும்.

குதூகலத்தில் மொரோக்கோ

அபிஜான்: ஐவரி கோஸ்ட்டின் அபிஜான் நகரில் நேற்று நடந்த உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச்சுற்று ஆட்டமொன்றில் ஐவரி கோஸ்ட்டை 2=0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க மொரோக்கோ தகுதிபெற்றுள்ளது. இதன்மூலம், 1998ஆம் ஆண் டுக்குப் பிறகு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் மீண்டும் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள் ளது மொரோக்கோ. அத்துடன், மொரோக்கோவை எதிர்த்து விளையாடிய ஐவரி கோஸ்ட் தொடர்ந்து நான்கு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி

ஜோஹனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணியை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கு செனகல் தகுதி பெற்றள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கெனவே எகிப்து உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பிடித்துள்ளது. அந்த வரிசையில் செனகலும் நேற்று முன்தினம் உலகக் கிண்ணப் போட்டியில் தனது இடத்தை உறுதிச் செய்தது.

இங்கிலாந்து-ஜெர்மனி சமநிலை

லண்டன்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து நேற்று முன்தினம் நட்புமுறை ஆட்டத்தில் களமிறங்கியது. இந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்தில் ஐந்து இளம் வீரர்கள் முதல்முறையாக அனைத்துலக ஆட்டத்தில் களமிறங்கினர். இங்கிலாந்து வீரர்களின் அனுபவமின்மையைப் பயன்படுத்தி ஜெர்மனி பலமுறை மிரட்டல் விடுத்தது. ஆனால் முதல்முறையாக அனைத்துலக ஆட்டத்தில் களமிறங்கிய இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டன் பிக்ஃபர்ட் ஜெர்மனியின் கோல் முயற்சிகளை முறியடித்தார்.

தோல்வியிலும் நம்பிக்கை இழக்கா சுந்தரம்

தேசிய விளையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் லெபனானிடம் சிங்கப்பூர் தோல்வி அடைந்தும் நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார் பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தி. லெபனானிடம் சிங்கப்பூர் 1-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், வலிமைமிக்க லெபனான் மேலும் பல கோல்கள் போடாமல் சிங்கப்பூரின் தற்காப்பு பார்த்துக்கொண்டது.

Pages