You are here

விளையாட்டு

புத்துணர்வு பெற்ற ரியால் மட்ரிட்

படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியும் ரியால் மட்ரிட் அணியும் மோதிய போட்டியில் ரியால் 3=1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. ஆட்டம் தொடங்கி 33வது நிமிடத்தில் முதல் கோலை பிஎஸ்ஜி அணியின் ஏட்ரியன் ராபியோ புகுத்திய நிலையில் முதல்பாதி முடியும் முன்னரே பெனால்டி மூலம் கோல் எண்ணிக்கையை சம நிலைக்குக் கொண்டு வந்தார் கிறிஸ்டியானொ ரொனால்டோ. ரியால் மட்ரிட் அணிக்கு சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ரொனால்டோ புகுத்திய 100வது கோல் அது.

இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம்

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்கா விற்கு எதிரான ஆறாவது கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சுரியனில் நடைபெறு கிறது. இதுவரை விளையாடிய இந்தத் தொடரின் ஐந்து ஒருநாள் போட்டி களில் இந்தியா நான்கில் வெற்றி கண்டு தொடரை வென்றுள்ளது. இந்நிலையில், இன்று இறுதி போட்டியில் களமிறங்கும் இந்திய அணி, வெற்றியை சுவைக்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்திய வீரர் களே அடித்துள்ளனர். சொந்த மண்ணில் விளையாடிய போதும் தோல்வி அடைந்துள்ள தென்னாப் பிரிக்க அணி நெருக்கடியிலுள்ளது.

இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற ஆர்வம்

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்கா விற்கு எதிரான ஆறாவது கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று செஞ்சுரியனில் நடைபெறு கிறது. இதுவரை விளையாடிய இந்தத் தொடரின் ஐந்து ஒருநாள் போட்டி களில் இந்தியா நான்கில் வெற்றி கண்டு தொடரை வென்றுள்ளது. இந்நிலையில், இன்று இறுதி போட்டியில் களமிறங்கும் இந்திய அணி, வெற்றியை சுவைக்க மிகுந்த ஆர்வத்தில் உள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்திய வீரர் களே அடித்துள்ளனர். சொந்த மண்ணில் விளையாடிய போதும் தோல்வி அடைந்துள்ள தென்னாப் பிரிக்க அணி நெருக்கடியிலுள்ளது.

அநாகரிக நடத்தைக்காக ரபாடாவிற்கு ஐசிசி அபராதம்

போர்ட் எலிசபெத்: தென்னாப்பி ரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டாளர் ‌ஷிகர் தவானை ஆட்டமிழக்கச்செய்த தென்னாப் பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா அநாகரிகமான முறையில் தவானை நோக்கிக் கை அசைத்து வெளியேறும்படி கூறியதற்காக அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

வெஸ்ட் ப்ரோமை தோற்கடித்து 4வது இடத்தைப் பிடித்தது செல்சி

லண்டன்: லண்ட ன் ஸ்டாம் ஃபோர் டில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ப்ரோம் விச் அணியுடன் போராடி செல்சி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் எடென் ஹாஸர்ட், விக்டர் மோசஸ் ஆகிய வீரர்கள் ஆளுக்கொரு கோல் போட்டு செல்சியின் வெற் றிக்கு வழிவகுத்தனர். எடென் ஹாஸர்ட் இரண்டு கோல்களையும் மோசஸ் ஒரு கோலையும் போட் டனர். சாம்பியன்ஸ் ஆட்டங்களில் இரண்டு தோல்விகளைச் சந்தித்த செல்சி அணிக்குக் கிடைத்த இந்த வெற்றி அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் அன்டோனியோ கோன்டேவுக்கு பெரும் மகிழ்ச்சி- யைத் தந்துள்ளது.

கத்தார்: மரியா ஷரபோவா தோல்வி

கோப்புப்படம்: ஏஎஃப்பி

தோகா: கத்தார் பொது விருது டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ரோமானியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் ரஷ்யாவின் மரியா ஷரபோவா தோல்வி யடைந்து வெளியேறினார். கத்தார் பொதுவிருது டென்- னிஸ் தொடர் தோகாவில் நடை- பெற்று வருகிறது. மகளிர் ஒற்றை- யர் போட்டியின் முதல் சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும், ரோமானியாவின் மோனிகா நிகு- லெஸ்குவும் பொருதினர். ஆட்டத்தின் தொடக்கத் தில் இருந்தே இருந்தே ஷரபோவா சிறப்பாக விளையாடினார்.

ஸ்மித்துக்கு ‘ஆலன் பார்டர்’ விருது

மெல்பர்ன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ‘ஆலன் பார்டர்’ என்னும் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விழா மெல்பர்ன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தலைசிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதைப் பெற்றார்.

மண்ணைக் கவ்விய யுனைடெட்

படம்: ஏஎஃப்பி

நியூகாசலை அதன் சொந்த மைதானத்தில் சந்தித்த மான் செஸ்டர் யுனைடெட் 0=1 என அதனிடம் தோல்வியைத் தழு வியது. பிரிமியர் லீக் காற்பந்து தரவரிசைப் பட்டியலில் இரண்டா மிடத்தில் இருக்கும் யுனைடெட் முதலிடத்தில் இருக்கும் மான் செஸ்டர் சிட்டியிடமிருந்து 16 புள்ளிகள் பின்தங்கி உள்ளது. நியூகாசல் வீரர் ரிட்சி ஆட்டத் தின் 65வது நிமிடத்தில் போட்ட ஒரே கோலுடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

வின்சென்ட் சுப்ரமணியத்திற்கு புதிய பொறுப்பு

தேசிய காற்பந்துக் குழுவுக்கு முன்னாள் பயிற்றுவிப்பாளராக இருந்த வின்சென்ட் சுப்ரமணியத் திற்கு இனி ஒரு புதிய பொறுப்பு. சிங்கப்பூர் காற்பந்து சங்கம், காற்பந்து பயிற்றுவிப்பாளர் களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பை அவருக்குத் தந்துள்ளது. தேசிய இளையர் பிரிவு, எஸ்=லீக் இளையர் பிரிவு, பள்ளிக் காற்பந்து பயிலகம் மற்றும் காற்பந்து மேம்பாட்டு நிலைய பயிற்றுவிப்பாளர்களைக் கண்காணிக்கும் பணிகளிலும் அவர் ஈடுபடுவார். லீக்கில் இடம்பெறும் பயிற்று விப்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் அதே வேளையில், சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நடத்தும் பயிற்றுவிப்பாளர் கற்றல் பயணத்திலும் அவர் பங்குபெறுவார் என்று கூறப் படுகிறது.

4 கோல்களைப் புகுத்திய அகுவேரோ

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டியும் லெஸ்டர் சிட்டி யும் மோதிய ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ் டர் சிட்டி அபார வெற்றிபெற்றது. ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் நான்கு கோல்களையும் புகுத்தி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார் சிட்டியின் செர்ஜியொ அகுவேரோ. பிரிமியர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வேட்கையில் சிட்டி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில் இந்த ஆட்டத்திற்குப் பிறகு 16 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. “இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு அகுவேரோ காரணம்.

Pages