You are here

விளையாட்டு

மேன்யூ, லிவர்பூல் ரசிகர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள மொரின்யோ வலியுறுத்து

லிவர்பூல்: ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் நாளை மறுநாள் அதிகாலை மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் குழுக்களுக்கு இடையே நடக்கவிருக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தின்போது இரு குழுக்களின் ரசிகர்களும் ஒருவர் மற்ற வரை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்று மேன்யூ நிர்வாகி ஜோசே மொரின்யோ வலியுறுத்தியுள்ளார். கடந்த யூரோப்பா லீக் காற் பந்துத் தொடரில், காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் இவ்விரு குழுக்களும் மோதின. அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்த ரசிகர்கள் மோசமாக நடந்துகொண்டதால் இரு குழுக் களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டது.

594 ஓட்டங்கள் குவித்த இந்திய இணை

மும்பை: இன்னும் முப்பது ஓட்டங்கள் எடுத்திருந்தால் இலங்கை முன்னாள் வீரர்கள் மகேலா ஜெயவர்தனே=குமார் சங்ககாரா இணையின் உலக சாதனையை எட்டியிருக்க முடியும். அதற்கேதுவாக இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தபோதும் அச்சாதனை குறித்து அறிந்து இருக்காததால் நல்ல வாய்ப்பை போய்விட்டதே என புலம்பித் தள்ளினர் மகாராஷ்டிர மாநில கிரிக்கெட் வீரர்களான சுவப்னில் குகலேவும் அங்கீத் பாவ்னேவும். டெல்லி அணிக்கு எதிராக மும்பையில் நடந்துவரும் போட்டியில் இவ்விருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 594 ஓட்டங்களைச் சேர்த்ததே ரஞ்சி கிண்ண வரலாற்றில் எந்த விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள்.

அரையிறுதியில் வீழ்ந்தார் ஜோகோவிச்

ஷங்ஹாய்: உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சீனாவில் நடந்து வரும் ஷங்ஹாய் மாஸ்டர்ஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஸ்பெயின் நாட்டின் ரொபர்ட்டோ பாடிஸ்ட்டா அகட் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் 12 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான ஜோகோவிச்சைத் தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் பந்தைத் திருப்பி அனுப்பும்போது 29 தவறுகளைச் செய்தார் ஜோகோவிச். இதற்குமுன் ஐந்து முறை ஜோகோவிச்சிடம் தோற்றிருந்தபோதும் துணிச்சலுடன் போராடி அவரை வென்ற அகட், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரிட்டனின் ஆண்டி மரே அல்லது பிரான்சின் கில்லெஸ் சிமோனை எதிர்த்தாடுவார்.

வெல்லும் முனைப்புடன் இந்தியா

படம்: ராய்ட்டர்ஸ்

தர்மசாலா: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து நாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை தர்மசாலாவில் தொடங்குகிறது. அண்மையில் இவ்விரு அணி களுக்கும் இடையில் நடந்து முடிந்த மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அனைத்து ஆட்டங் களிலும் வெற்றி பெற்றது. மூன்று ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி நியூசிலாந்து ‘ஒயிட்வாஷ்’ ஆனது. டெஸ்ட் தொடரை முழுமை யாகக் கைப்பற்றிய இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் 115 புள்ளி களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இந்நிலையில், ஒருநாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வாகை சூடினால் தரவரிசையில் முன்னேற வாய்ப்பு உள்ளது.

போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்த நோவாக் ஜோகோவிச்

ஷாங்காய்: உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நோவாக் ஜோகோவிச் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றைக் கைப்பற்றி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஆனால் காலிறுதிச் சுற்றை வெல்ல அவர் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. தரவரிசையில் 110வது இடத்தில் உள்ள ஜெர்மன் வீரர் மிஷ்கா சுவேரேவுடன் மோதிய ஜோகோவிச் யாரும் எதிர்பாராத வகையில் 3=6 எனும் புள்ளிக் கணக்கில் முதல் செட்டை இழந்தார்.

தற்காப்புகளைத் தகர்க்க லெஸ்டர் நிர்வாகி ரெனியேரி புதிய வியூகம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் குழுக்களின் தற்காப்பு அரண்களை இடித்துடைக்க லெஸ்டர் சிட்டியின் நிர்வாகியான கிளோடியோ ரெனியேரி புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார். ஜேமி வார்டி, இஸ்லாம் ஸ்லிமானி, ரியாத் மாரேஸ் ஆகிய தாக்குதல் ஆட்டக்காரர்களுக்கு அவர் சிறப்புப் பயிற்சி நடத்தி வருகிறார். இதன் மூலம் இந்த மூவரும் இணைந்து எதிரணிகளின் தற்காப்புத் திரைகளைக் கிழித்தெறிந்து கோல் போடுவர் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடப்பு வெற்றியாளரான லெஸ்டர் சிட்டி பட்டியலின் ஏழாவது இடத்தில் இருக்கும் செல்சியை இன்று சந்திக்கிறது.

ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுத்த தென்னாப்பிரிக்கா

 படம்: ஏஎஃப்பி

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி அமோக வெற்றி பெற்று உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி கேப்டவுனில் பகல்=இரவாக நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது. அந்த அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 327 ஓட்டங்களைக் குவித்தது. ரூசோ அபாரமாக விளையாடி தனது நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 118 பந்துகளில் 122 ஓட்டங்களும் டுமினி 75 பந்துளில் 73 ஓட்டங்களும் மில்லர் 29 பந்துகளில் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

தொடர்ந்து வெல்லும் ஈரான்

படம்: இணையம்

அகமதாபாத்: இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கபடிப் போட்டியில் ஈரான் அதன் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ‘பி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கென்யா அணியுடன் ஈரான் மோதியது. இதில் ஈரான் 33-28 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஈரானின் மின்னல் வேக ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து ஆடப் பெரிதும் முயற்சி செய்தனர் கென்ய வீரர்கள்.

இங்கிலாந்தைக் காப்பாற்றிய ஜோ ஹார்ட்

இங்கிலாந்து கோல் காப்பாளர் ஜோ ஹார்ட்.  படம்: ராய்ட்டர்ஸ்

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று காற்­பந்து ஆட்டம் ஒன்றில் ஸ்லோ­வே­னியா=இங்­கி­லாந்து அணி­கள் மோதின-. இந்த ஆட்டத்தில் இரு அணி­களுமே கோல் எதுவும் போடா­த­ நிலையில் ஆட்டம் சம­நிலை­யில் முடிந்தது. இரு அணி­களுமே முற்பாதி ஆட்­டத்தை­விட பிற்பாதி ஆட்­டத்­தில்­தான் கோல் போடு­வதற்­கான முயற்­சி­களை அதிகம் மேற்­கொண் ட­ன. இருப்­பி­னும் ஆட்டம் முழு­வ­தும் இங்­கி­லாந்து மூன்று முறை மட்டுமே கோல் போடும் முயற்­சியை மேற்­கொண்டது. இதற்­கிடையே, இங்­கி­லாந்து அணியின் கோல் காப்­பா­ளர் ஜோ ஹார்ட் ஸ்லோ­வே­னி­யா­வின் கோல் போடும் இரண்டு முயற்­சி­களைத் தடுத்­தார்.

கோஹ்லி: திறனை நம்புகிறோம்

படம்: ஏஎஃப்பி

­­­இந்­திய கிரிக்­கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்­ப­ஜன் சிங் டுவீட்­டிற்கு கோஹ்லி ஆவே­ச­மாக பதில் அளித்­துள்­ளார். இந்தியா-நியூ­சி­லாந்து அணி கள் மோதிய டெஸ்ட் தொடர் முழு­வ­துமே இந்திய வீரர் அஸ்­வி­னின் செயல்­பாடு வெற்­றிக்­குப் பெரிதும் உதவி­யாக இருந்தது. இது குறித்து ஹர்­ப­ஜன் சிங் பதிவு செய்த டுவீட்­டில், “கடந்த 4 ஆண்­டு­க­ளா­கவே இந்திய ஆடு­க­ளங்கள் சுழற்­பந்து வீச்­சுக்கு ஏற்ற வகையில் உள்ளது. “நாங்கள் இருந்த தருணங் களில் இது­போன்ற ஆடு­க­ளங் கள் இருந்­தி­ருந்தால் நானும் கும்ப­ளே­வும் அதிக விக்­கெட்­டு­களைக் கைப்­பற்றி இருப்­போம்,” எனக் கூறி­யி­ருந்தார்.

Pages