You are here

விளையாட்டு

நீச்சல்: கைல் சாமர்ஸ் எதிர்பாராத வெற்றி

 கைல் சாமர்ஸ் தமது வெற்றியைக் கொண்டாடுகிறார். படம்: ஏஎஃப்பி

ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் பதின்ம வயது கைல் சாமர்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் வாகை சூடியுள்ளார். இந்த 18 வயது வீரர் இந்த தூரத்தை 47.58 விநாடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் பெல்ஜியத்தின் பியேட்டர் டிம்மர்ஸ் 47.80 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

அது பயிற்சி நீச்சல்தான்: ஸ்கூலிங்

ஸ்கூலிங்

ரியோ டி ஜெனிரோ: 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தோல்வியடைந்த ஸ்கூலிங், தமது முக்கிய போட்டியான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலுக்கான பயிற்சியாகவே அதை எடுத்துக் கொண்ட தாகக் கூறியுள்ளார். “எனக்கு இது ஒரு நல்ல தொடக்கம் என்றே கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.

அர்ஜெண்டினாவை வென்ற இந்திய ஹாக்கி அணி

அர்ஜெண்டினாவின் கோல் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் இந்திய கோல்காப்பாளர் ஸ்ரீஜேஷ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

ஆண்களுக்கான ஹாக்கி போட்டி யில் இந்திய அணி 2-1 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டி னாவைத் தோற்கடித்துள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு அர்ஜெண்டினாவை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வென்றி ருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் அதன் முதல் ஆட்டத்தில் அயர்லாந்தைச் சந்தித்த இந்தியா 3=2 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

21வது தங்கம் வென்ற ஃபெல்ப்ஸ்

21வது தங்கம் வென்ற ஃபெல்ப்ஸ்

அமெரிக்காவின் நட்சத்திர நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் (படம்) தமது 21வது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 4x200 மீட்டர் ஏதேச்சை பாணி அஞ்சல் போட்டியில் அமெரிக்கக் குழு வெற்றி பெற்றது. இக்குழுவில் ஃபெல்ப்ஸ் இடம் பெற்றிருந்தார். இந்தப் போட்டியை அமெரிக்கா வெல்வது இதுவே 17வது முறையாகும். போட்டியை முடிக்க அமெ ரிக்கக் குழு ஏழு நிமிடங்கள் 0.66 வினாடிகள் எடுத்துக் கொண்டது. இரண்டாம் நிலையில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்ற பிரிட்டன் ஏழு நிமிடங்கள் 3.13 வினாடிகளில் போட்டியை முடித் தது. ஜப்பானிய குழு வெண் கலத்தைத் தட்டிச் சென்றது.

மேன்யூவில் பொக்பா

மான்செஸ்டர் யுனைடெட்டுடன் இணைந்துள்ள பொக்பா. படம்: இன்ஸ்டகிராம்

மான்செஸ்டர்: அண்மைக்காலமாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு பிரஞ்சு காற்பந்து நட்சத்திரமான பால் பொக்பா இப்பொழுது வருவார், அப்பொழுது வருவார் என்ற பேச்சு பரவலாக எழுந்ததை அடுத்து அவரது வரவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக ஆனது. தற்பொழுது ஒருவழியாக பால் பொக்பா நேற்று யுனைடெட்டுக்கு உலகத்திலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட விளை யாட்டாளர் என்ற முத்திரையுடன் வந்து சேர்ந்தார். இவருக்கு கொடுக்கப்பட்ட விலை தெரிவிக் கப்படவில்லை. ஆனால், அது 89 மில்லியன் பவுண்டுகளுக்கு குறை வில்லை என்று நம்பப்படுகிறது.

2வது ஆக விலை உயர்ந்த தற்காப்பு ஆட்டக்காரர்

மான்செஸ்டர்: எவர்ட்டனின் தற்காப்பு ஆட்டக்காரரான ஜான் ஸ்டோன்சை மான்செஸ்டர் சிட்டி 47.5 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே இரண்டாவது ஆக விலை உயர்ந்த தற்காப்பு ஆட்டக்காரராகிறார் ஸ்டோன்ஸ். சிட்டிக்காக ஆறு ஆண்டுகளுக்கு விளையாட ஸ்டோன்ஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.

பிரேசில் தடுமாற்றம்

கோல் போட முடியாத விரக்தியில் பிரேசிலின் ஜீசஸ் கேப்ரியல் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

ஒலிம்பிக் போட்டிக்கான காற் பந்துப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறும் அபாயத் தை பிரேசில் நெருங்கியுள்ளது. ஈராக்குக்கு எதிரான ஆட்டத் தில் பிரேசில் கோல் ஏதும் போடாமல் சமநிலை கண்ட விதம் அதன் ரசிகர்களைக் கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்டத்திலும் பிரேசில் தென்னாப் பிரிக்காவுடன் கோல் ஏதுமின்றி சமநிலை கண்டது.

கொசோவோவின் முதல் பதக்கம்

 கொசோவோவின் ஜூடோ வீராங்கனை மஜ்லிண்டா கெல்மெண்டி

பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 52 கிலோ பிரிவில் தங்கம் வென்ற மஜ்லிண்டா கெல்மெண்டி (படம்), கொசோவோவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நபர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றுள்ளார். 25 வயது கெல்மெண்டி இறுதிச் சுற்றில் இத்தாலியின் ஒடேட்டே குயூஃபிரிடாவைத் தோற்கடித்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

கொசோவோ ஒலிம்பிக் மன்றம் 1992ஆம் ஆண்டில் நிறுவப்பட்டபோதிலும் அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அதை 2014ஆம் ஆண்டில்தான் அங்கீகரித்தது.

பாகிஸ்தான் படுதோல்வி

பர்மிங்ஹம்: இங்கிலாந்து அணிக் கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக் கெட் அணி 141 ஓட்ட வித்தி யாசத்தில் தோற்றது. இதனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. முதல் இன்னிங்சில் இங்கி லாந்து 297 ஓட்டங்களும் பாகிஸ் தான் 400 ஓட்டங்களும் எடுத் தன. 103 ஓட்டங்கள் பின்னிலை யில் இருந்தபோதும் இரண்டாவது இன்னிங்சில் வெளுத்து வாங்கிய இங்கிலாந்து, ஆறு விக்கெட் இழப்பிற்கு 445 ஓட்டங்களை எடுத்தநிலையில் இன்னிங்சை முடித்துக்கொண்டது.

கரீபியன் பிரிமியர் லீக் டி20: கெய்ல் அணிக்குப் பட்டம்

செயின்ட் கிட்ஸ்: இந்தியாவின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரைப் போன்று வெஸ்ட் இண்டீசும் கடந்த நான்கு ஆண்டுகளாக கரீபியன் பிரிமியர் லீக் தொடரை நடத்தி வருகிறது. இவ்வாண்டுக்கான தொடரில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்ல வாஸ் அணி பட்டம் வென்றுள் ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதலில் பந்தடித்த கயானா அணி 16.1 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து பந்தடித்த ஜமைக்கா அணி 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.

Pages