You are here

விளையாட்டு

ஏஎஃப்சி கிண்ண காலிறுதியில் தெம்பனிஸ்

வெற்றிக் கோலைப் போட்டு கொண்டாடும் தெம்பனிஸ் வீரர்கள். படம்: இணையம்

கவுஹாத்தி: ஆசியக் காற்பந்துச் சம்மேளனப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூரின் தெம்பனிஸ் ரோவர்ஸ் தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்தியா வின் அசாம் மாநிலத்தில் நடை பெற்ற 16வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மோகன் பகான் குழுவைத் தெம்பனிஸ் குழு எதிர்கொண்டது. காயம் காரணமாக மோகன் பகான் குழுவுக்குப் பல நட்சத்திர வீரர்களைக் களமிறக்க முடியா நிலை ஏற்பட்டபோதிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்ற முனைப்புடன் அது விளை யாடியது.

லிவர்பூல், யுனைடெட் குழுக்களுக்கு அபராதம்

லிவர்பூல், யுனைடெட் குழுக்களுக்கு அபராதம்

லண்டன்: யூரோப்பா கிண்ணப் போட்டியின்போது லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய குழுக்களின் ரசிகர்கள் விதி முறைக்குப் புறம்பான முழக்கங் களையிடுதல் போன்ற பல்வேறு விதிமீறல்களைப் புரிந்ததால் அவ்விரண்டு குழுக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஜாம்பவான் களான இவ்விரு குழுக்களுக்கும் தலா 40,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. யூரோப்பா ஆட்டங்களின்போது லிவர்பூலின் ரசிகர்கள் வாண வேடிக்கை நிகழ்த்தி பொருட்களை வீசினர். இந்தக் குற்றத்தின் பேரில் அக்குழுவுக்குக் கூடுதலாக 17,000 யூரோ அபராதம் விதிக்கப் பட்டது.

லயன்சின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக சுந்தரம்

லயன்சின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக சுந்தரம்

சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவின் இடைக்காலத் தலைமைப் பயிற்றுவிப்பாளராக வி. சுந்தரமூர்த்தியை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நாளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு ஜாலான் புசார் விளையாட்டரங்கில் செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிவிப்பு செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. ஓராண்டு ஒப்பந்தத்துக்கு சுந்தரம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை எதிர்கொள்கிறது பெங்களூரூ

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதை தனது அணியினருடன் கொண்டாடும் பெங்களுரூ அணித் தலைவர் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

மும்பை: கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியதால், பட்டி யலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பெங்களூரூ அணி இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டி யில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி= பெங்களூரூ அணிகள் மோதின. பூவா தலையா வென்ற பெங்களூரூ அணித்தலைவர் விராத் கோஹ்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் டி காக், பண்ட் ஆகியோர் தொடக்கவீரர்களாக களம் இறங்கினார்கள். பண்ட் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் அரவிந்த் பந்தில் ஆட்டம் இழந்தார். பெங்களூரூ அணி பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளி யில் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

கிண்ணம் வென்ற பார்சிலோனா

தங்கள் குழந்தைகளோடு கொண்டாடும் பார்சிலோனா வீரர்கள். படம்: ஏஎஃப்பி

கேனிங்: ஸ்பானிய மன்னர் கிண்ணக் காற்பந்து தொடரை வென்றுள்ளது பார்சிலோனா. இறுதி ஆட்டத்தில் மோதிய செவ்வியா, பார்சிலோனா ஆகிய இரு குழுக்களுமே கோல் எதுவும் போடவில்லை. ஆனால், கூடுதல் நேரத்தின் போது இரண்டு கோல்கள் அடித்த பார்சிலோனா 28வது முறையாக இந்தக் கிண்ணத்தைக் கைப்பற்றி உள்ளது. ஆட்ட நேரத்தின்போது கோல் எதுவும் போடாதபோதும் இரு குழுக்களின் ஆட்டக்காரர்களும் தப்பாட்டம் காரணமாக வெளியேற்றப்பட்டனர். பார்சிலோனாவின் ஜாவியர் மஸ்கரானோ முதல் பாதி ஆட்டத்தின் கெவின் கமிரோவின் சட்டையைப் பிடித்ததற்காக 36வது நிமிடத்தில் நேராக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.

கபில்தேவைப் பின்னுக்குத் தள்ளினார் ஆண்டர்சன்

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 33. படம்: ராய்ட்டர்ஸ்

லீட்ஸ்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட் வீழ்த்தியோர் வரிசை யில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவைப் பின்னுக்குத் தள்ளி ஆறாமிடத்திற்கு முன்னேறியுள்ளார் இங்கி லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற் காக இலங்கை அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை லீட்ஸ் திடலில் தொடங்கியது.

கரை சேர்த்தார் கருண்

கர்நாடக மாநில வீரர் கருண் நாயர். படம்: ஏஎஃப்பி

ராய்ப்பூர்: இந்தியாவில் நடந்து வரும் ஒன்பதாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இதற்கு முன்பு இல்லாத வகையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் அரையிறுதிக்குச் செல்லும் நான்கு அணிகள் எவை என்பது நேற்று மாலை வரை உறுதிப்படுத்தப்பட வில்லை. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் டோனியைத் தலைவராகக் கொண்ட ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ், விஜய் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் தொடரைவிட்டு வெளியேறுவது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது.

படிக்காத வீரர்களால் பாகிஸ்தான் அணிக்குப் பாதிப்பு

லாகூர்: அண்மை காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமாகச் செயல்பட்டு வருவதற்கு அவ்வணி வீரர்கள் பலருக்குப் போதிய படிப்பறிவு இல்லாததும் ஒரு காரணம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷாரியர் கான் தெரிவித்துள்ளார். குவெட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போதைய வீரர்களில் டெஸ்ட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஒருவர் மட்டுமே பட்டப் படிப்பு முடித்திருப்பவர் என்று சுட்டிக் காட்டினார்.

வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் மேன்யூ

வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் மேன்யூ

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபெர்குசன் ஓய்வு பெற்றதிலிருந்து அந்தக் குழு முன்போல் விளையாடுவதில்லை, அதனிடம் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற வேட்கை இல்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல் இந்தப் பருவத்தில் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக் என அனைத்துப் போட்டிகளிலிருந்தும் வெளியேறிய மேன்யூ, இன்று கிரிஸ்டல் பேலசுடன் மோதும் எஃப்ஏ கிண் ணப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

உபர் பேட்மிண்டன் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

குன்ஷன்: உபர் கிண்ண பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. பெண்கள் அணிகளுக்கான இந்தப் போட்டியில் இந்திய அணி நேற்று முன்தினம் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முடிவில் இந்திய அணி 3-1 என தாய்லாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 12-21, 19-21 என்ற நேர்செட்டில் முன்னாள் உலக வெற்றியாளர் ராட்சானோக்கிடம் தோல்வி கண்டார்.

Pages